Saturday, April 27, 2013




பிளஸ் 2 தேர்வு முடிவுகள்2013



பிளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 9ம் தேதியும், பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் மே 31ல் வெளியீடு : அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தகவல் தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வருகிற மே 9ந் தேதி வெளியிடப்படும் என அரசு தேர்வுகள் துறை இயக்குனர் தகவல் தெரிவித்துள்ளார். மேலும் பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் வருகிற மே 31ந் தேதி வெளியாகும் என்றும் இயக்குனர் வசுந்தரா தேவி தெரிவித்துள்ளார்.








டி.இ.டி., தேர்வு அறிவிப்பு: மாத இறுதிக்குள் வெளியீடு

"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இம்மாத இறுதிக்குள் வெளியாகும்' என, துறை வட்டாரங்கள், நேற்று தெரிவித்தன.
பள்ளி கல்வித்துறையில், 20 ஆயிரம் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக
இருப்பது குறித்தும், இந்த இடங்களை பூர்த்தி செய்ய, இன்னும், டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு வெளி வராதது குறித்தும், "தினமலர்' நாளிதழில், நேற்று முன்தினம் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், டி.ஆர்.பி., அதிகாரிகள், நேற்று ஆலோசனை நடத்தினர். ஆசிரியர் காலி இடங்கள் எண்ணிக்கை மற்றும் எப்போது தேர்வு நடத்தலாம் என்பது உள்ளிட்ட, பல்வேறு அம்சங்கள் குறித்து, கல்வித்துறை அதிகாரிகளுடன், ஆலோசனை நடத்தியதாக கூறப்படுகிறது. இது குறித்து, டி.ஆர்.பி., வட்டாரங்கள் கூறுகையில்,"டி.இ.டி., தேர்வு குறித்த அறிவிப்பு, இன்னும், 10 நாட்களுக்குள் வெளிவரும்' என, தெரிவித்தன. அறிவிப்பு வெளியானதும், ஒன்றரை மாத இடைவெளிக்குப்பின், தேர்வு நடக்கும் என, தெரிகிறது. எனவே, ஜூன் இறுதியில், தேர்வு நடக்கலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது. "அப்ஜக்டிவ்' முறையிலான விடைகள் என்பதால், மதிப்பீடு செய்யும் பணி அனைத்தும், கம்ப்யூட்டர் மூலமாகவே நடக்கின்றன. எனவே, தேர்வு முடிவை, விரைவாக வெளியிட்டு, ஜூலை இறுதிக்குள், புதிய ஆசிரியர்களை பணி நியமனம் செய்யும் வகையில், அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என, கூறப்படுகிறது.

நெட், செட் தேர்வுகளின் தகுதி மதிப்பெண்கள் - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு


                                                         
மதுரை: பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் நியமனத்திற்கான "நெட்" தேர்வில், யு.ஜி.சி.,முதலில் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவித்து, சான்றிதழ்களை வழங்க வேண்டும் என மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டது.
திருச்சி சரஸ்வதி, மதுரை இவாஞ்சலின், அலங்காநல்லூர் ராஜலட்சுமி உட்பட சிலர் தாக்கல் செய்த 31 மனுக்கள்: பல்கலை, கல்லூரிகளில் உதவி பேராசிரியர்களை நியமனத்திற்கு தேசிய தகுதித்தேர்வு(நெட்) நடத்த, பல்கலை மானியக்குழு(யு.ஜி.சி.,) 2012 ஜூன் 4 ல் அறிவிப்பு வெளியிட்டது. அதிகபட்சமாக முதல் இரண்டு தாள்களில் தலா 100 மதிப்பெண், மூன்றாவது தாளில் 150 மதிப்பெண் பெற வேண்டும் நிர்ணயித்திருந்தனர்.
தேர்ச்சிபெற குறைந்தபட்சம் பொதுப்பிரிவினர் முதல் இரண்டு தாள்களில் தலா 40 சதவீதம், மூன்றாவது தாளில் 50 சதவீதம்; இதர பிற்பட்டோர் (கிரிமீலேயர் அல்லாதவர்கள்) முதல் இரண்டு தாள்களில் தலா 35 , மூன்றாம் தாளில் 45 சதவீதம்; ஆதிதிராவிடர், பழங்குடியினர் முதல் இரண்டு தாள்களில் தலா 35, மூன்றாம் தாளில் 40 சதவீதம் மதிப்பெண் பெற வேண்டும் என முதலில் யு.ஜி.சி.,உத்தரவிட்டது.
இதனடிப்படையில் கோவை பாரதியார் பல்கலை, 2012 ஆக.,10 ல் மாநில தகுதித் தேர்வு(செட்) அறிவிப்பு வெளியிட்டது. தேர்வு முடிவு 2013 பிப்.,9 வெளியானது. "நெட்" தேர்வு முடிவு யு.ஜி.சி., இணையதளத்தில் 2012 செப்டம்பரில் வெளியானது. தேர்வு முடிவுகள் வெளியாவதற்கு முன் நெட், செட் அனைத்து தாள்களிலும் பொதுப்பிரிவினர் 65 சதவீதம், இதர பிற்பட்டோர் 60 சதவீதம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் 55 சதவீதம் மதிப்பெண் பெற்றிருந்தால் மட்டுமே தேர்ச்சி பெற்றதாக கருத முடியும் யு.ஜி.சி., அறிவிப்பு வெளியிட்டது.
இது சட்டவிரோதம். தேர்வு முடிவுகள் வெளிவருவதற்கு முன், தேர்ச்சிக்கான குறைந்தபட்ச மதிப்பெண் சதவீதத்தை மாற்றியமைத்துள்ளனர். தேர்வு அறிவிப்பின் போதே தெரிவித்திருக்க வேண்டும். முதலில் அறிவித்தபடி, எங்களை தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு குறிப்பிட்டனர்.
நீதிபதி டி.அரிபரந்தாமன் முன்னிலையில், மனுக்கள் விசாரணைக்கு வந்தன. யு.ஜி.சி.,வக்கீல், "இதுபோன்ற வழக்குகள், கேரளா ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. அங்கு இறுதி தீர்ப்பு வரும்வரை, இங்கு உத்தரவை ஒத்திவைக்க வேண்டும்,&'&' என்றார்.
நீதிபதி: கேரளா ஐகோர்ட் உத்தரவிற்காக காத்திருக்க முடியாது. சென்னை ஐகோர்ட் முதன்மை பெஞ்ச், இதுபோன்ற மனுக்களை அனுமதித்துள்ளது. யு.ஜி.சி.,முதலில் 2012 ஜூன் 4 மற்றும் பாரதியார் பல்கலை 2012 ஆக.,10ல் அறிவித்தபடி குறைந்தபட்ச மதிப்பெண் பெற்றவர்களை தேர்ச்சியடைந்தவர்களாக அறிவிக்க வேண்டும். அவர்களுக்கு யு.ஜி.சி.,மற்றும் பாரதியார் பல்கலை 30 நாட்களுக்குள் சான்றிதழ்களை வழங்க வேண்டும். மனுக்கள் முடிக்கப்படுகிறது, என உத்தரவிட்டார்.

எங்கும் தொல்லை, எதிலும் தொல்லை... ஓர் அரசுப் பள்ளியின் அவலம்

பேரூர்: 
பகலில் "பார் பார் பட்டம் பார்&' என, மாணவர்களுக்கு கற்பிக்க பயன்படும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, இரவில் சமூக விரோதிகள் மது அருந்தும் "சூப்பர் பார்" ஆக பயன்படுத்தப்படுகிறது.
தொண்டாமுத்தூர் ஒன்றியம் பச்சாபாளையம் கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இங்கு சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். சிறுவாணி மெயின்ரோடு, பச்சாபாளையம் பிரிவிலிருந்து 1 கி.மீ தொலைவில், ரோட்டோரத்தில் இப்பள்ளி அமைந்துள்ளது. இரவு நேரங்களில், இப்பள்ளி கட்டடத்தின் மதில் சுவர் ஏறி குதித்து உள்ளே நுழையும் சமூகவிரோதிகள் மதுஅருந்துவது, சீட்டாடுவது உள்ளிட்ட சமூகவிரோத காரியங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
போலீசார் ரோந்து வரும்போது, பள்ளியின் தெற்கு பகுதி வழியே உள்ள பள்ளத்தில் குதித்து அங்கிருந்து தப்பியோடி விடுகின்றனர். இதுதவிர, பள்ளி எதிரே சரியான பராமரிப்பற்ற நிலையிலுள்ள பொதுகழிப்பிடம் மற்றும் குப்பை குவியல்களால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. மேலும், பள்ளி எதிரே குவியும் குப்பைகளுக்கு தீ வைக்கப்படுவதால் எழும் புகையால், மாணவர்களும் அவ்வழியே செல்வோரும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.
வாரநாட்கள் விடுமுறை முடிந்து, திங்கட்கிழமை வரும்போது, பள்ளி மைதானம், சாக்கடை வடிகால் பகுதிகளின் ஓரங்களில் மதுபாட்டில்கள் சிதறி கிடக்கிறது. என்ன செய்வதென தெரியாமல் பள்ளி நிர்வாகத்தினர் கடும் அதிருப்தியில் உள்ளனர். பாடம் படிக்கும் பள்ளிக்குள் சட்டவிரோத செயல்கள் நடப்பதை தடுக்க, போலீசார் ரோந்து பணிகளை தீவிரப்படுத்த வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.