Thursday, April 18, 2013


வியந்து தான் போவீர்கள்


* கரையான்களால் அரிக்க முடியாத மரம் தேக்கு மரம். 
* ஆப்பிரிக்காவில் ரத்த வேர்வை சிந்தும் நீர் யானை உள்ளது.

* ஆரல் கடல், சாக்கடல், காஸ்பியன் கடல் இவை மூன்றும் கடல் என்ற பெயரைக் கொண்ட ஏரிகள் ஆகும்.

* உலகில் கிடைக்கும் தங்கத்தில் பாதி அளவை

தரும் நாடு தென்னாப்பிரிக்கா (ஒரு ஆண்டுக்கு 700 டன்).

* முத்துத் தீவு என அழைக்கப்படும் நாடு பஹ்ரெய்ன்.

* தென்னாப்பிரிக்காவில் ஒரு ஆண், ஒரு பெண்ணை பார்க்க வந்தால் அந்த பெண் மெழுகுவர்த்தியை ஏற்றி வைப்பது வழக்கமாக இருந்தது. அந்த ஆண் தன் மனத்திற்கு பிடித்தவனாக இருந்தால் நீளமான மெழுகுவர்த்தியும், பிடிக்காதவனாக இருந்தால் சிறிய மெழுகுவர்த்தியையும் ஏற்றி வைப்பாள்.

* காண்டா மிருகத்தின் கொம்பு மற்ற மிருகங்களின் கொம்புகளிலிருந்து வேறுபடுகிறது. இதன் கொம்பு எலும்பால் ஆனது அல்ல. தோலிலிருந்தே உருவானது.

* நாகபாம்பு, கண்ணாடி விரியன், சுருட்டுப் பாம்பு, கட்டுவிரியான் ஆகியவை மிகவும் கொடிய நச்சுள்ள பாம்புகள்.

* சூரியன் அஸ்தமனத்துக்கு முன் சிவப்பாக தோன்றும். ஆனால், அது பச்சையாகத் தோன்றுவது அண்டார்டிக் காவில் மட்டும் தான்.

* பச்சைத் தங்கம் என அழைக்கப்படும் மரம் யூகாலிப்டஸ் மரம்.

* நீரை உறிஞ்சி குடிக்கும் ஒரே பறவை புறா தான்.

* நச்சுள்ள பாம்பு இன்னொரு பாம்பைக் கடித்தால் கடிப்பட்ட பாம்பு இறந்து விடும்.

* பாம்புகளில் 3,000 வகையான பாம்புகள் உலகம் முழுவதும் உள்ளன. இந்தியாவில் மட்டும் 350 வகைகள் உள்ளன.

* இந்தியா சுதந்திரம் பெற்ற 1947-ம் ஆண்டில் நாட்டில் மொத்தம் 648 வங்கிகளும், 4,819 கிளைகளும் இருந்தன.

* காரில் செல்லும் போது மழை, இடி வந்தால் காரை விட்டு இறங்காமலிருப்பதே நல்லது. காரணம், பூமிக்கும், காருக்கும் பாசிடிவ் சார்ஜ் கவராமலிருப்பது தான்.

* நிலத்தில் ஒரு மைல் என்பது 5,280 அடி. கடலில் ஒரு மைல் 6,080 அடி.

* ஆஸ்திரேலியாவில் ஒரு பாறை உள்ளது. 300 மீட்டர் உயரமும், 11 கி.மீட்டர் சுற்றளவும்கொண்ட இப்பாறை எவ்வளவு தூரத்திலிருந்து பார்த்தாலும் சிவப்புக் கூடாரம் போல் காட்சியளிக்கும். இப்பாறையின் சிறப்பு என்னவெனில், வெய்யிலில் சிவப்பு நிறமாகவும், நண்பகலில் பழுப்பு நிறமாகவும் மாலையில் நீலம் கலந்த சிவப்பாகவும் தோன்றும். எனவே, இதை பச்சோந்திப் பாறை என அழைக்கப்படுகிறது

*வெளவால்களில் மொத்தம் 2,000 வகைகள் உள்ளன.

*கொசுவில் 2,700 வகைகள் உள்ளன.

*குரங்குகளில் அழகானது 'மர்மோசைட்' என்ற வகை குரங்கு.

