Tuesday, June 11, 2013

அரசின் பல்வேறு துறைகளில் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு ஓரிரு நாளில் அறிவிப்பு வெளியாகும்

அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள சுமார் 5,500 காலி பணி இடங்களை நிரப்ப ஆகஸ்டு மாதம் குரூப்–4 தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியாகும்.
5,500 காலி இடங்கள்

தமிழக அரசின் வெவ்வேறு துறைகளுக்கு தேவைப்படும் இளநிலை உதவியாளர்கள், தட்டச்சர்கள், சுருக்கெழுத்தர் மற்றும் பில் கலெக்டர், வரைவாளர், சர்வேயர் ஆகிய பதவிகள் குரூப்–4 தேர்வு மூலமாக நியமிக்கப்படுகின்றன. இந்த தேர்வை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) நடத்துகிறது. இதற்கான குறைந்தபட்ச கல்வித்தகுதி 10–ம் வகுப்பு தேர்ச்சி ஆகும்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குரூப்–4 தேர்வு மூலமாக 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பணி இடங்கள் நிரப்பப்படன. இந்த நிலையில், மேற்கூறப்பட்ட பதவிகளில் சுமார் 5,500 காலி இடங்கள் குரூப்–4 தேர்வு மூலமாக நிரப்பப்பட இருக்கின்றன.

ஆகஸ்டு மாதம் தேர்வு

இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்டு மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. தேர்வு பற்றிய அறிவிப்பு ஓரிரு நாளில் வெளியிடப்படும் என்று டி.என்.பி.எஸ்.சி. வட்டாரங்கள் தெரிவித்தன. குரூப்–4 தேர்வு பணிகளுக்கு எழுத்துத்தேர்வு மட்டுமே உண்டு. நேர்முகத்தேர்வு எதுவும் கிடையாது. எழுத்துத்தேர்வில் வெற்றிபெற்றாலே வேலை உறுதி என்பது குறிப்பிடத்தக்கது.

இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்தர் பதவிகளுக்கு தொடக்க நிலையில் ஏறத்தாழ ரூ.14 ஆயிரம் சம்பளம் கிடைக்கும். இப்பணிகளுக்கு தேர்வுசெய்யப்படுவோர் பட்டதாரியாக இருந்தால் இரண்டு இன்கிரிமென்ட் அதாவது கூடுதலாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். பணியில் இருந்துகொண்டே

என்ஜினீயரிங் ரேங்க் பட்டியல் இன்று மதியம் வெளியீடு முதல்கட்ட கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்குகிறது:

என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேங்க் பட்டியல் பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது. முதல்கட்ட பொது கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்குகிறது.
2 லட்சம் இடங்கள்

தமிழ்நாட்டில் 550–க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. இதில் ஏறத்தாழ 2 லட்சம் இடங்கள் கவுன்சிலிங் மூலமாக நிரப்பப்பட உள்ளன. இந்த ஆண்டு என்ஜினீயரிங் படிப்பில் சேர ஒரு லட்சத்து 89 ஆயிரத்து 397 பேர் விண்ணப்பித்தனர்.

இவர்களில் மாணவர்கள் ஒரு லட்சத்து 14 ஆயிரத்து 891 பேர். மாணவிகள் 74 ஆயிரத்து 506 பேர் ஆவர். மொத்த மாணவ–மாணவிகளில் ஒரு லட்சம் பேர், முதல் தலைமுறை பட்டதாரி மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதிதாக வரவுள்ள 3 அரசு கல்லூரிகள் உள்பட 11 என்ஜினீயரிங் கல்லூரிகள் மூலமாக கூடுதலாக 3,300 இடங்கள் கிடைக்கும்.

இன்று ரேங்க் பட்டியல் வெளியீடு

என்ஜினீயரிங் விண்ணப்பித்த ஒரு லட்சத்து 89 ஆயிரம் மாணவ–மாணவிகளுக்கும் கடந்த 5–ந் தேதி கம்ப்யூட்டர் மூலமாக ரேண்டம் எண் ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிலையில், அவர்களுக்கான ரேங்க் பட்டியல் சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று (புதன்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு வெளியிடப்படுகிறது.

