Labels
- Abdul Kalam Quotes (1)
- Kalvi Varam (1)
- LIVE RADIO (1)
- Quotes about Time (1)
- Vivekanandar Quotes (1)
- உதவி கிட்டும் (1)
- எள்ளி நகையாடினால் (1)
- சுவாமி விவேகானந்தர். (1)
- நம்பிக்கை (1)
- விமர்சனம் (1)
GO TO KALVIVARAM.COM
Sunday, May 5, 2013
எங்கள் குரல் கேட்குமா? - TETல் தேர்ச்சி பெற்று பணி நியமனம் பெற்ற பணியாற்றும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களின் கோரிக்கைகள் –சிறப்பு கட்டுரை
இன்று TET தமிழகத்தின் தாரக மந்திரமாக மாறியுள்ளது என்றால் அது மிகையாகாது.அடுத்த TET எப்போது? என்ற கேள்வி எழாத இடம் ஏதும் இல்லை என்ற அளவு TET மீதுமிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காரணம், தேர்வில் வெற்றிப்பெற்றவுடன் பணிநியமனம், அரசு பணி மற்றும் மரியாதை என்பதால் தனியார் நிறுவனத்தில் அதிக ஊதியம்பெற்று வந்த சிலர் கூட TETல் தேர்ச்சி பெற்றவுடன் தங்கள் தனியார் பணியை துறந்து அரசுஆசிரியர் பணிக்கு வந்தனர்.
அனைவருக்கும் தரமான கல்வி, கல்லாமையை இல்லாமை ஆக்குவோம் என்றநோக்கோடு செயல்படும் அரசு. முதலில் TET அறிவித்து அதில் தவறிவர்களுக்கு மீண்டும்மறுதேர்வு வைத்து அனைவரும் வியக்கும் வண்ணம் வெகு நேர்மையான முறையில்அதிரடியாக பணி நியமனம் வழங்கி பலரின் வாழ்வில் ஒளி ஏற்றியதை யாரும் மறுக்கமுடியாது.
பல இலட்சம் பேர் பங்கேற்ற இத்தேர்வில் தங்கள் கடும் முயற்சியால் வெற்றி பெற்றாலும்,தங்களுக்கான பல உரிமைகள் அர்த்தமின்றி மறுக்கப்படுவதாக TETல் தேர்ச்சி பெற்றுபணி நியமனம் பெற்ற இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் கவலைதெரிவித்துள்ளனர். அரசின் அனைவருக்கும் கல்வி என்ற நோக்கை தாங்கள் முழு மூச்சாக ஏற்று எதற்கும் விட்டுக் கொடுக்காமல் செயல்படுத்துவோம் என்பதை நாங்கள் இங்கு உறுதி அளிக்கிறோம். அதே வேளையில் எங்களுக்கான உரிமைகள் தெளிவுபடுத்தப்பட்டால், அது எங்களை பெரிதும் ஊக்கப்படுத்தும்….
பிரச்சனைகள்/ கோரிக்கைகள்:
1.பல இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் கல்வித்தகுதியை மேம்படுத்திக்கொள்ளும்பொருட்டு இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பை (B.Ed) கல்லூரியில் பணிநியமனத்திற்கு முன்பே பயின்று வந்தனர். பணிநியமனம் பெற்ற பின்பு அதை தொடரவாய்ப்பு அளிக்கப்படவில்லை. அப்படி தொடர விரும்பினால் பணியோ, பணி இடத்திற்கோஎவ்வித உத்திரவாதமும் அளிக்க முடியாது என தெரிவித்ததாலும் அதற்கான படிவத்தில்உறுதி கோரியதாலும், பலர் தங்கள் கல்வியை இழந்தனர்.
ஆனால், சில மாவட்டங்களில் இதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உதாரனம்:நாமக்கல், திருச்சி , ஈரோடு மாவட்டங்களில் TET மூலம் பணி நியமனம்பெற்றவருக்கு கல்லூரியில் தன் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பை தொடரஅனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த நடைமுறை அனைவருக்கும்பின்பற்றப்படவில்லை.
பாதிச்சம்பள விடுப்பிற்கு தான் ஐந்து வருட கால பணி அனுபவம் தேவை. தாங்கள் முழுசம்பளமில்லா விடுப்பு கோருவதால் விதிகளில் இடமிருந்தால் தங்களுக்கு உரியவிடுப்பை அளிக்க ஆவண செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர்.
