Labels
- Abdul Kalam Quotes (1)
- Kalvi Varam (1)
- LIVE RADIO (1)
- Quotes about Time (1)
- Vivekanandar Quotes (1)
- உதவி கிட்டும் (1)
- எள்ளி நகையாடினால் (1)
- சுவாமி விவேகானந்தர். (1)
- நம்பிக்கை (1)
- விமர்சனம் (1)
GO TO KALVIVARAM.COM
Monday, March 25, 2013
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு, நாளை துவங்குகிறது
ஆன்-லைன் மூலம், பொதுமக்கள்
ஆன்-லைன் மூலம், பொதுமக்கள் சேவைகளைப் பெறும் வகையில், 14 துறைகளின் விண்ணப்பங்களை, மறு வடிவமைப்பு செய்ய, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அரசுத் துறையின் சேவை முழுவதையும், ஆன்-லைன் மூலம் கொண்டு வர, இப்பணியை விரைந்து முடிக்க வேண்டும் என, தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்திஉள்ளது. அரசு அலுவலகங்களின் அன்றாடப் பணிகள் உள்ளிட்ட அனைத்தையும், கணினி வழியில் செய்வதற்கான நடவடிக்கைகளை, அரசு மேற்கொண்டு வருகிறது. இதற்காக, மாநில டேட்டா மையம், மாநில அளவிலான நெட்வொர்க், மாநில அரசின் இணையதளம் ஆகியன, துவங்கப்பட்டு உள்ளன.
CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள்
அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் வேலை பளுவை குறைக்க CCE செயல்திறன் பகுப்பு மென்பொருள் தமிழக அரசால் முதற்கட்டமாக 64 பள்ளிகளில் அறிமுகம்
1 முதல் 8 வகுப்புகளுக்கு CCE எனும் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறை நடைமுறையில் உள்ளது. வரும் கல்வியாண்டு முதல் இது 9ஆம் வகுப்பிற்கும் விரிவுபடுத்தப்பட உள்ளது. இதில் வகுப்பாசிரியர் / பாட ஆசிரியர் / மாணவர் திரள் பதிவேடு/ இணை செயல்பாடுகள் பதிவேடு என பல பதிவேடுகள் பராமரிக்க அதிக காலம் எடுத்துக்கொள்வதால். ஆசிரியர்களின் வேலை பளுவை குறைத்து எளிமையாக்க அரசு / ஊராட்சி ஒன்றியப் பள்ளிகளில் CCE சார்பான பதிவேடுகள் மற்றும் மதிப்பெண் அட்டைகள் ஆகியவற்றில் ஆசிரியர்களின் சுமையை குறைப்பது மற்றும் CCE செயல்திறன் பற்றி அறிய "BEE EDUSYS" என்ற நிறுவனம் மூலம் முதற்கட்டமாக சோதனை அடிப்படையில் ஒரு மாவட்டத்திற்கு 2 அரசு பள்ளிகள் வீதம் தேர்ந்தெடுத்து தமிழக முழுவதும் 64 பள்ளிகளுக்கு, இச்செயல்திறன் மென்பொருள் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இம்மென்பொருள் படிப்படியாக தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு / நகராட்சி / ஊராட்சி பள்ளிகளில் நடைமுறைப்படுத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. மென்பொருள் மூலம் FORMATIVE ASSESSMENT மற்றும் SUMMATIVE ASSESSMENT மதிப்பெண்கள் பதிவு மற்றும் தர மதிப்பீடு பிரித்தல் போன்ற பணிகள் செய்ய உதவியாக இருக்கும். மேலும் மென்பொருள் முழுமையாக அனைத்து பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்பட்ட பிறகு ஆசிரியர்களுக்கு முப்பருவ முறையில் உள்ள CCE சார்பான எழுத்து பணிகள் பெரும் பங்கு குறையும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
DEPARTMENTAL EXAMINATION MAY 2013 - TNPSC NOTIFICATION
துறைத்தேர்வு அறிவிப்பு: 2013 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவிருக்கும் துறைத்தேர்வுகளுக்கு, விண்ணப்பதாரர்களிடமிருந்து இணையதளம் மு்லமாக 15.04.2013. பி.ப 5.45 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
அரசு ஊழியர்கள், அலுவலர்கள், துறைத் தேர்வுகளை எழுத, ஏப்ரல், 15ம் தேதி வரை, "ஆன்-லைன்' வழியாக விண்ணப்பிக்கலாம்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.அரசுத்துறை ஊழியர்கள், ஆசிரியர்கள், பதவி உயர்வு பெறுவதற்காக, துறைத் தேர்வுகளை எழுதுகின்றனர். ஆண்டுதோறும், மே மற்றும் டிசம்பர் மாதங்களில், இந்த தேர்வுகள் நடத்தப்படுகின்றன. அதன்படி, மே மாதம் நடக்கும் தேர்வுக்காக, அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. ஏப்ரல், 15ம் தேதி வரை, தேர்வாணைய இணையதளம் வழியாக, துறைத் தேர்வுகளுக்கு விண்ணப்பிக்கலாம் என, தேர்வாணையம் தெரிவித்துள்ளது.