உயர் கல்வித்துறை அமைச்சர் பி.பழனியப்பன் ரேங்க் பட்டியலை வெளியிடுகிறார். இந்த நிகழ்ச்சியில், உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அபூர்வ வர்மா, தொழில்நுட்பக்கல்வி ஆணையர் குமார் ஜெயந்த், அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் எம்.ராஜாராம், தமிழ்நாடு என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் கலந்துகொள்கிறார்கள்.

கவுன்சிலிங் எப்போது?

என்ஜினீயரிங் விண்ணப்பித்த மாணவ–மாணவர்கள் ரேங்க் பட்டியலை அண்ணா பல்கலைக்கழக இணையதளத்தில் (www.annauniv.edu) தெரிந்துகொள்ளலாம். ரேங்க் பட்டியலை தொடர்ந்து, விரும்பும் கல்லூரியையும், பாடப்பிரிவையும் தேர்வு செய்வதற்கான கவுன்சிலிங் நடத்தப்படும். முதலில் விளையாட்டு பிரிவினருக்கான கவுன்சிலிங் 17, 18, 19 ஆகிய தேதிகளிலும், மாற்று திறனாளிகளுக்கான கவுன்சிலிங் 20–ந் தேதியும் நடைபெறும். பொது கவுன்சிலிங் 21–ந் தேதி தொடங்கி ஜூலை 30–ந் தேதி வரை நடத்தப்படும்.

கவுன்சிலிங்கிற்கு வரும் மாணவ–மாணவிகள், அவர்களின் பெற்றோர் வசதிக்காக பிரமாண்டமான ஓய்வறை, கவுன்சிலிங் அறைக்கு நீண்ட கியூவில் செல்லும் மாணவர்களுக்காக பெரிய கூடாரம், கல்விக்கடன் ஆலோசனை வழங்கும் வங்கிகளுக்கான அரங்குகள் ஆகியவையும் முழுவீச்சில் அமைக்கப்பட்டு வருகின்றன.

TN-TET Application Issue Details | ஆசிரியர் தகுதித் தேர்வு - விண்ணப்பம் வழங்கல் குறித்து அனைத்து மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்களுக்கான வழிகாட்டு நெறிமுறை



ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30 மணி வரை (ஞாயிற்றுகிழமை தவிர்த்து) அனைத்து நாட்களிலும் காலை 10.00 மணி முதல் 5.30 மணி வரை அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளிலும் விற்பனை செய்யப்படும்.

TNTET – 2013 விண்ணப்பங்கள் விற்பனை தொடர்பான தலைமை ஆசிரியர்களுக்கான குறிப்புகள்


தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு – 2013 தேர்விற்கான விண்ணப்பங்கள்இம்முறை அனைத்து அரசு மேனிலைப் பள்ளிகளில் தலைமை ஆசிரியர்கள்மூலம் விற்பனை செய்யப்பட உள்ளதுஇதற்கான தகுந்த முன்னேற்பாடுகள்செய்திட தலைமை ஆசிரியர்களுக்கு பின்வரும் அறிவுரைகள்வழங்கப்படுகிறது.


1. TNTET – 2013 தேர்விற்கு தாள் 1 மற்றும் தாள் 11க்கு வெவ்வேறு விண்ணப்பங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.


2. தாள் 1 மற்றும் தாள் 11க்கான விண்ணப்பங்கள் வெவ்வேறு தனித்தனி அறைகளில் விற்பனை செய்யப்பட வேண்டும்.



3. விண்ணப்பம் ஒன்றின் விலை ரூ.50/- விண்ணப்பத் தொகையினைரொக்கமாக பெற்றுக் கொண்டுஒரு விண்ணப்பதாரருக்கு ஒர் விண்ணப்பம்வழங்கப்பட வேண்டும்.


