தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு. இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி ஆசிரியர்களை பொருத்தவரை அவர்கள் பள்ளிக்கல்விதுறைக்கு ஈர்க்கப்பட்ட நாள் முதலே முன்னுரிமை வைக்கப்படுவதால் அடுத்த TET மூலம் அடுத்த பட்டதாரி நியமிக்கப்படும் முன் ஈர்க்கப்பட்டால் சற்று முன்னுரிமை கிடைக்கும் மேலும் முதுகலை ஆசிரியராக பதவியுயர்வு பெற வாய்ப்பு என்று கிட்டும் எதிர்பார்கின்றனர். இது குறித்து பேசிய ஒரு பட்டதாரி ஆசிரியர் " வட்டார வள மையங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரிய பயிற்றுனர்களுக்கு எப்படி முறையாக ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமைப்படி பள்ளிக்கல்வித்துறைக்கு பணிமாறுதல் அளிக்கப்படுகிறதோ அதே போல் எங்களுக்கும் அளித்தால் அது பலருக்கு வாய்ப்பாக அமையும் " என்றார் . எனவே தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்கும் பட்சத்தில் பல பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை செல்ல வாய்ப்பு ஏற்படும். மேலும் உயர்கல்வி பயின்று பணிபுரிந்து கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும் எனவும் தொடக்க கல்வி துறையில் பணிபுரிந்நது கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
Labels
- Abdul Kalam Quotes (1)
- Kalvi Varam (1)
- LIVE RADIO (1)
- Quotes about Time (1)
- Vivekanandar Quotes (1)
- உதவி கிட்டும் (1)
- எள்ளி நகையாடினால் (1)
- சுவாமி விவேகானந்தர். (1)
- நம்பிக்கை (1)
- விமர்சனம் (1)
GO TO KALVIVARAM.COM
Sunday, March 24, 2013
தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.
தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு. இரண்டு வருடங்களுக்கு முன் நடத்தப்பட்ட அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்குமா? என்ற எதிர்பார்ப்பு தொடக்கக்கல்வித்துறை ஆசிரியர்கள் பரவலாக எழுந்துள்ளது. குறிப்பாக பட்டதாரி ஆசிரியர்களை பொருத்தவரை அவர்கள் பள்ளிக்கல்விதுறைக்கு ஈர்க்கப்பட்ட நாள் முதலே முன்னுரிமை வைக்கப்படுவதால் அடுத்த TET மூலம் அடுத்த பட்டதாரி நியமிக்கப்படும் முன் ஈர்க்கப்பட்டால் சற்று முன்னுரிமை கிடைக்கும் மேலும் முதுகலை ஆசிரியராக பதவியுயர்வு பெற வாய்ப்பு என்று கிட்டும் எதிர்பார்கின்றனர். இது குறித்து பேசிய ஒரு பட்டதாரி ஆசிரியர் " வட்டார வள மையங்களில் நியமிக்கப்பட்ட ஆசிரிய பயிற்றுனர்களுக்கு எப்படி முறையாக ஒவ்வொரு ஆண்டும் முன்னுரிமைப்படி பள்ளிக்கல்வித்துறைக்கு பணிமாறுதல் அளிக்கப்படுகிறதோ அதே போல் எங்களுக்கும் அளித்தால் அது பலருக்கு வாய்ப்பாக அமையும் " என்றார் . எனவே தொடக்க கல்வி துறையில் அலகு விட்டு அலகு மாறுதல் இந்த வருடம் நடக்கும் பட்சத்தில் பல பட்டதாரி ஆசிரியர்கள் பள்ளிக்கல்வித்துறை செல்ல வாய்ப்பு ஏற்படும். மேலும் உயர்கல்வி பயின்று பணிபுரிந்து கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும் எனவும் தொடக்க கல்வி துறையில் பணிபுரிந்நது கொண்டு இருக்கும் பல இடைநிலை ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர்.
பள்ளிகளில் ஜெராக்ஸ் இயந்திரங்களுக்கு சீல்: கல்வித்துறை நடவடிக்கை

தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத்தேர்வுகள், நாளை மறுநாள் துவக்க உள்ளன. அதில், அதிக கவனத்தை கையாளும் வகையில், தேர்வு மைய பள்ளிகளில் உள்ள, "ஜெராக்ஸ்" இயந்திரம் உள்ள அறைகளை பூட்டி, சீல் வைக்க வேண்டும், என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.
தமிழகம் முழுவதும், எஸ்.எஸ்.எல்.சி., பொதுத் தேர்வுகள், 27ம் தேதி துவங்கி, ஏப்., 12ம் தேதி வரை நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் தேர்வெழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வின் போது, திருவண்ணாமலை, நாமக்கல், திருச்சியில் உள்ள பள்ளிகளில், தேர்வுக்கு அரைமணி நேரம் முன்னதாக, பள்ளியில் இருந்த ஜெராக்ஸ் மிஷின் மூலம் வினாத்தாள், "ஜெராக்ஸ்" எடுத்து வினியோகிக்கப்பட்டதாக புகார்கள் எழுந்தன. அப்பள்ளிகள் மீது பள்ளிக்கல்வித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.
நாளை மறுநாள், 10ம் வகுப்பு தேர்வுகள் துவக்கவுள்ள நிலையில், தேர்வு மையங்கள் அமையவுள்ள பள்ளிகளுக்கு, பல்வேறு அதிரடி உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. தேர்வு மையங்கள் அமைக்கப்படும் பள்ளிகளில் உள்ள, ஜெராக்ஸ் இயந்திரம் உள்ள அறைகள், தேர்வுக்கு முதல்நாளே பூட்டி, சீல் வைக்க வேண்டும். தேர்வு நடத்தும் அலுவலர்கள், அதை உறுதி செய்யவேண்டும்.
மேலும், தேர்வு மைய பள்ளிகளின் பட்டியலை பெற்றுள்ள மின் வாரிய அதிகாரிகள், தடையில்லா மின்சாரம் வழங்க திட்டமிட்டு உள்ளனர். ஆனாலும், ஜெனரேட்டர் தயார் நிலையில் வைக்குமாறு, மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள், தேர்வு மைய பள்ளிகளுக்கு உத்தரவிட்டு உள்ளனர்.
Subscribe to:
Posts (Atom)