Monday, April 22, 2013



"மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க": அரசு பள்ளியின் அழைப்புதிருப்புவனம்: ஆங்கில வழி கல்வி துவக்கத்தை அறிவிக்கும் பொருட்டு, திருப்புவனம் அருகே, அரசு பள்ளியில், கனிவான அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ் வழிக் கல்வியில் சேர்ப்பதை விட, ஆங்கில வழியில் தனியார் பள்ளிகளில் சேர்க்கும் மோகம், கிராமத்தினரையும் விட்டு வைக்கவில்லை. இதனால், கிராமத்து அரசு பள்ளிகளில், மாணவர் சேர்க்கை குறைந்து, ஆட்டம் காணும் நிலையில் உள்ளது.
சேர்க்கை குறைவை தடுக்கவும், வரும் கல்வி ஆண்டு முதல், ஆங்கில வழிக்கல்வி துவக்கத்தை உணர்த்தும் வகையிலும், சிவகங்கை திருப்புவனம் புதூர் அரசு நடுநிலைப் பள்ளியில், அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
இதில், "மாத்தி யோசிங்க, விரைவில் சேருங்க; கல்வி தொடர்பான அனைத்தும் இலவசம்" என, விளம்பரப்படுத்தி உள்ளனர்.

தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம்சென்னை: "தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்கத்துக்கு தனி மையம் உருவாக்கப்படும். அதற்காக, 50 லட்சம் ரூபாய் ஒதுக்கப்படுகிறது" என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை, மானிய கோரிக்கையில், கூறப்பட்டுள்ளதாவது: தமிழ் கம்ப்யூட்டர் சாப்ட்வேர் உருவாக்க தேவையான கம்ப்யூட்டர், சாப்ட்வேர், கருவிகள் மற்றும் சேவைகளை உள்ளடக்கிய, சாப்ட்வேர் உருவாக்கும் மையம், தமிழ் இணைய கல்வி கழகத்தில் நிறுவப்படும்.
ஆக்கப்பூர்வ எண்ணங்களைக் கொண்டிருப்போர், ஆய்வுகளையும், பரிசோதனைகளையும், இம்மையத்தில் மேற்கொள்ளலாம். இதற்காக, தமிழ் இணைய கல்வி கழகத்துக்கு, 50 லட்சம் ரூபாய் அளிக்கப்படுகிறது.
மத்திய அரசு ஒப்புதல்: அரசின் சேவைகளை, மின் ஆளுமைத் திட்டம் மூலம் வழங்க, மத்திய அரசு, மின் மாவட்டத் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. வருவாய், சமூக நலம், பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், ஆதிதிராவிட நலத் துறைகளில், சேவைகள், மின் ஆளுமைத் திட்டம் மூலம் அளிக்கப்படுகிறது.
அரியலூர், பெரம்பலூர், கோவை, திருவாரூர், கிருஷ்ணகிரி, நீலகிரி மாவட்டங்களில், முதல்கட்டமாக, இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டது. பிற மாவட்டங்களிலும், இத்திட்டத்தை விரிவுபடுத்த அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
சேவை தொகுப்பு: பல அரசு துறைகள், இணையதளம் மூலம் சேவைகளை வழங்கி வருகின்றன. இணைய தள முகவரிகளை நினைவு வைத்துக் கொள்வதில், பொதுமக்கள் சிரமப்படுகின்றனர். இதனால், அரசின் சேவை தொகுப்பை, இணைய தளத்தில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது. சேவை தொகுப்பை உருவாக்க, தனி நிறுவனம் தேர்வு செய்யப்பட்டு, அதற்கான சாப்ட்வேரும் தயாரிக்கப்பட்டு வருகிறது.
ஒரே தொலைபேசி எண்: அரசின் சேவைகளை பெறும் வகையில், பொதுமக்கள் தொடர்பு மையத்தை, சென்னையில் அமைக்க, மத்திய அரசின் அனுமதி கோரப்பட்டுள்ளது. இந்த மையத்தின் தொலைபேசி எண், நாடுமுழுமைக்கும் ஒரே எண்ணாக இருக்கும். மையத்தை, முதல் மூன்றாண்டுகள் பராமரிக்க, மத்திய அரசு நிதி அளிக்கும். அதன்பின், மாநில அரசு பராமரிக்கும். இவ்வாறு, மானிய கோரிக்கையில் கூறப்பட்டுள்ளது.

