கள்ளர் சீரமைப்புத் துறை யில் கள்ளர் தொடக்கப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பபடும்...அமைச்சர் பதில்
ஏ.லாசர் : கள்ளர் சீரமைப்புத் துறை யில் தேனி, மதுரை, திண்டுக்கல் ஆகிய மூன்று மாவட்டங்களில் 15 எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகள் துவங்கி நடத்தப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கான ஆசிரியர் களோ, ஆயாக்களோ இதுவரை நியமிக்கப் படவில்லை. ஏற்கனவே 108 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ள சூழ்நிலையில் இந்த எல்.கே.ஜி., யு.கே.ஜி. வகுப்புகளை நடத்த வேண்டிய சிரமமான நிலையை மாற்றிட ஆசிரியர் மற்றும் பணியாளர்களை நிய மிக்க வேண்டுமாய் கேட்டுக் கொள்கிறேன்.
அமைச்சர்: அப்பகுதியில் உள்ளவர் கள் ஆங்கில வழிக்கல்வி பெற வேண்டும் என்பதற்காக எல்கேஜி, யுகேஜி பள்ளிகள் துவங்கப்பட்டது. இப்பள்ளிகளில் 300 மாணவர்கள் படித்து வருகிறார்கள். ஆசிரி யர் காலிப்பணியிடங்கள் குறித்து முதல மைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று, ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப நடவ டிக்கை எடுக்கப்படும்.ஏ.லாசர்: 37 கள்ளர் சீரமைப்பு ஆரம் பப்பள்ளிகள் ஓராசிரியர் பள்ளியாக கடந்த 4 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இங்கு புதிய ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும்.அரசாணை எண் 264, 1973ல் போடப் பட்டது. அதனுடைய சிறப்பு விதிகள் தற் கால நடைமுறைகளுக்கு உகந்ததாக இல்லை என்பதினால் அதனை மாற்றிய மைக்க வேண்டுமென்று அங்கே பணிபுரி வோர் கோருகின்றனர். உதாரணத்திற்கு, பள்ளி சூப்பர்வைஸ்சர்களாக லோயர் கிரேடு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள் ளார்கள். இது ஆசிரியர்களுக்கிடையே சில தகுதி பிரச்சனைகளை உருவாக்கி யுள்ளது. இதன் நிலைமை புரிந்து ஏ.இ. ஓ.க்கள் பள்ளிகளை விசிட் செய்வார்கள் என்று அரசாணைப் போட்டும் இதுவரை அமலாகவில்லை. 2.3.2011ல் அரசாணை எண் 86-ன் படி துறை மாறுதல்கள் இதுவரை அம லாகாமல் உள்ளது. இதனால் வெளி மாவட் டத்தைச் சேர்ந்தவர்கள் கள்ளர் சீரமைப் புப் பள்ளிகளில் வேலைக்கு சேருபவர் கள் மீண்டும் தங்களது சொந்த மாவட்டங் களுக்கு செல்ல முடியாத நிலைமை தொடர் கிறது. எனவே அரசாணை எண் 86 குறித்தும், அரசாணை எண் 264 குறித்தும், அதில் ஏற்பட்டுள்ள சிரமங்களை களைந் திட ஒரு குழு அமைத்து ஆய்வு செய்திட
வேண்டும்.அமைச்சர்: அந்தப் பள்ளிகளின் ஆசிரியர் பணி மாறுதல், ஊதியம் குறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்.
No comments:
Post a Comment