Thursday, October 23, 2014

பொது கல்வித்துறையோடு நலப்பள்ளிகளை இணைக்கவேண்டும்

பொது கல்வித்துறையோடு நலப்பள்ளிகளை இணைக்கவேண்டும்
( மாற்றத்தை நோக்கி மேலும் ஓரடி )


                     இந்தியா நாம் வாழ்த்துக்கொண்டிருக்கும் நாடு.இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகிவிட்டது.பழையன கழிதலும் புதியன புகுதலும் இன்று வாழ்வியல் கோட்பாடுகள் ஆகிவிட்டன.பூமியின் மூலை முடுக்கெள்ளாம் ஆராய்ந்துவிட்ட மனிதன் செவ்வாய் கிரகத்தினை நேக்கி பயணிக்க தொடங்கிவிட்டான்.கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உலகின் எந்த இடத்தினையும் எளிதில் தொடர்புகொள்ளலாம்.

Saturday, December 7, 2013

ஆசிரியரை புரட்டி எடுத்த மாணவர்கள்

வாத்தியார்கள் மாணவர்களை அடித்த காலம் போய், இப்போது மாணவர்கள் ஆசிரியர்களை அடித்து துவம்சம் செய்கிற காலமாகிவிட்டது. திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் இயங்கிவரும் கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த சம்பவம் அதற்கு உதாரணம். இங்கு ப்ளஸ் டூ படிக்கும் மாணவர்கள் இருவர், அவர்களுக்கு பாடம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர் சுப்பிரமணியத்தை வகுப்பறையில் வைத்தே புரட்டி எடுத்துள்ளனர்.

தாடை எலும்பு முறிந்து, முன்பற்கள் இரண்டு உடைந்து, காது சவ்வு கிழிந்த நிலையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த சுப்பிரமணியத்திடம் பேசியனோம், ''சேலம் மாவட்டம் ஜலகண்டபுரம்தான் எனக்கு சொந்த ஊரு. எம்.காம்., பி.எட். படிச்சிருக்கேன். கடந்த மூணு வருஷமா பல்லடத்தில் இருக்கிற இந்தப் பள்ளியில வணிகவியல் ஆசிரியரா வேலைபார்த்து வர்றேன். டிசம்பர் 2-ம் தேதி அன்னிக்கு மதியம் ப்ளஸ் டூ மாணவர்களுக்கு பாடம் நடத்திக்கிட்டு இருந்தேன். எல்லா மாணவர்களும் சரியான நேரத்துக்கு வகுப்புக்கு வந்து பாடத்தைக் கவனிச்சாங்க. அந்த ரெண்டு பேரும் லேட்டா வகுப்புக்கு வந்தாங்க. அதை நான் கண்டிச்சேன். உடனே கோபப்பட்ட ரெண்டு பேரும் அவங்க கையில் வெச்சிருந்த பரீட்சை அட்டையாலும், கைகளாலும் மாறி மாறி என் முகத்துல தாக்கினாங்க. இதில் பலத்த அடிப்பட்டு முகத்தில் ரத்தம் வழிய மயக்கம்போட்டு விழுந்திட்டேன். அப்புறமா மத்த ஆசிரியருங்கதான் என்னை ஆஸ்பத்திரிக்கு கொண்டுவந்து சேர்த்தாங்க. தாடை எலும்பு, காது சவ்வு, முன்பற்கள் எல்லாம் பலத்த அடிபட்டிருக்கு.. குருவா மதிக்க வேண்டிய ஆசிரியர்களுக்கே பாதுகாப்பு இல்லாம போச்சுங்க'' என்று கண்கள் கலங்கினார் சுப்பிரமணியம்.