2.இடைநிலை ஆசிரியர்கள் பலர் தங்கள் இளங்கலை பட்டப்படிப்பு (UG) மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்பு (B.Ed) கல்வித்தகுதிகளை ஒரே வேலைவாய்ப்பகஅட்டையிலேயே தான் பதிவு செய்து வைத்திருந்தனர். ஆனால், பணி நியமனம்பெற்றவுடன் வேலைவாய்ப்பக அட்டை இரத்து செய்யப்படுவது வழக்கம். அதன்அடிப்படையில் தங்கள் இடைநிலை ஆசிரியர் கல்வி மட்டும் இரத்து ஆகாமல்தங்களுடைய இளங்கலை பட்டப்படிப்பு மற்றும் இளங்கலை கல்வியியல் பட்டப்படிப்புகல்வித்தகுதிகளும் இரத்தாகும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. அப்படி இரத்தானால், தங்கள்கல்வித்தகுதிகளுக்கான பதிவு மூப்பு காலவதி ஆவதோடு அடுத்த ஆசிரியர் தகுதித்தேர்வை எழுத முடியாத சூழல் ஏற்படும். இதற்கும் பல மாவட்டங்களில் ஒன்றியங்களில்முறையாக அனுமதி வழங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஆனால், பலஒன்றியங்களில் இதற்கு ஆசிரியர்கள் பெரிதும் அலைகழிக்கப்படுகிறார்கள்.
3.அடுத்த TRB - TNTET தேர்விற்கு, இடைநிலை ஆசிரியர்கள்/ பட்டதாரி ஆசிரியர்கள்,பட்டதாரி/ முதுகலை ஆசிரியர் பணியிடத்திற்கான ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும்போட்டி தேர்வுகளை எழுத “தடையில்லா சான்று”(NOC) பெற வேண்டும். பலஅலுவலகங்களில் “தடையில்லா சான்று” வழங்க முடியாது என்றும், சிலஅலுவலகங்களில் தகுதிகாண் பருவம் முடித்தால்தான் வழங்க முடியும் என்றும்தெரிவித்து வருகின்றனர். இதுகுறித்து சரியான நடைமுறை புதிய ஆசிரியர்களுக்குதெரியாததால், பெரும் மனச்சங்கடத்திற்கு உட்பட்டுள்ளனர்.
உரிய தகுதியோடு வேண்டுவோர்க்கு “தடையில்லா சான்று” வழங்கி தங்கள் பதிவுமூப்பை காப்பதோடு அடுத்த ஆசிரியர் தகுதித் தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளை எழுதவாய்ப்பளித்து வழிகாட்ட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
4.இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பலர் இளங்கலை பட்டம்,இளங்கலை கல்வியியல் பட்டம் மற்றும் முதுகலை பட்டம் ஆகியவற்றைமுடித்துள்ளனர். அதற்கான ஊக்க ஊதிய நிர்ணயத்திற்கு “உண்மைத்தன்மை சான்று” பெறகோரினால். “இன்னும் நீங்கள் முறைப்படுத்தப்படவில்லை” (Regularisation) என்றும்“தகுதிகாண் பருவம் (Probation) முடித்தால்தான் “உண்மைத்தன்மை சான்று” பெறவேமுயல வேண்டும், அதன் பிறகு தான் தங்களுக்கு ஊக்க ஊதியம் நிர்ணயித்து வழங்கமுடியும் என தெரிவிக்கின்றனர்.
5.முறையாக கல்லூரியில் பயில்வதற்கு மட்டும் இன்றி தொலைநிலைக் கல்வி (Distance)மூலம் பயில்வதற்கு கூட தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும் என சில ஒன்றியங்களில்கூறுவது, தங்கள் கல்வித்தகுதியினை மேம்படுத்திக்கொள்ள பெரும் தடையாகஉள்ளதாக வேதனை தெரிவித்துள்ளனர்.
இளங்கலை கல்வியியல் பட்டம் (B.Ed) தொலைநிலைக் கல்வி (Distance) மூலம் பயிலஇரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் தேவை. ஆனால், தாங்கள் பணி நியமனத்திற்கு முன்அங்கீகரிக்கப்பட்ட தனியார் பள்ளிகளில் பணியாற்றிய பணிக்காலம் இதற்கு ஏற்புடையதுஎன்பதை ஏற்க மறுப்பதால், தங்களுக்கான கல்வி வாய்ப்பு கேள்விக்குரியாகமாறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.
