Thursday, November 28, 2013


EMIS பணியில் தலைமை ஆசிரியர்களின் சிரமங்களை பற்றி The New Indian Express ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட செய்தி


EMIS பணியில் தலைமை ஆசிரியர்களின் சிரமங்களை பற்றி The New Indian Express ஆங்கில செய்தித்தாள் வெளியிட்ட செய்தி....



பொங்கலுக்குப் பின் டி.இ.டி., ஆசிரியர் நியமனம் : இறுதி தேர்வில், கடும் போட்டி உறுதி

ஆசிரியர் தகுதி தேர்வில் (டி.இ.டி.,) தேர்ச்சி பெற்றவர்கள், பொங்கல் பண்டிகைக்குப் பின், பணி நியமனம் செய்யப்பட உள்ளனர். வெயிட்டேஜ் மதிப்பெண் காரணமாக, தேர்ச்சி பெற்றவர்கள், இறுதி தேர்வுப் பட்டியலில் இடம்பிடிக்க, கடும் போட்டியை சந்திக்க உள்ளனர். 
ஆகஸ்ட், 17, 18 தேதிகளில் நடந்த டி.இ.டி., தேர்வில், 27 ஆயிரம் பேர், தேர்ச்சி பெற்றனர். எனினும், அரசு பள்ளிகளில், 15 ஆயிரம் இடங்கள் மட்டுமே, காலியாக உள்ளன. டிசம்பர் இறுதிக்குள், சான்றிதழ் சரிபார்ப்பை நடத்தி முடித்திட, டி.ஆர்.பி., திட்டமிட்டுள்ளது. ஜனவரி முதல் வாரத்திற்குள், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரானால், பொங்கல் முடிந்ததும், 15 ஆயிரம் பேரும், பணி நியமனம் செய்யப்படுவர் என, உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கடும் போட்டி உறுதி : டி.இ.டி., தேர்வில், 150க்கு, 60 சதவீதம் (90 மதிப்பெண்) எடுத்தவர்கள், தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இறுதி தேர்வானது, பள்ளி படிப்பு மற்றும் பட்ட படிப்புகளில் எடுத்த மதிப்பெண்களும், கணக்கில் கொள்ளப்பட்டு, அதில் பெற்ற மதிப்பெண், 40க்கு கணக்கிடப்படும்.
டி.இ.டி., தேர்வில் எடுத்த மதிப்பெண், 60க்கு கணக்கிடப்பட்டு, மொத்தத்தில், 100க்கு, தேர்வர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், இறுதி தேர்வுப் பட்டியல் தயாரிக்கப்படும்.

இடைநிலை ஆசிரியரை பொறுத்தவரை, பிளஸ் 2க்கு, 15 மதிப்பெண், ஆசிரியர் பட்டய தேர்வுக்கு, 25 மதிப்பெண் என, 40 மதிப்பெண் ஒதுக்கப்பட்டுள்ளன. இதில், பிளஸ் 2 தேர்வில், 90 சதவீதத்திற்கும் அதிகமான மதிப்பெண்களை பெற்றவர்களுக்கு மட்டுமே, 15 மதிப்பெண் முழுமையாக கிடைக்கும். அதேபோல், ஆசிரியர் பட்டய தேர்வில், 70 சதவீதம் மற்றும் அதற்கும் அதிகமாக மதிப்பெண் பெற்றிருந்தால் தான், 25 மதிப்பெண், முழுமையாக கிடைக்கும். இல்லையெனில், இந்த மதிப்பெண் குறையும்.