கணவரின் கண்களைத் துடைத்தபடி பேசினார் அவரின் மனைவி கோகிலா. ''இவருக்கு இந்தப் பள்ளிக்கூடத்துல நல்ல பேரு. சின்சியரா பாடம் நடத்தியதால், போன வருஷம் நல்ல ரிசல்ட் கிடைச்சது. அதனால இவருக்கு புரமோஷனும்கூட கொடுத்தாங்க. அப்படிப்பட்ட நல்ல ஆசிரியருக்கு இதுதான் தண்டனையா? பள்ளிக்கூட நிர்வாகம் மாணவர்கள் மேல காட்டும் அக்கறையை, ஆசிரியர்கள் மீது துளியும் காட்டுவது இல்லை. 'நாங்க கொடுக்கிற ஃபீஸுலதானே நீ சம்பளம் வாங்குற... அப்புறம் எதுக்கு எங்களைக் கேள்வி கேட்குற?’ன்னு சொல்லி அடிசிருக்காங்க. ஆசிரியர்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழல்தான் இங்கு நிலவுது. என்னதான் தப்பு செஞ்சாலும் மாணவர்களுக்கு சப்போட்டாத்தான் பள்ளி நிர்வாகத்துல இருக்காங்க. இந்த வியாபாரத்துக்கு அவங்கதானே மூலதனம்'' என்றார் காட்டமாக.
பல்லடம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ், ''ஆசிரியர் சுப்பிரமணியத்தைத் தாக்கியது, ஆபாசமாகத் திட்டியது, கொலை மிரட்டல் விடுத்தது ஆகிய மூன்று பிரிவுகளில் சம்பந்தப்பட்ட  மாணவர்கள் இருவர் மீதும் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறோம். அவர்களை கைது செய்யவில்லை'' என்றார்.
கண்ணம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி முதல்வர் கிருஷ்ணன், ''இதுபோன்ற சம்பவம் இதுவரை எங்கள் பள்ளியில் நடந்ததே இல்லை. இது யதேச்சையாக நடந்துவிட்ட ஒன்று. ஆசிரியர்களும் மாணவர்களும் இணக்கமுடன்தான் இருந்து வருகிறார்கள். இந்த சம்பவத்துக்கு என்ன காரணம் என்று தீவிரமாக விசாரித்து வருகிறோம்'' என்றார் சுருக்கமாக.
'சென்னையில் ஆசிரியை குத்திக்கொல்லப்பட்டது, பாளையங்கோட்டையில் கல்லூரி முதல்வர் வெட்டிக் கொல்லப்பட்டது... என்று சமீப காலங் களாக  மாணவர்கள் செய்யும் வன்முறை அதிகரித்து வருகிறதே?’  என்ற நம் கேள்விக்கு, திருப்பூரைச் சேர்ந்த பிரபல எழுத்தாளர் சுப்ரபாரதிமணியன் நம்மிடம்,
''கல்வி வியாபாரமாக மாறிவிட்டது. மாணவர்கள் மதிப்பெண் பெறும் இயந்திரமாகப் பார்க்கப்படுகிறார்கள். இந்தக் கல்வி வியாபாரிகளுக்கு லாபம் மட்டும்தான் குறிக்கோள். படி, படி என்று விடுமுறை நாட்களில்கூட சிறப்பு வகுப்புக்களை நடத்தி அவர்களை பாடாய் படுத்துகிறார்கள். பெற்றோர்களும் அவர்கள் பங்குக்கு தங்கள் கனவுகளை எல்லாம் குழந்தைகள் மீது திணிக்கிறார்கள். இதன் விளைவு... குழந்தைகள் மன அழுத்தம் கொண்டவர்களாக மாறுகின்றனர். விளையாட்டு, ஓவியம், இசை போன்ற வடிகால் தருகின்ற வகுப்புக்கள் இந்த மாதிரிப் பள்ளிகளில் அறவே இல்லை. போதாக்குறைக்கு தனியார் பள்ளிகளே புதுப்புது பாடத்திட்டங்களைப் புகுத்தி கூடுதல் சுமையை மாணவர்களுக்குக் கொடுக்கின்றன. அந்த மன அழுத்தக் கோபத்தை அவன் ஆசிரியர்கள் மீது காட்டுகிறான். ஆசிரியர்களுக்கும் 'டார்க்கெட்' கொடுத்து ரிசல்ட் கொடுக்கச் சொல்லி இந்தத் தனியார் பள்ளிகள் வறுத்து எடுக்கின்றன. அவர்களும் மாணவர்களிடம் கடுமையாக நடந்துகொள்கிறார்கள். அதன் விளைவுதான் இப்படிப்பட்ட தாக்குதல்கள். சமச்சீர் கல்வி முறையை தீவிரமாக நடைமுறைப்படுத்துவது ஒன்றே இதற்கு சரியான தீர்வு'' என்றார் ஆணித்தரமாக.
எழுத்தறிவித்தவன் பகைவன் ஆவான் என்று மாற்றி வாசிக்க வேண்டிய காலம் வரும் போலும்!

ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு மொபைலில் "டிப்ஸ்"

ஆரம்ப பள்ளி ஆசிரியர்களுக்கு, ஆங்கிலத்தில் கற்பிக்கும் திறனை மேம்படுத்தி கொள்வதற்கான யுத்திகள், ஆலோசனைகள், மொபைல் போன் மூலம் வழங்கப்பட உள்ளன.


இதற்கான திட்டம் விரைவில் நடைமுறைக்கு வர உள்ளது. இத் திட்டம், பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் மேற்கு வங்க ஆரம்ப பள்ளி வாரியம் கூட்டாக இணைந்து நடத்துகிறது.

உண்மைத்தன்மை (Genuinenity) கண்டறிய அனைத்து பல்கலைக் கழகங்களின் வரைவோலை தொகை (DD AMOUNT)


1. அண்ணாமலைப் பல்கலைக் கழகம்- 600
2. அழகப்பா பல்கலைக்கழகம்- 250
3. தமிழ்நாடு பல்கலைக் கழகம்- 500
4. இந்திராகாந்தி பல்கலைக் கழகம் -100
5. தஞ்சை தமிழ் பல்கலைக் கழகம்-1000
6. பாரதியார் பல்கலைக் கழகம்- 500.
7. பாரதிதாசன் பல்கலைக் கழகம் -1000


8. சென்னைப் பல்கலைக் கழகம்- துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
9. மதுரை காமராஐர் பல்கலைக் கழகம் - 1500
10. மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகம் -500
11. சாஸ்த்ரா பல்கலைக் கழகம்- 500
12. பெரியார் பல்கலைக் கழகம்- 250
13. Tamilnau Teacher Education University -350.
14. சேலம் விநாயகா மிஷன் பல்கலைக்கழகம் - துறை ரீதியாக பணம் பெற்று வழங்கும் அலுவலர் மூலமாக அனுப்பும் போது எந்த விதமான கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை.
15. திருவள்ளுவர் பல்கலைக்கழகம்- 275.

Wednesday, December 4, 2013

Justice Nagamuthu directed the TRB to re-evaluate the answer papers in accordance with the deletion of the questions and revision of answers and publish the results accordingly-THE HINDU.


Disposing of a batch of writs, the Madras High Court Bench here has directed the Teachers Recruitment Board (TRB) to re-evaluate the papers of all the candidates who wrote the Teachers Eligibility Test (TET)
forthe post of post-graduate assistants in History and Commerce.

Justice S. Nagamuthu issued the direction after about 40 writs were filed in the court claiming that several questions, which featured in the question papers ofHistory and Commerce, were wrong.

A few petitions also disputed the correctness of a few answers published by the TRB in its final answer key.After ascertaining the claims of the petitioners with the help of experts in the subjects, Justice Nagamuthu passed an order instructing the TRB to delete three questions from the Commerce question paper on the ground that the questions were wrong, and to award marks to those questions to all the candidates. The judge further directed the TRB to revise the answers to two questions in the answer key for History and re-evaluate the papers of all the candidates based on the revised answers.At least, 37 questions in various subjects were challenged by the petitioners, but the judge upheld the validity of all the other questions and answers publishedby the TRB.Justice Nagamuthu also disposed of a batch of writs filed challenging various questions from the TET’s question paper forselection of Bachelor of Teaching(BT) assistants.The judge ordered the deletion of three questions and revision of three answers in the final answer key published by the TRB after consulting the experts.

In his order, Justice Nagamuthu directed the TRB to re-evaluate the answer papers in accordance with the deletion of the questions and revision of answers and publish the results accordingly.

மாணவரின் பிறந்த தேதியை தவறாக பதிவு செய்தால் தலைமை ஆசிரியருக்கு 3 ஆண்டுகள் சிறை?


