Tuesday, May 14, 2013


TRB Instruction Regarding Employment Seniority


மாறுதல், பதவியுயர்வு கலந்தாய்வு 2013 - ஓர் முன்னோட்டப் பார்வை

பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக் கல்வித்துறை பொது மாறுதலுக்கான அரசாணை வழக்கம் போல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இவ்வரசாணையைக் கொண்டு இயக்குநர்கள் வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தளித்துள்ளனர்.

1. மாறுதல் விண்ணப்ப மாதிரி வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்வு முறை என்பதால் ஆசிரியர் மாறுதல் கோரும் பள்ளியை விண்ணப்பத்தில் குறிப்பிடக் கூடாது என்று அரசாணை (பத்தி-8) திடமாகக் குறிப்பிடுகிறது. ஆனால் விண்ணப்ப மாதிரியில் ஆசிரியர் மாறுதல் பெற விரும்பும் பள்ளிகளை விருப்ப வரிசைப்படி அதிகபட்சம் (மூன்று பள்ளிகள்) குறிப்பிடுமாறு வடிவமைக்கப்பட்டுள்ளது.

2. கணவர்/மனைவி பணியில் உள்ளதைச் சிறப்பு முன்னுரிமையாகக் கோருவோர்க்குக் கணவர்/மனைவி பணிபுரியும் மாவட்டத்திற்கு மட்டுமே இம்முன்னுரிமை பரிசீலிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இருவரும் தனித்தனியே தொலைவில் பணிபுரியும் ஆசிரியத் தம்பதியினர் அருகருகே பணிபுரியலாம் என்ற குடும்பநலன் கருதி இச்சலுகையை அரசு வழங்குகிறது. ஆனால் ஒருவர் விழுப்புரத்திலும் மற்றொருவர் நாகப்பட்டினத்திலும் பணிபுரியும் பட்சத்தில் விழுப்புரத்தில் பணிபுரிபவர் நாகப்பட்டினத்தில் காலிப்பணியிடம் இல்லையெனில் இச்சலுகையைப் பயன்படுத்தி அருகிலுள்ள திருநெல்வேலிக்கோ கன்னியாகுமரிக்கோ மாறுதல் கோர முடியாது. அரசு இதனைக் கருணையோடு மறுபரிசீலனை செய்ய வேண்டும்.

3. பதவி உயர்வு மூலம் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பும் உத்தேசம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதால் தற்போதைய முதல் சுற்றுக் கலந்தாய்வில் காலியாகும் இடங்களுக்கு (மலைப்பாங்கான / தொலைதூரத்தில் உள்ள /ஆசிரியர்கள் சென்றுவரச் சிரமம் மிகுந்த இடமாக இருந்தாலும்) மூத்த ஆசிரியர்களும் நீதிமன்றத் தீர்ப்பு வெளியான பின்பு நடைபெறும் இரண்டாம் சுற்றுக் கலந்தாய்வில் காலியாகும் இடங்கள் (போக்குவரத்து வசதி நிறைந்த நகர்ப்புறப் பள்ளியானாலும்) இளைய ஆசிரியர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது.

4. உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கான மாறுதலில் தொடங்கி இடைநிலை ஆசிரியர்களுக்கான மாவட்ட மாறுதல் வரை முறையான வரிசையில் கலந்தாய்வு நடப்பதால் இக்கல்வியாண்டின் இடையில் தலைமையாசிரியரோ பிறவகை ஆசிரியர்களோ பதவியிறக்கம் செய்யப்படுவதற்கோ திடீரெனப் பதவியுயர்வு பெறுவதற்கோ சாத்தியக்கூறுகள் இல்லை எனலாம்.

5. நடுநிலைப் பள்ளிப் பட்டதாரி ஆசிரியர்கள் உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளுக்கு அலகு மாறுதல் கோரலாம் என்பது போல் விண்ணப்பத்தில் வினாப்பட்டி உள்ளது. ஆனால் அரசாணையிலோ வழிகாட்டு நெறிமுறைகளிலோ இதுபற்றி ஏதும் குறிப்பிடவில்லை. நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களின் நீண்டகாலக் கோரிக்கையான இதனை அரசு செவிமடுத்துப் பரிசீலிக்க வேண்டும்.

6. உயர்நிலைப் பள்ளிகளாகத் தரம் உயர்த்தப்படும் அரசாணையையும் வெளியிட்டு, சார்ந்த நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களையும் கலந்தாய்வுக்கு வரவழைத்து அவர்களின் விருப்புரிமையின்படி (தாய்த்துறை/ அயற்துறை) உத்தரவுகளை வழங்கிய பின் பிற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வினை நடத்தினால் பின்னர் ஏற்படவிருக்கும் குழப்பங்கள் இப்போதே தவிர்க்கப்படலாம்.