DEPARTMENTAL EXAMINATION MAY 2013
APPLY ONLINE.....CLICK www.tnpsc.gov.in
>கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற குழு: மத்திய மந்திரி தகவல்
கல்வி கற்கும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற குழு: மத்திய மந்திரி தகவல் இந்திய நாடாளுமன்றம் கடந்த 2009-ம் ஆண்டு கல்வி கற்கும் உரிமைச் சட்டத்தை நிறைவேற்றியது. இந்தச் சட்டம் 2010-ம் ஆண்டு நடைமுறைக்கு வந்தது. இந்த சட்டத்தின் கூறியுள்ளபடி பள்ளிகளில் மாற்றங்களை செய்யவேண்டும். உள்கட்டமைப்பு, விளையாட்டு மைதான வசதிகள் இருக்க வேண்டும், புதிதாக சேர்க்கப்படுபவர்களில் 25 சதவீதத்தினர் பின்தங்கிய நிலையிலிருந்து வந்தவர்களாக இருக்க வேண்டும் என்பவை உள்ளிட்ட பல விதிமுறைகள் கூறப்பட்டடுள்ளன. பள்ளிகள் உள்கட்டமைப்பு வசதிகளை மார்ச் 31-ம் தேதிக்குள் நிறைவேற்ற வேண்டும் என்று அரசு காலக்கெடு நிர்ணையிதிருந்தது. ஆனால் பல பள்ளிகள் இந்த மாற்றங்களை மேற்கொள்ளவில்லை. இது குறித்து மத்திய மனிதவளத்துறை அமைச்சர் பல்லம் ராஜு கூறியதாவது:- வழங்கப்பட்ட காலக்கெடுவுக்குள் பள்ளிகள் கட்டமைப்பு வசதிகளை செய்து முடிக்க வேண்டும் என்பது எங்கள் நோக்கம். ஆனால் பல மாநிலங்களில் இந்த காலக்கெடுவுக்குள் மாற்றங்கள் நிகழாது என்பது தெளிவாக தெரிகிறது. அதற்காக நாங்கள் நோக்கத்தை விட்டுக் கொடுக்க மாட்டோம். 2012-ம் ஆண்டு நடந்த மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில், இந்த கால வரையறையை நீட்டிக்கக் கூடாது என்று ஒருமனதாக முடிவெடுக்கப்பட்டது. அதை செயல்படுத்த புதிய குழு ஒன்றை அமைக்க இருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.