அரசு ஊழியத்தில் உள்ள ஒவ்வொருவரும் இ.த.ச பிரிவு 21 (12 ) (ஏ ) -ன்படி பொது ஊழியர் ஆவார். எனவே, பள்ளித் தலைமை ஆசிரியர் ஒரு பொது ஊழியர் ஆவார்.ஒரு பள்ளித் தலைமை ஆசிரியருக்கு ஒரு ஆவணத்தை உருவாக்கும் பொறுப்பு தரப்பட்டு இருக்கிறது.
மாணவரின் பிறந்த தேதிதலைமை ஆசிரியரால் பதிவு செய்யப்படும் ஒரு முக்கிய ஆவணமாகும்.

பிறருக்கு தீங்கு நேரிடும் என்று தெரிந்த பின்னும் அந்த ஆவணத்தை பள்ளித்தலைமை ஆசிரியர் தவறாக உருவாக்குவது குற்றமாகும்.இந்த குற்றத்திற்கு அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியருக்கு மூன்று வருடங்கள் சிறைக்காவல் தண்டனையாக விதிக்கப் படலாம்.

Thursday, November 28, 2013


EMIS பணியில் தலைமை ஆசிரியர்களின் சிரமங்களை பற்றி The New Indian Express ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட செய்தி


EMIS பணியில் தலைமை ஆசிரியர்களின் சிரமங்களை பற்றி The New Indian Express ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட செய்தி....



பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். 
ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடும் போட்டி உறுதி : டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானது, பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும், கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் பெற்ற மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படும்.
டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண், 60க்கு கணக்கிடப்பட்டு, மொத்தத்தில், 100க்கு, தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15 மதிப்பெண், ஆசிரியர் பட்டய தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு மட்டுமே, 15 மதிப்பெண் முழுமையாக கிடைக்கும். அதேபோல், ஆசிரியர் பட்டய தேர்வில், 70 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தால் தான், 25 மதிப்பெண், முழுமையாக கிடைக்கும். இல்லையெனில், இந்த மதிப்பெண் குறையும்.

Sunday, November 24, 2013

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: தீர்வு யார் கையில்?

                   
                                         
