Monday, April 1, 2013

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

அரசு ஊழியர்கள் பணிப்பதிவேடுகளை மின்னணு குறிப்புகளாக மாற்ற உத்தரவு

சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கொள்கை விளக்க குறிப்பில் இடம் பெற்றுள்ள விவரம் வருமாறு: பணியாளர்கள் பெற்ற சலுகைகள் மற்றும் பயன்களை கண்காணிக்கும் வகையில் அனைத்து பணியாளர்களின் பணிப்பதிவேடுகளில்
உள்ள பதிவுகள் கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் வகையில் மின்னணு குறிப்புகளாக மாற்றி பதிவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி, அனைத்து பதிவுகளையும் நாளது தேதி வரை ஏற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. உதவி இயக்குனர் மற்றும் மேல்நிலை அலுவலர்களின் சொந்த மாவட் டம், தற்போது பணி புரியும் இடம், அதற்கு முந்தைய பணியிடம் ஆகியவை கொண்ட குறிப் பிட்ட விவரங்களை உள்ளடக்கிய மின்குறிப்பு படிவம் வெளியிடப்பட்டுள்ளது. இதில் விவரங்களை மேம்படுத்தி 2013,14 ம் ஆண்டில் பணி விவரங்கள், தகுதி காண் பருவம் முடித்தது, துறை தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற விவரம், ஜிபிஎப் விவரங்கள், நிலுவையில் உள்ள, முடிக்கப்பட்ட ஒழுங்கு நடவடிக்கைகள், போன்ற விவரங்களையும் பதிவு செய்யப்படும். பின்னர், மாவட்ட வாரியாக குறியீட்டு எண், பாஸ்வேர்டு அளித்து, கண்காணிக்கவும், பணியாளர்கள் தாமதமின்றி தகுதிப்பயன்களை பெறவும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனி குடிநீர் திட்டம்


ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கு தனியாக குடிநீர் திட்டம் செயல்படுத்த அரசு முடிவு செய்து நிதி ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து ஒன்றிய துவக்கப் பள்ளிகளுக்கும் முதல் கட்டமாக கழிப்பறை வசதியை செய்து கொடுக்கும் பணி முடிவுறும் தருவாயில் உள்ளது. இதையடுத்து, அனைத்து பள்ளிகளுக்கும் தனியாக குடிநீர்திட்டம் செயல்படுத்த முடிவு செய்து இதற்கென மாவட்ட வாரியாக நிதிஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஒரு ஒன்றிய துவக்கப் பள்ளியில் தனியாக போர்வெல் அமைத்தல், குடிநீர் தொட்டி, குழாய்கள் பதித்து குடிநீருக்கு மற்றும் கழிப்பறைக்கு தண்ணீர் வசதி ஆகியவை செய்துதர பள்ளி வாரியாக மதிப்பீடு செய்யும் பணி நடக்கவுள்ளது.

சில ஊராட்சிகளில் குடிநீர் வசதி போதுமான அளவு இருக்கும்பட்சத்தில் ஊராட்சிகள் மூலம் குடிநீர் குழாய்கள் அமைத்துதரவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய துவக்கப் பள்ளிகள், ஆதிதிராவிடர் நல பள்ளிகள் ஆகியவற்றில் செயல்படுத்தப்படும் குடிநீர் திட்டத்திற்கு மாவட்ட வாரியாக அரசு நிதி ஒதுக்கியுள்ளது.

குறைந்தபட்சமாக சிறிய மாவட்டங்களுக்கு ரூபாய் 3 கோடி முதல் அதிகபட்சமாக 5 கோடி வரை நிதி ஒதுக்கியுள்ளது. இந்த திட்டங்களை குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைக்க முடிவு செய்திருந்த அரசு, பின் இதை கைவிட்டு தற்போது மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம் செயல்படுத்த உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்

மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்



உடல் ஊனமுற்ற மாணவர்கள் உயர்கல்வி படிக்க கல்விக் கடன் வழங்கப்படுகிறது.

மத்திய சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறையின் கீழ் தேசிய ஊனமுற்றோர் பைனான்ஸ் அன்ட் டெவலப்மென்ட் கார்ப்பரேஷன் நிறுவனம் செயல்படுகிறது.

இந்தியாவில் உள்ள 40 அல்லது அதற்கு மேல் ஊனத்துடன் உள்ள நபர்களுக்கு உயர்கல்வி படிப்பதற்கு கடன் வழங்கப்படுகிறது.

பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, பொறியியல், மருத்துவம், நிர்வாகம், ஐடி போன்ற படிப்புகளை படிக்கும் மாணவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். இந்தியாவில் படிக்கும் மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ. 10 லட்சமும், வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களுக்கு ரூ.20 லட்சமும கல்விக் கடனாக வழங்கப்படும்.கல்விக் கடனுக்கு ஆண்டிற்கு 4% வட்டி வசூலிக்கப்படும். மாணவியருக்கு 3.5% வட்டி வசூலிக்கப்படும்.

மேலும் விவரங்கள் அறிய www.nhfdc.nic.in மாற்றுத்திறனாளிகளுக்கு கல்விக் கடன்இணையதளத்தைப் பார்க்கவும்.

கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்

கல்விக்கு நிதி சேகரிக்க செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பேராசிரியர்


திருச்சி: அனாதை குழந்தைகளின் படிப்புக்கு உதவுவதற்காக, கல்லூரி பேராசிரியர் ஒருவர், ஊர் ஊராக சென்று, பொது மக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போட்டு நன்கொடை சேகரிக்கிறார்.

சென்னையை அடுத்த, திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி ஸ்ரீதேவி கல்லூரியில் உதவி பேராசிரியராக பணியாற்றுபவர் செல்வக்குமார், 32. இவருக்கு, மல்லிகா என்ற மனைவியும், லிங்கேஸ்வரன், 3, என்ற மகனும் உள்ளனர். திருச்சிக்கு வந்த அவர், ஸ்ரீரங்கம் ராஜகோபுரம், அமெரிக்கன் மருத்துவமனை, ரயில்வே ஜங்ஷன் ஆகிய இடங்களில் அமர்ந்து, பொது மக்களின் ஷூ, செருப்புகளுக்கு பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்டார்.

சபாரி உடை அணிந்து பாலிஷ் போடும் பணியில் ஈடுபட்ட அவர், "நான் உங்கள் செருப்புகளை துடைக்கிறேன். நீங்கள் ஏழை குழந்தைகளின் கண்ணீரை துடையுங்கள்" என்ற வாசகம் அடங்கிய பேனரை வைத்திருந்தார்.

குழந்தைகளின் கல்வி கண் திறக்க நிதி சேகரிப்பது பற்றி அவர் கூறியதாவது: சிறு வயதிலிருந்தே, மற்றவர்களுக்கு உதவ வேண்டும், என்ற எண்ணம் எனக்கு உண்டு. சென்னை லயோலா கல்லூரியில், பி.ஏ., தமிழ் படித்த போது, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவுதற்காக, பகுதி நேரமாக வேலைகள் பார்த்தேன்.

கேட்டரிங் முதல், கவுரவ ஆசிரியர் பணி என, இருபதுக்கும் மேற்பட்ட பணிகளை பகுதி நேரமாக செய்து, மூன்று சக்கரசைக்கிள், செயற்கை கால் போன்றவற்றை வாங்கி, உதவி தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை கண்டறிந்து வழங்கினேன்.

கடந்த, 1998 முதல், 2004ம் ஆண்டு வரை, மாற்றுத்திறனாளிக்கான சேவை செய்தேன். அப்போது, ஆதரவற்ற அனாதை குழந்தைகளுக்கும், சிறப்பான கல்வி கொடுக்க வேண்டும், என்ற எண்ணம் மேலோங்கியது.

அதையடுத்து, பாடியநல்லூர் மருதுபாண்டியர் நகரிலிருந்த என் தந்தையின் நிலத்தில், கருணைக் கரங்கள் மற்றும் பள்ளியை துவக்கினேன். தற்போது, ப்ரீ கேஜி முதல், ஐந்தாவது வகுப்பு வரை, 170 ஆதரவற்ற, அனாதை குழந்தைகள் படிக்கின்றனர்.

பள்ளியில் பணிபுரியும், எட்டு ஆசிரியர்களுக்கு சம்பளம், மின் கட்டணம், பராமரிப்புச் செலவு என, மாதந்தோறும், 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகிறது. நன்கொடை என்று பிரபலங்களிடம் கையேந்துவதை விட, பொதுமக்களின் பங்களிப்பை பயன்படுத்த வேண்டும், என்று நினைக்கிறேன்.அதனால் தான், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் அமர்ந்து, அவர்களின் ஷூ, செருப்புகளை பாலிஷ் செய்து, நன்கொடை வசூலிக்கிறேன்.

