Saturday, March 23, 2013

TAMIL RADIO

ஆசிரியர் தகுதி தேர்வு 2013



ஆசிரியர் தகுதி தேர்வு 2013



தமிழகத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையை கணக்கிடும்போது மாணவர்களுக்கு ஏற்ப ஆசிரியர்கள் இல்லாமல் பெரிய அளவில் பற்றாக்குறை நிலவுகிறது.இந்த பற்றாக்குறையை சரி செய்ய தகுதியான திறமையான அனைத்து ஆசிரியர்களும் அரசு பள்ளிகளில் நியமனம் செய்யப்பட வேண்டும்.கட்டாயக்கல்வி கல்வி உரிமைச்சட்டம் மேற்கண்ட கருத்தினை தான் முக்கியமாக சட்டத்தில் குறிப்பிட்டுள்ளது. எனவே கடந்த ஆண்டுகளில் வெற்றி பெற முடியாத ஆசிரியர்கள் 2013ல் நடைபெற உள்ள தகுதி தேர்விற்கு மிக கடுமையாக உழைக்க வேண்டும்...தற்போது பத்தாம்,பனிரெண்டாம் வகுப்பு தேர்வுகள் முடிய உள்ள சூழலில் ஆசிரியர் தேர்வு வாரியம் எந்த நேரத்திலும் தேர்வு தொடர்பான அறிவிப்பினை வெளியிடலாம்.எனவே தேர்வுக்கு தயாராக இருக்க வேண்டும்.