சட்டங்கள் போட்டும், தண்டனைகளைத் தீவிரப்படுத்தியும்கூடக் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறைந்தபாடாக இல்லை. கடந்த ஓராண்டில் மட்டும் குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 38,172. அவற்றில் பாலியல் வல்லுறவுகள் மட்டும் 8 ஆயிரத்து 541 என்று தேசிய குற்றப் பதிவுப் பிரிவு தெரிவிக்கிறது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒட்டுமொத்தக் குழந்தைகளின் கேள்விக்குறியாக்கப்படுகிற எதிர்காலத்தின் குறியீடு.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (பாக்ஸோ) போன்ற மிக வலிமையான சட்டங்கள் இருந்தும், அவை குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாததால் குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை என்பது வருத்தமான உண்மை.
சட்டம் என்ன சொல்கிறது?
இருந்தால்தானே குற்றங்கள் குறித்து புகார் செய்யவோ, தண்டனை வாங்கித்தரவோ முடியும். அதனால் பாக்ஸோ சட்டம் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்வோம். 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அனைவரையும் குழந்தைகள் என்று கூறுகிறது இந்தச் சட்டம். மன வளர்ச்சி குன்றிய குழந்தை மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும் ஆசிரியர், மருத்துவர், குடும்பத்தினர் போன்ற நம்பிக்கைக்குரியவர்களின் தாக்குதலுக்கும் கூடுதல் தண்டனை உண்டு. பாலியல் துன்புறுத்தலை அறிந்து அதைப் பற்றிப் புகார் அளிக்காமல் இருப்பவருக்கும் தண்டனை உண்டு.
காவலர்களே பாதுகாவலர்
விசாரணையின்போது காவல் துறையினரைக் குழந்தையின் பாதுகாவலராகக் கருதுகிறது சட்டம். எனவே ஒரு புகார் எழுந்தவுடன் அக்குழந்தைக்கு தேவையான அடைக்கலம், மருத்துவ வசதிகளைச் செய்துதருவது காவல் துறையின் கடமை.
மருத்துவச் சோதனை குழந்தைக்கு அறிமுகமான நபரின் முன்னிலையில் நடைபெற வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் பெண் மருத்துவர்தான் சோதனை செய்ய வேண்டும்.
இந்த வழக்குகளை விசாரிக்க குழந்தைகளுக்கு ஏதுவான சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பெற்றோர் அல்லது காப்பாளரின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். குழந்தையை அடிக்கடி நீதிமன்றத்துக்கு வரவழைக்காமல் காணொளி மூலம் பேசிக்கொள்ளலாம்.
குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது. அதை அமல்படுத்துவதிலும் தீவிரம் வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் அஜீதா.
“பாக்ஸோ சட்டம் வந்த நான்கு மாதங்கள் வரை வழக்குகள் இச்சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படவில்லை. இப்போது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால் முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. கொள்கை முடிவுகளை எடுக்கிற அரசும், அதிகாரங்களைப் பிரயோகிக்கிகும் காவல் அதிகாரிகளும் உரிய அக்கறை செலுத்த வேண்டும்.
பள்ளியில் கற்றுத் தரலாம்
“10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பாடத்திட்டத்திலேயே குழந்தைகளின் உரிமை, குடும்ப வன்முறை, பெண் சமத்துவம் பற்றிய தகவல்களைச் சேர்க்கலாம்.
குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் பெரும்பாலும் நன்கு தெரிந்தவர்களால்தானே நடக்கிறது. இந்தப் புகார்களைப் பதிவு செய்வதே ஒரு சவால் இல்லையா?
பாலியல் குற்றத்துக்கு, பாதிக்கப்படும் பெண் காரணமில்லை என்ற பார்வையே நிர்பயா வழக்குக்கு பிறகுதான் வந்திருக்கிறது. ஒவ்வொருமுறை பாலியல் வன்கொடுமை நடக்கும்போதும் மக்கள் எழுச்சியுற்றுப் போராடி நியாயம் கேட்க முடியாது. சட்டத்தின் மூலமாகத்தான், சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும் என மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சட்டங்கள் நடைமுறைக்கு வரவே தாமதமாகிறது” என்கிற அஜிதா, ஊடகங்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்றார்.
“குற்றவாளிகளை விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கும் போதுதான் அச்சம், அவமானம், தவறான கட்டுப்பெட்டித் தனம் விலகும். ஒவ்வொரு நாளும் செய்தித்தாளில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிதான் எழுதப்படுகிறது. அதற்கு மாறாக, குற்றம் இழைத்தவருக்குத் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும் வழக்குகளைப் பற்றியும் எழுதப்பட வேண்டும்” என்றும் அஜிதா குறிப்பிடுகிறார்.
குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சத்திலேயே பலர் தங்கள் குழந்தைக்கு நேர்ந்த அநீதியை வெளியே சொல்வதில்லை. ஆனால் இந்தத் தயக்கமே குற்றங்களை அதிகரித்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது.
 குழந்தைகள், குற்றங்கள், குழந்தை பாதுகாப்பு, பாலியல் குற்றம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்

                                     TNTET - 2012 Hall Ticket Link

          ஆசிரியர் தேர்வு வாரியம் 2012 ஆம் ஆண்டு நடத்திய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்கள் வெற்றி பெற்றதற்கான சான்றினை பெற முதன்மை கல்வி அலுவலகம் செல்லும்போது அவசியமாக தேர்வு எழுதிய நுழைவுத்தேர்வு சீட்டினை அசல் மற்றும் நகல் கொண்டு செல்லவும்.
Click Below Link For Download TNTET - 2012 Hall Ticket.

                                         Tamil Nadu  Teacher Eligibility Test (TNTET) - 2012


பத்து விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் ஆசிரியர் தகுதிச் சான்றிதழ்

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வுகளில் வெற்றி பெற்றவர்களுக்கான ஆசிரியர் தகுதிச் சான்றிதழ் ஓரிரு வாரங்களில் விநியோகிக்கப்பட உள்ளது. இந்தச் சான்றிதழ்கள் இ-பார்கோடு உள்ளிட்ட 10 விதமான பாதுகாப்பு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.


தேர்வு எழுதியவரின் பெயர், பிறந்த தேதி, பதிவு எண், தேர்ச்சி பெற்ற தாள், விருப்பப் பாடம், மொழிப்பாடம், மதிப்பெண் உள்ளிட்ட விவரங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.