*நம் கண்களில் லாக்ரிமல் கிளாண்ட் என்ற சுரப்பியால் சுரக்கப்படும் லாக்ரிமா என்ற திரவத்தைத்தான் பொதுவாக கண்ணீர் என்கிறோம்.

*ஆந்தையில் மொத்தம் 133 வகை உண்டு. மற்ற பறவைகளின் கண்களைப் போல ஆந்தைகளின் கண்கள் அதன் விழிக்குள் இலகுவாக அசைவதில்லை. கண்கள் இரண்டும் முகத்தின் முன்னாலேயே பக்கவாட்டில் இல்லாமல் இருக்கின்றன. இந்தக் குறையை ஈடு செய்ய தன் தலையை 180 டிகிரி வரைப் சுற்றி பார்க்க முடியும்.

*மாட்டுக்கு பற்கள் தேய ஆரம்பித்து விட்டால் அது பத்து வயதிற்கு மேற்பட்டது.

*எவரெஸ்ட் சிகரத்தை சாகர் மாதா என்று நேபாள நாட்டினர் அழைக்கின்றனர்.

*ரீசன்டோலியா என்ற ஆஸ்திரேலியத் தாவரம் மண்ணுக்குள் மணம் வீசும் மலரைக் கொண்டது.

*பவ்டக் என்ற பர்மியச் செடி மூன்று முறை தொடர்ந்து பூத்தால் பருவமழை தொடங்கி விடும்.

*கோட்ஸ்பியர்டு என்ற ஆப்பிரிக்க நாட்டுப் பூச்செடியில் ஒவ்வொரு கொத்திலும் பத்தாயிரம் மொட்டுக்கள் வரை இருக்கும்.

* ஒரு இதழோ அல்லது ஒன்பது இதழ்களோ உள்ள பூக்களை எங்கும் காண முடியாதாம்.

*ஆஸ்திரேலிய மலரான கேண்டிஸ் ஏழு ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும். கற்றாழை எனப்படும் கள்ளி 100 ஆண்டுகளுக்கு ஒரு முறை மலரும்.

*ரத்தச் சிவப்பணுக்கள் முதிர்ச்சிக்கு காரணமாய் அமைவது சயனா கோபலமின்.

*நார் தயாரிக்க பயன்படும் பாக்டீரியா கிளாஸ்டரியம்.

* லெகோஸ் என்ற ஒன்றுடன் ஒன்று செருகிக் கொள்ளும் வண்ண பிளாஸ்டிக் துண்டுகள் 1949-ம் ஆண்டு டென்மார்க்கைச் சேர்ந்த கிறிஸ்டியான்ஸன் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. சிறுவர்கள் இவற்றைக் கூட்டி வைத்து பொம்மை நகரங்கள் கட்ட உதவிய இந்தத் துண்டுகள் இதுவரை இரண்டாயிரம் கோடிக்கு மேல் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டன. இன்றும் மாறாமல் முதலிடம் பெற்றிருக்கும் சிறுவர்களுக்கான இந்த விளையாட்டுப் பொருள்களில் இரண்டாயிரம் வகைத் துண்டுகள் உள்ளன.

* நாய் உணவில்லாமல் கூட இருந்து விடும். ஆனால், தூக்கம் இல்லாவிட்டால் விரைவில் இறந்து விடும்.

* கரப்பான் பூச்சிகள், பல்லிகள், விஷப் பாம்புகளை சாப்பிடும் ஒருவகை எட்டுக்கால் பூச்சி ‘டாரண்டுலா’வாகும்.

* ஒரு தேனீ 4,000 பூக்களிலிருந்து சேகரிக்கும் தேன் ஒரு ஸ்பூன் அளவே ஆகும்.

* காண்டாமிருகம் சுத்தமான சைவ விலங்கு.

* காலில் கண் உள்ள பூச்சி வெட்டுக்கிளி.

* முதன்முதலில் அலுமினியத்தை கண்டறிந்த நாடு பிரான்ஸ்.

01.06.2013 இல் ஏற்படும் காலிப்பணியிடம் 18.04.2013 மாலைக்குள் அனுப்பவேண்டும் -தொடக்கக்கல்வி இயக்குனர்


செவ்வாய் கிரகத்தில் உயிர்கள் வாழ்வது சாத்தியமே...!

செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வது சாத்தியமே. அங்கு ஒரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்திருப்பதற்கான ஆதாரங்கள், சூழல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக நாசா ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழும் சூழல் குறித்து ஆராய அனுப்பப்பட்டுள்ள ரோவர் விண்கலமானது அங்கிருந்து பாறைகளின் மாதிரிகளை சேகரித்து, அதன் மூலக்கூறுகள், வேதிக் கட்டமைப்பு தகவல்களை கடந்த மாதம் பூமிக்கு அனுப்பியது. இதில் உயிர் வாழ்வதற்கு அடிப்படை வேதிப் பொருட்களான சல்ஃபர், நைட்ரஜன், ஹைட்ரஜன், ஆக்ஸிஜன், கார்பன் உள்ளிட்டவைகள் தேவையான அளவு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் பாறைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்ட இடத்தில் முன்னதாக நதியோ அல்லது ஏரியோ இருந்ததும் ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து செவ்வாய் கிரகத்தில் முன்னொரு காலத்தில் உயிரினங்கள் வாழ்ந்தது உண்மையே என்றும், எதிர்காலத்தில் உயிர் வாழ்வதற்கான சாத்தியங்கள் இருப்பதாகவும் நாசா தெரிவித்துள்ளது. க்யூரியாசிட்டிக்கு முன் செவ்வாய் கிரகத்தின் இன்னொரு பகுதியில்தரையிறங்கிய மார்ஸ் எக்ஸ்பிரஸ், அங்குள்ள மிகப் பெரிய ஆற்றின் படத்தை அனுப்பியது நினைவிருக்கலாம். இந்த ஆறு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு வரை ஓடிக் கொண்டிருந்தது. இப்போது ஈரமிக்க மணற்பரப்பும் ஆற்றின் வழித்தடமும் மட்டும் அப்படியே உள்ளதைப் படம் பிடித்திருந்தது.

பி.எப்., கணக்குகளை மாற்ற ஜூலை முதல் "ஆன்-லைன்' வசதி.

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதித் திட்டத்தில் இணைந்துள்ள சந்தாதாரர்கள், கணக்கை மாற்றுவது மற்றும் பணம் பெறுவதற்கான விண்ணப்பங்களை, ஜூலை, 1ம் தேதி முதல், "ஆன்-லைன்' மூலம் மேற்கொள்ளலாம் என, தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதுகுறித்து, இ.பி.எப்., கமிஷனர், அனில் ஸ்வரூப் நேற்று கூறியதாவது:ஒரு நிறுவனத்திலிருந்து, மற்றொரு நிறுவனத்திற்கு மாறும் தொழிலாளர்களுக்கு இப்போது இருக்கும் மிகப் பெரிய பிரச்னையே, தங்களின் முந்தைய கணக்குகளை, புதிய நிறுவனத்தின் கணக்கிற்கு மாற்றுவது தான். அந்த சிரமத்தைப் போக்கும் வகையில், "ஆன் - லைன்' விண்ணப்பத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கணக்கை மாற்றுவது, செட்டில்மென்ட் பணம் பெறுவது போன்ற பணிகளை, ஜூலை, 1ம் தேதி முதல், ஆன் - லைன் மூலம் விண்ணப்பித்துக் கொள்ளலாம். அதற்கான, தகவல் தொகுப்பு பணி மும்முரமாக நடந்து வருகிறது. சந்தாதாரர்களுக்கு, நிரந்தர எண் கொடுக்கும் பணி, அடுத்த ஆண்டு துவக்கத்தில் செயல்படும். இவ்வாறு அவர் கூறினார்.

TRI SEMESTER CCE Overall Consolidation CO- SCHOLASTIC Forms Term for 1 to 3


TRI SEMESTER CCE Overall Consolidation CO- SCHOLASTIC Forms Term for 1 to 3


தொடக்க கல்வி பட்டயதேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கலாம்


தொடக்க கல்வி பட்டயதேர்வு விண்ணப்பம் இணையதளத்தில் பதிவிறக்கலாம்



"தொடக்க கல்வி பட்டயத்தேர்வில் தனித்தேர்வர்களாக தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் இன்று முதல் இணையதளம் மூலம் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்," என மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவன முதல்வர் தெரிவித்தார். 

TNPSC REVISED & UPDATED Syllabus | குரூப்-2 உள்ளிட்ட 6 தேர்வுகளுக்கான பாடத்திட்டங்கள் மாற்றம்: டி.என்.பி.எஸ்.சி