4. விண்ணப்பதார்களுக்கு விண்ணப்பங்கள் வழங்கப்படும் போது விண்ணப்பதாரர் பெயர்விண்ணப்பம் வழங்கப்பட்ட நாள்விண்ணப்ப எண் ஆகியவற்றை உரிய பதிவேட்டில் (மாதிரி படிவம் - 1 இணைப்பட்டுள்ளது)பதிவு செய்ய வேண்டும்.


5. ஒவ்வொரு நாளும் விண்ணப்பங்கள் விற்பனை செய்த விவரம், விண்ணப்பங்கள் இருப்பு ஆகியவற்றை தங்கள் பள்ளிக்கு உரிய தொடர்பு அலுவலருக்கு தெரிவிக்க வேண்டும். (பத்து பள்ளிகளுக்கு ஒரு தொடர்பு

அலுவலர் (முதன்மைக் கல்வி அலுவலரால் நியமிக்கப்பட்டுள்ளார்).


6. விண்ணப்பங்கள் கூடுதலாக தேவைப்படின் முன்கூட்டியே தொடர்பு அலுவலருக்கு தெரிவித்து விண்ணப்பங்களை பெற்று விண்ணப்ப விற்பனை இடையூறு ஏற்படாமல் நடைபெறுவது உறுதி செய்திட வேண்டும்.


7. தொடர்பு அலுவலர் தமது பகுதியின் இருப்புதேவை குறித்து தினமும்மாவட்டக் கல்வி அலுவலருக்கு தெரிவித்திடல் வேண்டும்பள்ளிகளில்தேவைக்கேற்ப விண்ணப்பங்களை மாவட்டக் கல்வி அலுவலரிடமிருந்துபெற்று வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.


8. விண்ணப்பங்கள் 17.06.2013 காலை 10.00 மணி முதல் 01.07.2013 மாலை 5.30மணி வரை (ஞாயிற்றுக் கிழமை தவிர்த்துஅனைத்து நாட்களிலும் காலை10.00 மணி முதல் மாலை 5.30 வரை விற்பனை செய்யப்பட வேண்டும்.


9. 01.07.2013 அன்று விண்ணப்ப விற்பனையினை முடித்த பின்விண்ணப்பம் ஒன்றிற்கு ரூ.2/- வீதம் விற்பனை செய்தமைக்காக தலைமை ஆசிரியர்பிடித்தம் செய்து கொண்டு மீதமுள்ள தொகையினை மாவட்டக் கல்விஅலுவலரிடம் இணைப்பில் கண்டுள்ள படிவத்தினை (படிவம் 2இணைக்கப்படுள்ளதுபூர்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.


10. விண்ணப்ப விற்பனை மையத்தில் அறிவிப்பு பலகை (மாதிரி

இணைப்பப்பட்டுள்ளதுவைக்கப்படுதல் வேண்டும்.



விண்ணப்பம் விற்பனை மையத்தில் வைக்க வேண்டிய அறிவிப்பு பலகை



தாள் 1 மற்றும் தாள் 11க்கு தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும்


1.D.T.Ed / D.E.Ed முடித்து 1 முதல் 5 வகுப்புகளுக்கு இடைநிலை ஆசிரியர்பணிவாய்ப்பிற்கு தகுதி பெற தாள் 1 க்கு விண்ணப்பிக்க வேண்டும்.


2. 10+2+3 முறையில் பயின்று B.A or B.Sc பட்டப்படிப்பில்  தமிழ்ஆங்கிலம்,கணிதம்இயற்பியல்வேதியியல், தாவரவியல்விலங்கியல்வரலாறுமற்றும் புவியியல் ஆகிய பாடங்களில் அல்லது அதற்கு இணையானபாடங்களில் பட்டமும் B.Ed பட்டமும் பெற்று 6 முதல் 8 வகுப்புகளுக்கு பட்டதாரி ஆசிரியராக தகுதி பெற வேண்டுவோர் தாள் 11க்கு விண்ணப்பிக்கவேண்டும்.


 3.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மாவட்ட கல்வி அலுவலகத்தில்மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும் 

4.விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் 01.07.2013 மாலை 05.30 மணிவரை.