ஆசிரியர் தகுதித் தேர்வு, மறுதேர்வு ஆகிய இரண்டுத் தேர்வுகளிலும் உரிய தகுதிகளோடு வெற்றி பெற்ற 18,600 பேருக்கான சான்றிதழ்கள் அச்சிடப்பட்டுள்ளன. சட்டவிரோதமாக வேறு யாரும் இந்தச் சான்றிதழ்களை அச்சிடாதவாறு ரகசிய பாதுகாப்பு அம்சங்கள் இந்தச் சான்றிதழில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இரண்டு தேர்வுகளிலும் வெற்றி பெற்ற 18,600 பேரில் பெரும்பாலானோர் அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர் பணிக்குச் சென்றுள்ளனர். வெறும் 7 பேர் மட்டும் தங்களுக்குச் சான்றிதழே போதும் என்று ஆசிரியர் தேர்வு வாரியத்திடம் தெரிவித்துள்ளனர்.

இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை கற்பிக்க பணியில் சேரும் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சிப் பெற்றிருக்க வேண்டும்.

2010 ஆகஸ்ட் 21-க்குப் பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும் இந்தத் தேர்வை எழுதுவது கட்டாயம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்ற பிறகு 7 ஆண்டுகள் வரை இந்தச் சான்றிதழ் செல்லத்தக்கதாக இருக்கும். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் இந்தத் தேர்வை எழுதலாம்.

தமிழிலேயே விவரங்கள்: ஆசிரியர் தேர்வு தொடர்பான அனைத்து விவரங்களும் இதுவரை ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியிடப்பட்டு வந்தன. இனி அந்த விவரங்கள் அனைத்தும் தமிழில் மொழிபெயர்த்து வெளியிடப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

அதேபோல், ஒவ்வொரு ஆசிரியர் தேர்வுக்கும் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள், தகுதியான படிப்புகள் என்ன என்பன உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய ஆசிரியர் தேர்வுக் கொள்கையும் இப்போது உருவாக்கப்பட்டு வருகிறது.

தகுதியில்லாதவர்களும், வேறு படிப்புகளைப் படித்தவர்களும் ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பித்து ஏமாற்றமடைவதைத் தவிர்க்கவும், ஆசிரியர் தேர்வில் குழப்பங்களைக் களையவும் இது உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆன்-லைன் வழியில் விண்ணப்பம்: அடுத்து நடைபெற உள்ள அனைத்துவித ஆசிரியர் தேர்வுகளும் இனி ஆன்-லைன் மூலமாக நடத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஜூன் மாதத்தில் அடுத்த தேர்வு
அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஜூன் மாதம்தான் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரிய வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தேர்வு வாரியத்தை நவீனமயமாக்கும் பணிகள் விரைவில் தொடங்க உள்ளதால், அனைத்துவிதமான நியமனங்களும் இனி ஏப்ரலில்தான் தொடங்கும் என்று அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

ஏற்கெனவே நடைபெற்ற இரண்டு தகுதித் தேர்வுகளிலும் சேர்த்து 18,600 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், தகுதியான ஆசிரியர்கள் இல்லாததால் 2,210 இடைநிலை ஆசிரியர் பணியிடங்களும், 12,532 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களும் காலியாக உள்ளன. அடுத்தத் தகுதித் தேர்வுக்குப் பிறகு இந்த 17 ஆயிரத்து 700 இடங்களும் நிரப்பப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

அடுத்து நடைபெற உள்ள நியமனங்கள் என்ன?

ஆசிரியர் தேர்வு வாரியத்தில் அடுத்து நடைபெற உள்ள நியமனங்களின் விவரம்:
இடைநிலை ஆசிரியர்கள் - 2,210
பட்டதாரி ஆசிரியர்கள் - 12,532
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் - 2,600
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி
உதவிப் பேராசிரியர்கள் - 1,063
சிறப்பாசிரியர்கள் - 841

Thursday, November 14, 2013

கனவு ஆசிரியர் - பெற்றோர்களை ஈர்க்கும் காந்த ஆசிரியர் !