4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம்
4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம் இந்து அறநிலையத் துறையில், உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறையில், 2,800 இடங்களுக்கான உதவி மருத்துவர் தேர்வு என, 4,000 காலி பணியிடங்களை நிரப்ப, தொடர்ச்சியாக, வரும், 30ம் தேதி முதல், பல்வேறு தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இந்து அறநிலையத் துறையில், நான்கு உதவி ஆணையர் பணியிடங்களுக்கான தேர்வுகள், இரு இடங்களுக்கான செயல் அலுவலர் தேர்வுகள் வரும், 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கின்றன. பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், 164 புள்ளியியல் ஆய்வாளர் பணி இடங்களுக்கான தேர்வு, ஏப்.,7ல், நடக்கிறது. சுகாதாரத் துறையில், 2,800 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப, ஏப்ரல், 21ம் தேதி போட்டித் தேர்வு நடக்கிறது. காவல்துறை பயிற்சிப் பள்ளியில், இரு விரிவுரையாளர்களை (சட்டம், நிர்வாகம்) தேர்வு செய்வதற் கான தேர்வு, ஏப்ரல், 27ல், நடக்கிறது. மேலும், கால்நடை துறையில், உதவி மருத்துவர்கள், 921 பேரை, நியமனம் செய்வதற்கான தேர்வு, ஏப்., 28ல், நடக்கிறது. இந்த, ஐந்து வகையான தேர்வுகளிலும், ஏராளமான, தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வதில், டி.என்.பி.எஸ்.சி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது?
கலை, அறிவியல் கல்லூரிகள் திறப்பு எப்போது? மாணவர்கள் குழப்பம் மாணவர்கள் போராட்டங்கள் குறைந்து வரும் நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, மாணவர்களிடம் பரவிய குறுஞ்செய்தியால், கல்லூரி திறப்பு குறித்த விவரம் தெரியாமல், மாணவர்கள் குழப்பத்தில் உள்ளனர். இலங்கை மீது பொருளாதார தடை விதிக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்ச் 9ம் தேதி, லயோலா கல்லூரி மாணவர்கள் எட்டு பேர் உண்ணாவிரத போராட்டத்தை துவங்கினர். மாணவர்களுக்கு ஆதரவாக, தமிழகம் முழுவதும் உள்ள மாணவர்கள் போராட்டத்தில் குதித்தனர். வகுப்புகளை புறக்கணித்து, பல கட்ட போராட்டங்களை நடத்தினர். இதையடுத்து, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து சட்டம், கலை கல்லூரிகளும், கடந்த, 15ம் தேதியும், பொறியியல் கல்லூரிகளுக்கு, கடந்த, 18ம் தேதியும் காலவரையற்ற விடுமுறையை அரசு அறிவித்தது. கல்லூரி விடுதிகளில் தங்கி படித்த மாணவர்களும் வெளியேற்றப்பட்டனர். கல்லூரி தேர்வுகளும், மறுதேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டது. விடுமுறை அறிவிக்கப்பட்டும், மாணவர்கள் ஒன்றிணைந்து, அமைப்புகளை உருவாக்கி, கடந்த, 14 நாட்களாக போராட்டங்கள் செய்தனர். இந்நிலையில், நேற்று மாணவர்கள் சார்பில் எந்தவித போராட்டங்களும் நடைபெறாத நிலையில், இன்று கல்லூரி திறக்கப்படும் என, எஸ்.எம்.எஸ்., மூலம், மாணவர்களிடையே, பரபரப்பாக செய்தி பரவியது. உயர்கல்வி துறை தரப்பில், கல்லூரி திறப்பு குறித்து நேற்று வரை, எந்தவித அறிவிப்பும் வெளியாகாத நிலையில், எஸ்.எம்.எஸ்., குழப்பத்தால், இன்று கல்லூரிகள் திறக்கப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து உயர் கல்லூரி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்லூரி கல்வி மண்டல இணை இயக்குனர் அலுவலகம் மூலம், மாணவர்களின் போராட்ட நிலவரங்கள் குறித்து செய்திகள் சேகரிக்கப்பட்டு, உயர்கல்வி துறைக்கு தகவல் அனுப்பப்பட்டு வருகிறது. அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்களிடமும், மாணவர்களின் போராட்ட நிலவரங்களை, உயர்கல்வி துறை விசாரித்து வருகிறது. மாணவர்களின் போராட்டங்கள் தணிந்துள்ள நிலையில், கல்லூரி திறப்பு குறித்து, உயர்கல்வி துறை விவாதித்து, இன்று முடிவுகள் வெளியாக வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
Subscribe to:
Posts (Atom)