மேற்கூரிய பிரச்சனைகள் எல்லா ஒன்றியங்களிலும் இல்லை. ஆனால் பெரும்பாலானஒன்றியங்களில் உள்ளது. கல்வித்துறையில் மாபெரும் மாற்றங்களை வரவேற்கத்தகுந்தமுறையில் செயல்படுத்தி வரும் இந்த சீர்மிகு அரசும் அதற்கு இணையாக துரிதமாகஅனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வரும் அனைத்து கல்வித்துறை அதிகாரிகளும்எங்களுடைய கோரிக்கைகளின் மிது கவனம் செலுத்தி எங்களுக்கான நியாயமான உரிமைகளை தெளிவுப்படுத்தி வழிகாட்டி வாய்ப்பளிக்க வேண்டுமென பணிவுடன்கோரிக்கை வைத்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் மாநிலபொதுச் செயலாளர் திரு.முருக செல்வராஜன் அவர்களிடம் கேட்கையில்:
தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறாத 32 பேருக்கு ஆசிரியர் பணி வழங்க உத்தரவு
ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெறாமல் 32 பேர் ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டது செல்லும் என சென்னை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உறுதி செய்தது.
விருதுநகர் மாவட்டம், சாட்சியாபுரத்தைச் சேர்ந்த ஜெயசாந்தி உள்ளிட்ட 32 பேர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி டி.ஹரிபரந்தாமன் இந்த உத்தரவை பிறப்பித்தார்.
பள்ளி ஆசிரியர்கள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என்ற விதிமுறையை மத்திய அரசு 2010 ஏப். 1-இல் கொண்டு வந்தது.
அதற்கு முன்பே எங்களை ஆசிரியர்களாக பணிகளில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்பதல் அளித்தனர். இருப்பினும், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்ற காரணத்தால், எங்கள் பணி நியமனத்துக்கான ஒப்புதலை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் ஏற்க மறுத்துள்ளார்.
ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் போதுமான அளவில் இல்லாத நிலை ஏற்பட்டால், ஓராண்டு காலத்தில் மத்திய அரசை, மாநில அரசு அணுகி தகுதியில் இருந்து விதிவிலக்கு பெறவேண்டும். ஆனால், தமிழக அரசு அவ்வாறு கோரவில்லை. இதனால், பாதிக்கப்பட்டுள்ள எங்களுக்கு பணி வழங்க உத்தரவிடவேண்டும் எனக் குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி டி. ஹரிபரந்தாமன் பிறப்பித்த உத்தரவு:
மத்திய அரசின் சட்ட விதிப்படி படி, ஆசிரியர்களை பணியில் நியமிக்கமுடியாத நிலை ஏற்பட்டால், மாநில அரசு அதற்கான காலக்கெடுவுக்குள் விதிவிலக்கு கோரி விண்ணப்பித்து இருக்க வேண்டும்.
ஆனால், தமிழகத்தில் காலிப்பணியிடங்களை நிரப்ப தகுதியானவர்கள் இல்லாத நிலை ஏற்பட்ட போதும் அரசு அதற்காக மத்திய அரசை அணுகவில்லை. இந்தச் சூழ்நிலையில் 32 மனுதாரர்களையும் ஆசிரியர்களாக பணியில் நியமிக்க மாவட்டக் கல்வி அதிகாரிகள் ஒப்புதல் அளித்ததில் தவறு காணமுடியவில்லை. எனவே, 32 பேருக்கும் அதிகாரிகள் தாற்காலிக ஒப்புதல் அளிக்க வேண்டும். மேலும், அதற்கான ஊதியம் பெறுவதற்கும் அனுமதி வழங்க வேண்டும். இந்த 32 பேரும் 2015 மார்ச் 31-க்குள் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அவ்வாறு தேர்ச்சி பெறாவிட்டால் அவர்களை நீக்கம் செய்து தகுதியானவர்களை நியமிக்கலாம். மாணவர்கள் நலன் கருதி தமிழக அரசு அவ்வப்போது தகுதித் தேர்வுகளை நடத்த வேண்டும் என உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விசாரணை ஜூன் 6-க்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

Subscribe to:
Posts (Atom)