Friday, April 26, 2013


பணி நீட்டிப்பை விரும்பும் AEEO / AAEEO அலுவலர்களுக்கு பணி மாறுதல் மூலம் மீண்டும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியராக நியமனம் செய்ய விவரம் & படிவம் கோரி தொடக்கக்கல்வித் துறை உத்தரவு


அரசு பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் அசத்த, புது திட்டம்!

அரசு தொடக்கப்பள்ளிக் குழந்தைகளும் ஆங்கிலத்தில் பேசும் பயிற்சி திட்டத்தை தமிழக பள்ளிக் கல்வித் துறை அறிமுகம் செய்துள்ளது.
ஆங்கில மோகம் அனைவரையும் அடிமையாக்கி வருகிறது. தங்கள் குழந்தைகள் நுனி நாக்கு ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்பதற்காக பெற்றோர் பலர் குழந்தைகளை தனியார் ஆங்கில மீடியம் பள்ளிகளில் சேர்த்து வருகின்றனர். தனியார் பள்ளிகளின் இந்த போட்டியை சமாளிக்க, அனைவருக்கும் கல்வி இயக்கத்தின் சார்பில், அரசு தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கும் ஆங்கிலப் பயிற்சி அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வயதில் மூத்தவர்களைக் கண்டால் ஆங்கிலத்தில் வணக்கம் தெரிவிப்பது, பொதுஇடங்களில் பழகும்போது ஆங்கில வார்த்தைகளை பயன்படுத்துவது, உடல் உறுப்புகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் ஆங்கில வார்த்தைகளை கற்பிப்பது போன்ற பல பயனுள்ள தகவல்கள் தமிழ்-ஆங்கிலம் கலந்து (பை லிங்குவல்) ரேடியோ மூலம் உரையாடல் வடிவில் கற்பிக்கப்பட உள்ளது.

சென்னை லயோலா கல்லூரியின் ஆங்கிலத் துறை தலைவர் பிரான்சிஸ் தலைமையிலான குழு இப்பயிற்சியை வடிவமைத்துள்ளது. தொடக்கப்பள்ளிக் குழந்தைகளுக்கு ரேடியோ ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டத்தின் முதல் கட்டமாக, வட்டார வள மைய ஆசிரியர் பயிற்றுனர்களுக்கு சென்னையில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிற்சி பெற்ற ஆசிரியர் பயிற்றுனர்கள், ஜூலை 5ல் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி கருத்தாய்வு மையங்களில் (சி.ஆர்.சி.) தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளனர். இத்திட்டத்துக்காக அனைத்து தொடக்கப் பள்ளிகளுக்கும் ரேடியோ வழங்கப்பட உள்ளது. ரேடியோ வழங்குவதற்கு முன் இப்பயிற்சிக்காக குழந்தைகள் தயார்ப்படுத்தப்பட உள்ளனர்.

இது குறித்து அனைவருக்கும் கல்வி இயக்கத்தின், கோவை மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் காளியப்பன் கூறுகையில், “தொடக்கப்பள்ளிகளில் கடந்த ஓராண்டாக நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் ஏ.பி.எல்., பயிற்சி முறை வாயிலாக, ஏற்கனவே மாணவர்கள் சிறந்த ஆங்கிலத் திறனும் படைப்பாற்றலும் பெற்று வளர்கின்றனர்.

தற்போது அமல்படுத்தப்பட உள்ள ‘ரேடியோ இங்கிலீஷ்’ பயிற்சித் திட்டமும் வழங்கப்பட்டால் தனியார் பள்ளி மாணவர்களுக்கு நிகராக அரசுப் பள்ளி மாணவர்களும் ஆங்கில அறிவை பெற்று விடுவர்,” என்றார்.

கள்ளர் சீரமைப்புத் துறை யில்  கள்ளர் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்...அமைச்சர் பதில் 


ஏ.லாசர் : கள்ளர் சீரமைப்புத் துறை யில் தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் 15 எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான ஆசிரியர் களோ, ஆயாக்களோ இதுவரை நியமிக்கப் படவில்லை. ஏற்கனவே 108 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ள சூழ்நிலையில் இந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்த வேண்டிய சிரமமான நிலையை மாற்றிட ஆசிரியர் மற்றும் பணியாளர்களை நிய மிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.

அமைச்சர்: அப்பகுதியில் உள்ளவர் கள் ஆங்கில வழிக்கல்வி பெற வேண்டும் என்பதற்காக எல்கேஜி, யுகேஜி பள்ளிகள் துவங்கப்பட்டது. இப்பள்ளிகளில் 300 மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆசிரி யர் காலிப்பணியிடங்கள் குறித்து முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவ டிக்கை எடுக்கப்படும்.ஏ.லாசர்: 37 கள்ளர் சீரமைப்பு ஆரம் பப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாக கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.அரசாணை எண் 264, 1973ல் போடப் பட்டது. அதனுடைய சிறப்பு விதிகள் தற் கால நடைமுறைகளுக்கு உகந்ததாக இல்லை என்பதினால் அதனை மாற்றிய மைக்க வேண்டுமென்று அங்கே பணிபுரி வோர் கோருகின்றனர். உதாரணத்திற்கு, பள்ளி சூப்பர்வைஸ்சர்களாக லோயர் கிரேடு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள் ளார்கள். இது ஆசிரியர்களுக்கிடையே சில தகுதி பிரச்சனைகளை உருவாக்கி யுள்ளது. இதன் நிலைமை புரிந்து ஏ.இ. ஓ.க்கள் பள்ளிகளை விசிட் செய்வார்கள் என்று அரசாணைப் போட்டும் இதுவரை அமலாகவில்லை. 2.3.2011ல் அரசாணை எண் 86-ன் படி துறை மாறுதல்கள் இதுவரை அம லாகாமல் உள்ளது. இதனால் வெளி மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளர் சீரமைப் புப் பள்ளிகளில் வேலைக்கு சேருபவர் கள் மீண்டும் தங்களது சொந்த மாவட்டங் களுக்கு செல்ல முடியாத நிலைமை தொடர் கிறது. எனவே அரசாணை எண் 86 குறித்தும், அரசாணை எண் 264 குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை களைந் திட ஒரு குழு அமைத்து ஆய்வு செய்திட 

வேண்டும்.அமைச்சர்: அந்தப் பள்ளிகளின் ஆசிரியர் பணி மாறுதல், ஊதியம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.