7. மாறுதல் முன்னுரிமைப் பட்டியல் (Priority List) சில ஒன்றியங்களில் முன்கூட்டியே தயாரிக்காமல் கலந்தாய்வுக் கூடத்தில் கலந்து கொள்ளும் ஆசிரியர்களைப் பொறுத்து அவ்வப்போது அவசர அவசரமாகத் தயாரிப்பதால் கலந்தாய்வில் காலதாமதமும் குழப்பங்களும் ஏற்படுகின்றன. இது போலவே குறிப்பிட்ட ஒன்றியத்திற்கு / மாவட்டத்திற்கு மாறுதல் கோரும் ஆசிரியர்களின் மாறுதல் முன்னுரிமைப் பட்டியலையும் காலிப்பணியிடங்களின் பட்டியலையும் கலந்தாய்வுக்கு முன் வெளியிட்டால் மாறுதல் கோருவோர் தாங்கள் விரும்பும் இடம் கிடைக்குமா என்பதைத் தோராயமாகத் தெரிந்து கொண்டு மாற்று ஏற்பாடுகளைச் செய்ய வசதியாக இருக்கும். மதிப்புமிகு இயக்குநர் அவர்கள் இதற்கு ஆவன செய்ய வேண்டும்.

8. கலந்தாய்வில் யாருக்கு முன்னுரிமை உண்டு என்ற கருத்து வேறுபாடுகளால் தான் பெரும்பான்மையான கலந்தாய்வுக் கூடங்களில் கூச்சலும் குழப்பமும் ஏற்படுகின்றன. "Aவும் Bயும் ஓரே நாளில் பணியில் சேர்ந்தவர்கள். மொத்தப் பணிக்காலமும் பணியிட முன்னுரிமையும் (Station Seniority) இருவருக்கும் சமம். A பிறந்த தேதியின் படி மூத்தவர், B தன் கணவர்/மனைவி பணியில் உள்ள சான்றிதழைக் கொண்டுள்ளார். இவர்கள் இருவரும் ஒரே இடத்திற்காகப் போட்டியிட்டால் யாருக்கு வழங்குவது?" என்பன போன்ற சந்தேகங்களைத் தெளிவிக்கும் வகையில் வழிகாட்டு நெறிமுறை விதிகள் மாநிலம் முழுதும் சீராக வழங்கப்பட வேண்டும்.

9. கைக்குழந்தையுடன் இருப்பவர்கள், கர்ப்பிணிகள், போக்குவரத்து வன்முறைகள் காரணமாக வெளிமாவட்டத்திலிருந்து வரச் சிரமப்படுபவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்காக ஆன்லைன் முறையைத் தொடக்கக் கல்வித் துறையிலும் அறிவித்து அதுவும் எந்த மாவட்டத் தலைநகரில் வேண்டுமானாலும் கலந்து கொள்ள ஆவன செய்யப்பட வேண்டும்.

10. நடுநிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவியிலிருந்து உதவித் தெடக்கக் கல்வி அலுவலர் பதவிக்கு மாறுதல் பெறத் தகுதி வாய்ந்த தேர்ந்தோர் பட்டியல் 1.1.2013ன் படி வெளியிட்டு அதனைக கொண்டு கலந்தாய்வினைத் தொடங்கினால் கல்வியாண்டின் இடையில் ஏற்படவிருக்கும் மாற்றங்கள் தவிர்க்கப்படும்.

பள்ளிக்கல்வி - ஆசிரியர் பொது மாறுதல் - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிந்து வரும் ஆசிரியர்கள் / தலைமை ஆசிரியர்களுக்கு 2013-2014ம் கல்வியாண்டில் பொது மாறுதல் விண்ணப்பங்கள் பெறுதல் சார்பான அறிவுரைகள்


ரஷ்யாவில் தமிழைக் கௌரவித்த ரஷ்ய அதிபர் மாளிகை!

Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை) தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், Great Kremlin Palace, Moscow, Russia- தமிழில் "கிரெம்ளின் மாளிகை"(ரஷ்ய அதிபர் மாளிகை)
தமிழன் தமிழில் எழுதினாலோ பேசினாலோ அவமானமாகப் பார்க்கும் நிலை இன்றுள்ள தமிழர்களிடையே பரவியுள்ளது. நம் மொழியை நாம் பேசவே தயங்குகிறோம் அந்த அளவுக்குப் போய்விட்டது நம் மொழி. ஆனால், தமிழுக்குத் தொடர்பே இல்லாத ரஷிய நாடு தமிழைக் கௌரவிக்கிறது, கொண்டாடுகிறது. அங்கிருக்கும் ரஷிய அதிபர் மாளிகையான கிரெம்ளின் மாளிகையின் பெயரை அவர்கள் அழகுத் தமிழில் எழுதியுள்ளார்கள். முதலாவதாக அவர்கள் தாய்மொழியான ரஷிய மொழியிலும், இரண்டாவதாக அண்டை நாட்டு மொழியான சீனத்திலும், உலகத் தொடர்புமொழி என்ற நோக்கில் ஆங்கிலத்திலும், நான்காவதாக தமிழிலும் எழுதியிருக்கிறார்கள்.

தமிழைவிட எத்தனையோ உலக மொழிகள் பெரும்பாலான மக்களால் பேசப்படுகின்றன. ஆனால், அவற்றையெல்லாம் விட்டுவிட்டு தமிழ்மொழியில் அதிபர் மாளிகையின் பெயரை எழுதியதற்கு அவர்கள் கூறும் காரணம், தமிழர்களாகிய நம்மைச் சிந்திக்க வைப்பதாக இருக்கிறது.

