Wednesday, April 17, 2013

பள்ளிக்கல்வித்துறையில் "இரட்டை பட்டம் செல்லாது" என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.


DOWNLOAD HIGHCOURT ORDER CLICK HERE


பள்ளிக் கல்வித் துறையில் இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு இல்லை என வழங்கப்பட்ட தீர்ப்பிற்கு தடை விதித்து உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. சென்ற பதவி உயர்வு கலந்தாய்வின் போது ஏற்கனவே பயின்ற பட்டத்தின் அடிப்படையில் ஒரு வருட காலத்தில் மற்றொரு பட்டபடிப்பை பயின்று அதற்கு பதவி உயர்வு வழங்குவதை எதிர்த்து வழக்கு தொடுக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு கிடையாது" உயர்நீதிமன்ற நீதிபதி திரு. இராம சுப்பிரமணியம் தீர்பளித்தார். இத்தீர்ப்பை  எதிர்த்து (WRIT APPEAL NO.529/2013) திருமதி.பிரேமகுமாரி மற்றும் 100க்கு மேற்பட்ட ஆசிரியர்கள் சேர்ந்து தொடுக்கப்பட்ட வழக்கில், வழக்கறிஞர் திரு.G.சங்கரன் அவர்கள் வாதாடினார் இன்று (10.04.2013) இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் திரு. எலிப்  தர்மா ராவ்  மற்றும் திரு. விஜயராகவன் அவர்கள், மேற்கண்ட  "இரட்டை பட்டங்களுக்கு பதவி உயர்வு கிடையாது" என்ற தீர்ப்பிற்கு தடை விதித்து தீர்பளித்தனர். இதனால் வரும் பதவி உயர்வுகலந்தாய்வில் இரட்டை பட்டங்கள் பயின்றோருக்கு பதவி உயர்வு வாய்ப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு (C.T.E.T) தேர்வு கால நேரம் 90 நிமிடத்திலிருந்து 150 நிமிடமாக உயர்வு

அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.


அஞ்சல் உதவியாளர், அஞ்சல் பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.

அஞ்சல் உதவியாளர்,அஞ்சல் பிரிப்பு உதவியாளர்
தேர்வுக்கான நுழைவுச் சீட்டுகள் இணையதளத்தில்
வெளியிடப்பட்டுள்ளன என்று அஞ்சல் துறை (தமிழ்நாடு)தெரிவித்துள்ளது.இது குறித்து அஞ்சல்
துறை திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி: நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் மற்றும் தினமணி நாளிதழ்களில்
கடந்த ஆகஸ்ட் மாதம் அஞ்சல் உதவியாளர்,அஞ்சல்
பிரிப்பு உதவியாளர் தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது.இதற்கான விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு,தகுதியுள்ள விண்ணப்பதாரர்களின்
பட்டியல் www.indiapost.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இதற்கான தேர்வு ஏப்ரல் 21ஆம் தேதி நடைபெறுகிறது.சென்னை, திருச்சி,புதுச்சேரி,மதுரை மற்றும் கோவை ஆகிய 5
மையங்களில் தேர்வு நடைபெறும்.தேர்வுக்கான
அனுமதி கடிதங்கள் விண்ணப்பதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.அனுமதி கடிதங்களை இணையதளத்திலும் பெற்றுக் கொள்ளலாம் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!


தமிழ் நாடு அரசுப் பணியில் உள்ள பல்வகை விடுப்புகள் மற்றும் அது குறித்த விவரங்கள்!


1. அரசு விடுமுறை நாட்கள். (Govt Holidays)
பண்டிகை விடுமுறை நாட்கள், தேசிய விடுமுறை நாட்கள் முதலியன. அரசிதழ் (கெசெட்) வெளியீடு மூலம் ஆண்டு தோறும் அறிவிக்கப்படுகின்றன.