பாலிஷ் செய்வதற்கு, பொதுமக்கள் கொடுப்பதை வாங்கிகொள்கிறேன். இவ்வாறு, அவர் கூறினார். அவருடைய உதவும் எண்ணத்துக்கும், உறுதுணையாக இருக்க நினைப்பவர்கள், 98848 69566 என்ற மொபைல் போன் எண்ணை தொடர்பு கொள்ளலாம்.

More than a Blog Aggregator

கல்வி அதிகாரிகள் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை

விருத்தாசலம் அருகே விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்த விவகாரம் தொடர்பாக அரசு தேர்வுத் துறை இயக்குநர் வசுந்தரா தேவி கூறும்போது, விடைத்தாள்கள் ரயில் தண்டவாளத்தில் கிடந்ததாக எனக்கும் தகவல் கிடைத்துள்ளது. இது குறித்து விசாரித்து அறிக்கை அளிக்கும்படி கடலூர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜோசப் அந்தோனிராஜ், மாவட்டக் கல்வி அலுவலர் வடிவேலு ஆகியோருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

அவர்கள் இப்போது சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அந்த அறிக்கை விரைவில் எனக்கு கிடைக்கும். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதுபோன்ற துரதிருஷ்டவசமான நிகழ்வுகளில் கடந்த காலங்களில் எந்தவித நடவடிக்கை எடுக்கப்பட்டதோ அதைப் போன்றே தற்போதும் மாணவ-மாணவிகளுக்குப் பாதிப்பு இல்லாமல் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

விடைத்தாள் எரிந்த விவகாரம்: 2008 ஏப்ரல் 24-ம் தேதி இரவு வேலூர் ஊரிசு மேல்நிலைப் பள்ளி விடைத்தாள் திருத்தும் மையத்தில் திடீரென தீப்பிடித்துக் கொண்டது. இதில் அங்கு திருத்துவதற்காக வைத்திருந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்களின் தமிழ், ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பல்வேறு பாடங்களின் 52,020 விடைத்தாள்கள் எரிந்து சாம்பலாகின. இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து தேர்வுத்துறை இயக்குநர் நேரில் சென்று விசாரணை நடத்தி அரசுக்கு அறிக்கை அளித்தார். பாதிக்கப்பட்ட விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவர்களுக்கு மீண்டும் தேர்வு நடத்தப்படவில்லை. மாறாக அவர்கள் அரையாண்டுத் தேர்வில் பெற்றிருந்த சராசரி மதிப்பெண் கணக்கிடப்பட்டது நினைவுகூரத்தக்கது.

அண்ணாமலை பல்கலை: முதுகலை தேர்வு முடிவுகள் வெளியீடு

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், தொலைநிலை கல்வி இயக்ககத்தில் முதுகலை பட்டப் படிப்புக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
கடந்த நவம்பரில் எம்.ஏ., எம்.எஸ்சி., படிப்பில் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வுகள் நடத்தப்பட்டன. இதற்கான தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிட்டுள்ளன.
மறுமதிப்பீட்டு, மறுத்தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் தகவல்களை கேட்டறியலாம்.
தேர்வு முடிவுகளை காண http://annamalaiuniversity.ac.in/results/index.php என்ற இணையதளத்தை பார்க்கலாம்.

நொய்டாவில் மீண்டும் பயங்கரம்… ஓடும் காரில் பள்ளி மாணவி கற்பழிப்பு

 டெல்லி அருகே பள்ளி மாணவி ஒருவர் காரில் கடத்திச் செல்லப்பட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நொய்டாவில் நோட்டுப் புத்தகம் வாங்குவதற்காக கடைக்கு சென்ற மாணவியை பின் தொடர்ந்த சென்ற மர்ம நபர் மயக்க மருந்தை முகத்தில் அடித்து காரில் கடத்திச் சென்றார்.

பின்னர் ஓடும் காரிலேயே அந்த மர்ம நபர் மாணவியை பலாத்காரம் செய்துவிட்டு சாலை ஓரத்தில் தூக்கிப் போட்டுவிட்டு தப்பிட்டான். அந்த வழியாக சென்ற நபர்கள் சுய நினைவை இழந்து கிடந்த சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

இந்நிலையில் மாணவியை பலாத்காரம் செய்த அந்த மர்ம நபரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர்.