உலகில் 6 மொழிகள்தான் மிகவும் தொன்மையானவை. அவை கிரேக்கம், லத்தீன், எபிரேயம், சீனம், தமிழ், சம்ஸ்கிருதம். இந்த 6 மொழிகளில் நான்கு மொழிகள் இன்று வழக்கில் இல்லை. இலக்கிய, வரலாற்று செழுமையான மொழி, எங்களுக்கு உலகில் உள்ள முக்கிய மொழிகளான 642 மொழிகளிலும் சரியான, தகுதியான மொழியாக தமிழ்மொழி தென்பட்டது. அந்த மொழியைச் சிறப்பிக்கவே "கிரெம்ளின் மாளிகை' எனத் தமிழில் எழுதினோம்'' என்று கூறுகிறார்கள். மேலும், அங்கே வைக்கப்பட்டுள்ள அரிய நூல்களுள் நமது திருக்குறளும் ஒன்று.

வெளிநாட்டில் உள்ளவர்களுக்குக் கூட நம் தமிழின் பெருமை தெரிந்துள்ளது. ஆனால், நாமோ தமிழைக் காப்பாற்ற கருத்தரங்கு நடத்திக் கொண்டிருக்கிறோம் தமிழராக பிறந்து தமிழ் பேசத் தயங்கும் தமிழர்கள், வியாபார நிலையங்களில் தமிழ் பெயரை பொறிக்க தயங்கி ஆங்கிலத்தில் வைத்திருக்கும் தமிழர்கள் இனியாவது தமிழ்மொழியின் அருமை பெருமையை உணர்ந்தால் சரி!

01.01.2013 நிலவரப்படி பட்டதாரி ஆசிரியர் பணியிலிருந்து பணி மாறுதல் மூலம் முதுகலை பட்டதாரி ஆசிரியர் பதவி வழங்க தகுதி வாய்ந்த நபர்களின் பெயர்ப்பட்டியல்


அரசு பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி மாற்றத்தை ஏற்படுத்தி மேம்படுமா? தமிழின் சிறப்பை குறைக்குமா?


பள்ளிகள் மேம்படும்
  51 (56%)
 
பள்ளிகள் மேம்படாது
  14 (15%)
 
பள்ளிகள் ஓரளவு மேம்படும்
  13 (14%)
 
தமிழின் சிறப்பு குறையாது
  43 (47%)
 
தமிழின் சிறப்பு குறையும்
  21 (23%)
 

Change your vote
Votes so far: 91
Days left to vote: 2 

ஆசிரியர் பயிற்சி விண்ணப்பம்: அடுத்த வாரம் முதல் வழங்கல்

ஆசிரியர் பயிற்சி படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், அடுத்த வாரத்தில் இருந்து வழங்கப்பட உள்ளன. மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். 

கடந்த கல்வி ஆண்டு நிலவரப்படி, 625 ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இதில், 40 ஆயிரம் இடங்கள் உள்ளன. அரசு ஒதுக்கீட்டின் கீழ், 20 ஆயிரம் இடங்கள் உள்ளன. எனினும், மாணவர் சேர்க்கை குறைந்து கொண்டே வருகிறது.

கடந்த ஆண்டு, கலந்தாய்வு மூலம், வெறும், 9,000 இடங்களே நிரம்பின. நிர்வாக ஒதுக்கீட்டில் சேரும் மாணவர் எண்ணிக்கையும், மோசமாக உள்ளது. இதனால், பல தனியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்கள், பி.எட்., கல்லூரிகளாக மாற்றப்படுகின்றன. 

பி.எட்., முடித்து, டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றால், வேலைக்கு உத்தரவாத நிலை இருப்பது தான், இதற்கு காரணம். பட்டதாரி ஆசிரியர், முழுக்க முழுக்க, "மெரிட்" அடிப்படையில், நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், ஆசிரியர் பயிற்சி படிப்பு படிக்கும் இடைநிலை ஆசிரியர், டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்றாலும், வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் நடக்கும் என்ற நிலை உள்ளது. 

சுப்ரீம் கோர்ட்டி வழக்கு முடியும் வரை, பதிவு மூப்பு முறையே, நடைமுறையில் இருக்கும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால், ஆசிரியர் பயிற்சியை பெற, மாணவர் தயக்கம் காட்டுகின்றனர்.

இந்த நிலையில், 2013-14ம் ஆண்டு சேர்க்கைக்காக, அடுத்த வாரத்தில் இருந்து, விண்ணப்பங்கள் வழங்கப்பட உள்ளன. மாவட்ட அரசு ஆசிரியர் பயிற்சி மையங்களில், விண்ணப்பங்கள் வழங்கப்படும். இந்த பயிற்சிக்கு விண்ணப்பிக்கும் முன், ஒன்றுக்கு பலமுறை, மாணவர்கள் ஆலோசித்து, முடிவு எடுப்பது சிறந்தது.