IAS - முதன்மைத் தேர்வு மாற்றம் வாபஸ்!

சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் அறிவிக்கப்பட்ட மாற்றங்கள் தற்போது திரும்பப் பெறப்பட்டுள்ளன. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் கொண்டு வந்த மாற்றங்களுக்கு நாடு முழுவதும் பலத்த எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து,அந்தமாற்றங்கள் தற்போதுவாபஸ் பெறப்பட்டுள்ளன. அதன்படி, இனிமேல் நடைபெற இருக்கும் மெயின் எனப்படும் முதன்மைத் தேர்வுகள் எப்படி இருக்கும் என்ற விவரங்களை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) வெளியிட்டுள்ளது. சிவில் சர்வீஸ் முதன்மைத் தேர்வில் முன்பு இருந்ததுபோல, அரசியலமைப்புச் சட்டத்தின் எட்டாவது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ள ஏதாவது பிராந்திய மொழியிலோ அல்லது ஆங்கிலத்திலோ எழுத்துத் தேர்வை எழுதலாம். அதாவது, முன்புபோல தமிழிலும் எழுதலாம். பிராந்திய மொழிகளில் எழுத வேண்டுமானால்,குறைந்தது 25 பேராவது இருக்க வேண்டும் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. பிராந்திய மொழியில் தேர்வு எழுத விரும்புபவர்கள், பட்டப்படிப்பு நிலையில் அந்த மீடியத்தில் படித்துத் தேர்வு எழுதியிருக்க வேண்டும் என்ற நிபந்தனையும் நீக்கப்பட்டுள்ளது.அத்துடன், இலக்கியத்தில் பட்டப் படிப்பு படித்திருந்தால்தான்இலக்கியத்தை விருப்பப் பாடமாக (அதாவது அரசியலமைப்புச் சட்டத்தில் 8-ஆவது பிரிவில் கூறப்பட்டுள்ள 22 மொழிகள் மற்றும் ஆங்கிலம்) எடுக்க அனுமதிக்கப்படுவர் என்ற நிபந்தனை நீக்கப்பட்டுள்ளது. அதாவது, தமிழ் இலக்கியத்தில் பட்டப் படிப்பு படிக்காதவர்கள் கூட, தமிழ் இலக்கியத்தை ஒரு பாடமாக எடுத்துக்கொள்ள முடியும்.கட்டுரைக்கான ஆங்கிலப் பாடத்தாளுக்கு நூறு மதிப்பெண்கள் வழங்கப்படும் என்று ஏற்கெனவே வெளியிடப்பட்ட அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அதாவது, நவீன இந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலப் பாடத்தில் தலா 300 மதிப்பெண்களுக்கான தேர்வுகளில் தகுதி பெற வேண்டும். இந்த இரண்டு தாள்களும் தகுதித் தேர்வாக மட்டுமே கருதப்படும். இத்தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்கள், மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்களின் கணக்கில் சேர்க்கப்படுவதில்லை.கட்டுரைத்தாளுக்கு 250 மதிப்பெண்கள் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தக் கட்டுரைத் தாளை, எந்த மொழியிலும் எழுதலாம். ஜெனரஸ் ஸ்டடீஸ் என்ற பொது அறிவுப் பாடப் பிரிவில் நான்கு தாள்கள் இருக்கும். ஒவ்வொரு தாளுக்கும் 250 மதிப்பெண்கள் வழங்கப்படும். அத்துடன் விருப்பப் பாடத்தில் இரண்டு தாள்கள். அவற்றுக்கு தலா 250மதிப்பெண்கள்.நடைபெற இருக்கும் இந்த ஆண்டு மெயின் தேர்வில் தலா 300 மதிப்பெண்கள் கொண்ட 2 தகுதித் தாள்கள், தலா 250 மதிப்பெண்கள் கொண்ட 4 கட்டாயப் பொதுத்தாள்கள், தலா 250 மதிப்பெண்கள் கொண்ட 2 தாள்கள் விருப்பப் பாடத்தில் இருக்கும். எனவே, மெயின் தேர்வுக்கான மொத்த மதிப்பெண்கள் 1,750 ஆகும். எழுத்துத் தேர்வில் தகுதி பெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். நேர்முகத் தேர்வுக்கு275 மதிப்பெண்கள் வழங்கப்படும். அதாவது, மெயின் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வுகளில் மொத்தம் 2,025 மதிப்பெண்களுக்கு பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் சிவில் சர்வீஸ் ரேங்க் பட்டியல் தயாரிக்கப்படும்.