நொய்டாவில் கடந்த மார்ச் 4ம் தேதி ஓடும் காரில் நான்கு பேர் கொண்ட கும்பல் பள்ளி மாணவியை பலாத்காரம் செய்தது. இதில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர். இரண்டுபேர் தலைமறைவாகிவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதே போல் டெல்லியில் ஓடும் காரில் இளம் பெண்ணை 3 பேர் கொண்ட கும்பல் பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்தது. ஷாப்பிங் மஹாலில் வேலை செய்யும் அந்த பெண், அலுவலக காரில் வீடு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.

இதுதொடர்பாக டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பாலியல் குற்றங்களுக்கு எதிராக கடுமையான சட்டங்கள் நிறைவேற்றிய பிறகும் டெல்லியில் பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருவதாக பெண்கள் அமைப்பினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

கடந்த மூன்று மாதத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட பாலியல் வழக்குகள் டெல்லியில் பதிவாகியுள்ளன என்று சமீபத்திய புள்ளி விபரம் அதிர்ச்சிகரமான தகவலை வெளியிட்டுள்ளது.

தற்செயல் விடுப்பு விதிகள் தற்செயல் விடுப்பு


தற்செயல் விடுப்பு விதிகள் தற்செயல் விடுப்பு

1. ஒரு ஆண்டிற்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பு வழங்கப்படும். ஒரே நேரத்தில் பத்து நாட்கள் தனியாகவோ, அரசு விடுமுறை அல்லது ஈடு செய்யும் விடுப்பு முதலியவற்றுடன் சேர்த்தோ அனுபவிக்கலாம்.

2. அவ்வாறு நாட்கள் தொடர்ந்து அனுபவிக்கும் போது, இயற்கை சீற்றம், தேசிய தலைவர் மரணம், பந்த், பண்டிகை, திடீர் விடுமுறை காரணமாக 11 வது நாள் அரசு விமுறை என அறிவிக்கப்பட்டால் ஊழியர் 10க்கு மேற்பட்ட அந்த நாளையும் விடுப்பாக அனுபவிக்கலாம். (அ.நி.எண். 309 ப.ம.நி.சி.(அவி.11) நாள்.16.08.93) 

3. தற்செயல் விடுப்பை ஈட்டிய விடுப்பு மற்றும் பிற முறையான விடுப்புடன் இணைத்து அனுபவிக்க இயலாது.

4. தற்செயல் விடுப்பு விண்ணப்பத்தில் அதற்கான காரணத்தை குறிப்பிட வேண்டியதில்லை. (அ.க.எண். 1410 ப.ம.நி.சீ துறை 2.12.77 ).

5. தற்காலிக பணியாளர் மற்றும் தகுதிகாண்பருவத்தினருக்கு 3 மாதங்களுக்கு 2 நாட்கள் என்ற அளவில் இவ்விடுப்பு வழங்கப்படும். (அவி.இணைப்பு VI )

6. தகுதிகாண்பருவம் முடித்தவர் / நிரந்தர பணியாளர் ஆண்டு துவக்கத்திலேயே பணிநிறைவு பெரும் பணியாளருக்கு 12 நாட்கள் தற்செயல் விடுப்பை ஆண்டு துவக்கத்திலேயே வழங்கலாம். (அரசு கடித எண். 61559 /82 -4
ப.ம.சீ துறை நாள். 17.1.83)

7. குறைந்தபட்சம் அரைநாள் சிறுவிடுப்பு அனுமதிக்கப்படும்.
8. அவசர காரணங்களுகளுக்காக முதலில் விடுப்பு எடுத்து விட்டு பின்னர் இதற்கான விண்ணப்பத்தினை அளிக்கலாம். ( அரசுக் கடிதம் 61559 /82 -4 ப.ம.சீ துறை நாள். 17.1.83)

ஏப்ரல் -1 முட்டாள் தினமாக உருவான கதை!


         ஏப்ரல் -1 முட்டாள் தினமாக உருவான கதை!

