அண்ணா பல்கலை: எம்.பில். படிப்புகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் நடத்தப்படும் எம்.பில். படிப்புகளில் சேர மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விண்ணப்பப் படிவங்கள் மற்றும் விவரங்களை www.annauniv.edu என்ற இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பத்துடன், எஸ்.சி., எஸ்.டி. மாணவர்கள் ரூ. 350-க்கும், பிற பிரிவினர் ரூ. 700 தொகைக்கான வரைவோலையை இணைத்து அனுப்ப வேண்டும். வரைவோலையை இயக்குநர் (மாணவர் சேர்க்கை), அண்ணா பல்கலைக்கழகம் என்ற பெயரில் எடுக்க வேண்டும்.
விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்ய ஏப்ரல் 13 கடைசி தேதி. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை ஏப்ரல் 17-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
மேலும் விரிவான தகவல்களுக்கு www.annauniv.edu என்ற இணையதளத்தை பார்க்கலாம்.
No comments:
Post a Comment