கனவு ஆசிரியர் - பெற்றோர்களை ஈர்க்கும் காந்த ஆசிரியர் !
ஊரிலிருந்து 20 கிலோ மீட்டர் தள்ளியிருக்கும் அந்தப் பள்ளிக்கூடத்தில் காத்துக்கிடந்து தங்கள் குழந்தைகளைக்  சேர்த்துவிட்டுச் செல்கிறார்கள். இதில் என்ன ஆச்சர்யம் என்கிறீர்களா..? நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மலையம்பாளையம் அரசு தொடக்கப் பள்ளிதான் அது. பெற்றோர்களை அந்தப் பள்ளியை நோக்கி வரவைத்திருப்பவர், அந்தப் பள்ளியின் ஆசிரியர் செந்தில்.
தமிழக அரசால் 1975-ம் ஆண்டு மலையம்பாளையம் ஆதிதிராவிடர் குழந்தைகளுக்காகத் தொடங்கப்பட்டதுதான் இந்த ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி. 17 மாணவர்களைக்கொண்டு துவங்கிய இந்தப் பள்ளிக்கு, 2000-ல் ஆசிரியராக வந்தார் செந்தில். அப்போது 43 மாணவர்கள் படித்துக்கொண்டிருந்தனர்.

கல்வி போதிப்பதில் ஆர்வமும் சமூக அக்கறையும்கொண்ட ஆசிரியர் செந்தில், பக்கத்து ஊர்களில் இருக்கும் குழந்தைகளை இந்தப் பள்ளியில் சேர்க்கச் சொல்லிக் கேட்டபோது, ஏமாற்றம்தான் மிஞ்சியது. ஆதிதிராவிடர் குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு அனுப்ப மற்றவர்கள் மறுத்துவிட, தன்னிடம் படிக்கும் 43 மாணவர்களையும் திறமைமிக்கவர்களாக உருவாக்கினார். மாலை நேரத்தில், அந்த மாணவர்களைப் பக்கத்து ஊர்களுக்கு அழைத்துச்சென்று, அவர்களின் அறிவாற்றலை வெளிக்காட்டச் செய்தார். இதைக் கவனித்தவர்கள், தங்கள் வீட்டுக் குழந்தைகளையும் அந்தப் பள்ளியில் சேர்க்க ஆரம்பித்தனர்.


இப்போது, அரசு அதிகாரிகள், வசதி படைத்தோர் எனப் பல தரப்பினரும் இங்கே தங்கள் குழந்தைகளைச் சேர்க்க முந்துகின்றனர். ஆனாலும் ஏழை மாணவர்களுக்கே முன்னுரிமை கொடுக்கப்படுகிறது. தற்போது இந்தப் பள்ளியில், பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த 185 மாணவர்கள் படிக்கின்றனர். இந்த ஆண்டு மட்டும் 80 குழந்தைகள் மெட்ரிக் பள்ளிகளில் இருந்து மாற்றல் வாங்கி இங்கே சேர்ந்திருக்கிறார்கள். ஓராசிரியர் பள்ளியாக இருந்த இந்தப் பள்ளியில், இன்று ஐந்து ஆசிரியர்களுடன் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக இரண்டு ஆசிரியர்களும் பணிபுரிகின்றனர். மேலும் வேன் வசதியும் வந்துள்ளது.

இது எப்படிச் சாத்தியமானது?

''முதலில் குழந்தைகளுடன் நெருங்கிப் பழகி, அவர்களை நண்பர்களாக ஆக்கிக்கொள்கிறோம். அவர்களை மிரட்டுவதோ, அடிப்பதோ கிடையாது.  நான்காம் வகுப்பு வரை செயல்வழிக் கற்றல் முறைப்படி எளிமையாகப் புரிந்துகொள்ளும் வகையில் வார்த்தைகளை ஒரு புத்தகமாகத் தயாரித்துக் கொடுக்கிறோம். படங்களைப் பார்த்து அவர்களாகவே புரிந்துகொள்ளத் தேடல் ஆர்வத்தை ஏற்படுத்துகிறோம். ஆங்கில இலக்கணத்தை  புரியும்படிச் சொல்லிக்கொடுக்கிறோம். பெற்றோர்களிடம் தினமும்  குழந்தைகளைப் பற்றிப் பேசுகிறோம். நம்மால் முடிந்ததைச் சரியாகச் செய்தால்தான் பெரிய விஷயத்தையும் சாதிக்க முடியும் என்பதைப் புரிந்துகொள்ளச் செய்ததால், ஒவ்வோர் ஆண்டும் மாவட்டத்தில் சிறந்த மாணவர்களாக எங்கள் பள்ளி மாணவர்களே திகழ்கின்றனர்'' என்றார் செந்தில்.