ஏப்ரல்-1... உலகம் முழுக்க முட்டாள்களின் தினமாகக் கொண்டாடுகிறார்கள்.
 நாளை (திங்கட்கிழமை) காலையிலேயே உங்களை ஏதாவது சொல்லி ஏமாற்றப்பார்ப்பார்கள். சிலர் சொல்லும் டுபாக்கூர் தகவல்கள் 100 சதவீதம் 

அப்படியே உண்மை தான் என்று நம்பும்படி இருக்கும். எனவே நம்பி, ஏமாந்து 
விடாதீர்கள்.சமீப காலமாக, இ-மெயில், எஸ்.எம்.எஸ். மற்றும் இணையத்தளங்கள் 
மூலமாகவும் ஏப்ரல் 1-ந் தேதி அன்று வதந்திகளை உருவாக்கி பரபரப்பை
 ஏற்படுத்தி விடுகிறார்கள். ஆகையால் உஷாராக இருப்பது நல்லது. இந்நாள்
 எவ்வாறு எப்போது ஆரம்பமானது என்பதில் தெளிவான வரலாறு இல்லாத 
போதும் பிரான்ஸ் நாட்டிலேயே இது முதன்முதலில் அனுசரிக்கப்பட்டது எனத் 
தெரிகிறது.16-ம் நூற்றாண்டு வரை ஐரோப்பாவின் பல நாடுகளில் ஏப்ரல்-1 லேயே புத்தாண்டு
 தினம் கொண்டாடப்பட்டு வந்தது. பின்னர் 1562-ம் ஆண்டளவில் அப்போதைய போப்பாண்டவரான 13-வது கிரகரி பழைய ஜூலியன் ஆண்டுக்கணிப்பு முறையை 
ஒதுக்கி புதிய கிரேகோரியன் ஆண்டுக் கணிப்பு முறையை நடைமுறைப் படுத்தினார்.
இதன்படி ஜனவரி 1 அன்று தான் புத்தாண்டு ஆரம்பமாகின்றது. எனினும் இந்த புதிய புத்தாண்டு தினத்தை ஐரோப்பிய தேசங்களும், அவற்றின் மக்களும் உடனேயே ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு சில காலம் எடுத்தது. பிரான்ஸ் 1582-ம் ஆண்டிலும், ஸ்காட்லாந்து 1660-ம் ஆண்டிலும், ஜெர்மனி, டென்மார்க், நார்வே போன்ற நாடுகள்

 1700-ம் ஆண்டிலும், இங்கிலாந்து 1752-ம் ஆண்டிலும், இந்த புதிய புத்தாண்டு தினத்தை உத்தியோக பூர்வமாக ஏற்றுக்கொண்டன.ஆனால் பல ஐரோப்பிய நாடுகளும் அவற்றின் காலனி நாடுகளும் இந்த புத்தாண்டை ஏற்கவில்லை. எனவே அப்போது சர்வதேச அளவில் ஆதிக்கம் செலுத்தி வந்த ஐரோப்பியர்கள் தங்களின் புத்தாண்டை பின்பற்றாதவர்களை முட்டாள்கள் என நையாண்டி செய்யத் தொடங்கினர்.
அத்தோடு நில்லாமல், ஏப்ரல் -1ம் தேதி பல்வேறு பொய்யான, தவறான செய்திகளை சொல்லி அவர்களை ஏமாற்றவும் ஆரம்பித்தனர். இது தான் காலப்போக்கில் 

ஏப்ரல் -1ம் தேதி முட்டாள்கள் தினம் என மாறிவிட்டதாக கூறுகிறார்கள். ஆனால் 
இதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே ஈரானியர்கள் முட்டாள்கள் தினம் போன்ற நாளை கடைபிடித்ததாக வரலாறு கூறுகிறது.1508-ம் ஆண்டில் பிரான்ஸ் தேசத்தில் முட்டாள்கள் தினம் கொண்டாடப்பட்டு 
வந்துள்ளது என்பதற்கு சான்றுகள் உண்டு. அதே போல் டச்சு மொழியிலும் 1539-ம் ஆண்டுக் காலப்பகுதியில் முட்டாள்கள் தினம் பற்றி சொல்லப்பட்டிருப்பதை அறியக்கூடியதாக உள்ளது. 1466-ம் ஆண்டு மன்னன் பிலிப்பை அவரது அரச சபை விகடகவி, பந்தயம் ஒன்றில் வென்று மன்னனையே முட்டாளாக்கிய நாள் ஏப்ரல் முதலாம் தினம் என்றும் கூறப்படுகிறது.