SSA - 2012 -2013 கல்வியாண்டில் பள்ளிமானியம்,பள்ளி பராமரிப்பு ஆகியவற்றிற்கான பயன்பாட்டுச்சான்றிதழ் வழங்க SSA இயக்குனர் உத்தரவு.

CLICK HERE DOWNLOAD TO SSA இயக்குனர் செயல்முறைகள்

அனைவருக்கும் கல்வி இயக்கம் - பள்ளி செல்லா குழந்தைகளுக்கான ஆய்வுக் கூட்ட (16.04.2013) குறிப்புகள்

click here to download the SSA proceeding of OoSC Review Meeting Minutes

சிதிலமடைந்த கோளரங்க இருக்கைகள்; கண்டு கொள்ளுமா கல்வித்துறை?

சிதிலமடைந்த கோளரங்க இருக்கைகள்; கண்டு கொள்ளுமா கல்வித்துறை?


திருச்சி: கோளரங்கத்தில் விண்வெளி குறித்து அறிந்துகொள்ளும் விண் அரங்கத்தில் இருக்கைகள் கிழிந்தும், உடைந்தும் உள்ளதால், மாணவர்கள் அமர்ந்து கண்டு களிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.திருச்சி விமான நிலையம் செல்லும் வழியில், தமிழக அரசின் உயர்கல்வித்துறை கட்டுப்பாட்டில் இயங்கும் அண்ணா அறவியல் கோளரங்கம் அமைந்துள்ளது. இந்த கோளரங்கில், விண்வெளியில் உள்ள கோளரங்கம் குறித்து சிறுவர், சிறுமியர், மாணவர்கள், பொதுமக்கள் அறிந்து கொள்வதற்காக, "விண் அரங்கம்" என்ற சிறிய அளவிலான குளிரூட்டப்பட்ட (ஏசி) அறை உள்ளது. 60க்கும் மேற்பட்டோர் அமரும் வகையில் இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பகலில் ஓர் இரவு என்ற அடிப்படையில், இந்த விண் அரங்கம் அமைக்கப்பட்டுள்ளது. அரங்கத்துக்குள் அமர்ந்து வானத்தை பார்ப்பதுபோல, அன்னாந்து பார்த்தால், வானில் உள்ள நட்சத்திரக் கூட்டங்கள், கோள்கள் போன்றவை ஒளி மூலம் தெரியும்.
தொடர்ந்து, 25 நிமிடங்கள் விண்வெளி குறித்த காட்சி ஓடும். அடிப்படை வானியல் குறித்து விளக்கப்படும். சிறியவர்களுக்கு, 6, பெரியவர்களுக்கு, 12 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதுதவிர, சிறிய "3டி" (முப்பரிமானம்) தியேட்டர் உள்ளது. இதில், டைனோசர், ஆழ்கடல், மேஜிக், விண்வெளி, வொன்டர் லேன்ட், அனிமல் கிங்டம் ஆகிய படங்கள் ஒளிபரப்பப்படும். 10 ரூபாய் கட்டணம்.
விண்அரங்கத்துக்கு வரும் சிறுவர்கள், பார்வையாளர்கள், இருக்கைகளை உடைத்தும், கிழித்தும் சேதப்படுத்தி உள்ளனர். பல நாட்களாக இதை சரி செய்ய கோரி, கோளரங்க பணியாளர்கள் கூறியும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதுகுறித்து கோளரங்க திட்ட இயக்குனர் அய்யம்பெருமாள் கூறுகையில், "கடந்த ஃபிப்ரவரி, மார்ச் மாதத்தில் அதிகளவு பார்வையாளர் வந்துள்ளனர். சிறுவர்கள் இருக்கைகளை கிழித்து விடுகின்றனர். கடந்த இரண்டு வாரத்தில், 10 ஆயிரம் பேர் வந்துள்ளனர். தற்போது விடுமுறை வர உள்ளதால், பார்வையாளர் அதிகளவு வருவர். ஜூன் மாதம் பள்ளிகள் திறந்ததும், ஓரளவு கூட்டம் குறைவாக இருக்கும். அப்போது அவை சரி செய்யப்படும்," என்றார்.
"விண் அரங்கை" சரி செய்ய, உயர் கல்வித்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.