அரசுப் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளைச் சேர்க்க பலர் தயங்கும் இந்தச் சூழலில், மலையம்பாளையம் அரசுப் பள்ளியில் சேர முண்டியடிக்க வைத்த ஆசிரியர் செந்தில், நிச்சயம் ஒரு கனவு ஆசிரியரே!


-  வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்
* சுட்டி விகடன் இதழில் இருந்து.

Wednesday, June 12, 2013

மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு



சென்னை: இந்த 2013ம் ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நாமக்கல் பள்ளி மாணவர் அபினேஷ் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், பல் மருத்துவ சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர, மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி எப்போதுமே இருக்கும். அந்த வகையில், இந்தாண்டு அப்படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் எப்போது வெளிவரும் என்று மாணவரும் பெற்றோரும் காத்திருந்தனர்.
ஏற்கனவே அறிவித்தபடி, ஜுன் 12ம் தேதியான இன்று, மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலை, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீரமணி வெளியிட்டார்.
நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அபினேஷ் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
முதல் மாணவனையும் சேர்த்து, மொத்தம் 7 மாணவர்கள் 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் 199.75 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொத்தம் 33 மாணவர்கள் 199.50 கட்-ஆப் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட் விபரங்களை தெளிவாக அறிந்துகொள்ள http://www.tnhealth.org/notification/June2013/merit%20list13.pdf என்ற வலைதளம் செல்க. கவுன்சிலிங் 18ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், தனது இணையதளத்தில் பொறியியல் கவுன்சிலிங் விபரங்களை விரிவாக அறிந்துகொள்ள TNEA 2013 என்ற பெயரில் ஒரு தனி இணைப்பை கொடுத்துள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதேபோல், www.tnhealth.org என்ற இணையதளத்திலும் ஒரு தனி இணைப்பை தர வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
அரசுப் பள்ளி சாதனை மாணவர்கள் தனியார் பள்ளிகளில் சேர அரசு நிதியுதவி




திருவாரூர், ஜூன் 11 -திருவாரூர் மாவட்டத்தி லுள்ள அரசுப் பள்ளிகளில் படித்து பத்தாம் வகுப்பு அரசுப் பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற பிற்படுத்தப்பட்ட வகுப்பை சார்ந்த 3 மாண வர்கள், 3 மாணவிகள் மற் றும் மிகப் பிற்படுத்தப் பட்ட, சீர்மரபினர் வகுப் பைச் சார்ந்த 2 மாணவர் கள், 2 மாணவியர் என மொத்தம் 10 மாணவ - மாணவியர், அவர்கள் விரும்புகிற- தமிழகத்தில் உள்ள சிறந்த தனியார் மேல்நிலைப்பள்ளிகளில் சேர்ந்து மேல்நிலைக்கல்வி பெற அரசால் நிதியுதவி வழங்கப்படுகிறது.இத்திட்டத்தில் உதவி பெறும் மாணவ, மாணவிய ரின் பெற்றோரது ஆண்டு வருமானம் 1 லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ஒரு மாணவருக்கு உயர்ந்தபட்சமாக ஆண் டிற்கு 28 ஆயிரம் ரூபாய்க்கு மிகாமல் இரண்டாண்டுக ளுக்கு ரூ. 56 ஆயிரம் வழங் கப்படுகிறது.தகுதியுடைய மாணவ, மாணவியர் மாவட்ட ஆட் சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட் டோர் மற்றும் சிறுபான் மையினர் நல அலுவலரை தொடர்பு கொண்டு உரிய காலத்தில் விண்ணப்பித்து பயன்பெறுமாறு திருவா ரூர் மாவட்ட ஆட்சித்தலை வர் சி.நடராசன் கேட்டுக் கொண்டுள்ளார்.