2. மதச்சார்பு விடுப்பு (Religious / Restricted Holidays)
வரையறுக்கப்பட்ட விடுப்பு என்றும் கூறுவர். ஒரு காலண்டர் ஆண்டில் சுமார் 30 மதச்சார்பு பண்டிகைகளில் "ஏதேனும் மூன்று" நாட்களை ஒரு பணியாளர் துய்க்கலாம். அவர் சார்ந்த மதப் பண்டிகையாக இருக்க வேண்டும் என்பதில்லை.
3. தற்செயல் விடுப்பு ( Casual Leave)
ஒரு காலண்டர் ஆண்டில் 12 நாட்கள் எடுக்கலாம். எல்லாவகை பணியாளர்களுக்கும் உண்டு. விடுப்பு எடுத்த பின்னரும் விண்ணப்பம் கொடுக்கலாம். முன்கூட்டி விண்ணப்பித்தால் குறிப்பாக காரணம் தெரிவிக்க வேண்டியதில்லை.
4. ஈட்டிய விடுப்பு (Earned Leave)
ஒரு பணியாளர் பணி செய்த ஒவ்வொரு 12 நாடகளுக்கு ஒரு நாள் என்ற கணக்கில் அவருக்கு விடுப்பு கிடைக்கும். பணி செய்ததால் கிடைப்பதால் ஈட்டிய விடுப்பு எனப்படுகிறது. 6 மாதத்திற்கு ஒரு முறை 15 என்ற எண்ணிக்கையில் ஒருவரது கணக்கில் வரவு வைக்கப்படும். தகுதி காண் பருவத்தினருக்கு இதில் பாதி நாட்கள் மட்டுமே கிடைக்கும். ஈட்டிய விடுப்பை பணியாளர்கள் துய்க்கலாம், அல்லது சரண்டர் செய்து பணமாகப் பெறலாம்., அல்லது 240 நாட்கள் வரை சேமித்து வைத்து பணி ஓய்வின் போது பணமாகப் பெறலாம்.
5. மருத்துவ விடுப்பு (Medical Leave)
மருத்துவ சான்றின் பேரிலான ஈட்டா விடுப்பு என்றும் அழைப்பர். 60 நாட்கள் வரை விடுப்பு எடுக்க மருத்துவ சான்று இணைக்கவேண்டும். அதற்கு மேல் விடுப்பு எடுத்தால் அலுவலகத் தலைவர் மருத்துவ குழுவின் ஆய்வுக்கு அனுப்புவார். பணி புரிந்த ஆண்டுகளுக்கு ஏற்ப விடுப்பு எடுக்க தகுதியான நாட்கள் மாறுபடும். இரண்டாண்டு பணி முடித்தவர் 90 நாட்கள் எடுக்கலாம். 20 ஆண்டுக்கு மேல் பணிபுரிந்தால் 540 நாட்கள் வரை எடுக்க தகுதி உண்டு.
6. சொந்த காரணங்கள் பேரிலான ஈட்டா விடுப்பு (Unearned Leave on Private Affairs)
சொந்த காரங்களுக்காக எடுப்பது. சான்று தேவையில்லை. பணிக்காலம் 10 ஆண்டுக்குள் இருந்தால் 90 நாட்கள். பணிக்காலம் 10 ஆண்டுக்கு மேல் இருந்தால் 180 நாட்கள் தகுதியானவை ஆகும். தகுதி காண் பருவத்தினருக்கு கிடையாது.
7. மகப்பேறு விடுப்பு (Meternity Leave)
திருமணமான பெண் பணியாளர்களுக்கு மகப்பேறு காலத்தில் 6 மாதம் விடுப்பு கிடைக்கும். உயிருடன் உள்ள இரண்டு குழந்தைகளுக்கு மட்டுமே கிடைக்கும். தகுதி காண் பருவத்தினருக்கும் உண்டு.
8. சிறப்பு தற்செயல் விடுப்பு (Special Casual Leave)
குடும்ப நல அறுவை சிகிச்சை செய்து கொள்ளுதல், மாநில/ தேசிய / சர்வதேச விளையாட்டுப் போட்டிகளில் கலந்து கொள்ளுதல் காரணங்களுக்காக வழங்கப்படும்.
9. மாற்றுப்பணி ஈடுசெய் விடுப்பு (Turn Duty, Compensate Leave)
அலுவலகங்களில் விடுமுறை நாட்களில் சுழற்சி முறையில் பணிசெய்வர். இதற்கு ஈடாக வேறு ஒரு நாளில் விடுப்பு எடுக்கலாம். 6 மாதத்துக்குள் எடுக்க வேண்டும்.
10. இடமாறுதல் - பணி ஏற்பு இடைக்காலம் (Transfer - Joining Time)
இடமாறுதலில் செல்லும் ஒருவருக்கு புதிய பணி இடம் 8 கி.மீ. தூரத்திற்கும் அதிகம் இருந்தால் 6 நாட்கள் தயாரிப்பு நாட்கள் + ஒவ்வொரு 160 கி.மீ. தூரம் வரை ஒரு நாள் பயண நாள் சம்பளத்துடன் துய்க்கலாம். இந்த தகுதியான நாட்களுக்குள் பணியில் சேர்ந்துவிட்டால் துய்க்காத நாட்களை அவரது ஈட்டிய விடுப்பு கணக்கில் சேர்த்துக்கொள்ளலாம்.
எனக்கு தெரிய பணி அனுபவம் உள்ளவர்கள் கூட இன்னும் பிடிபடாமலே உள்ளனர். இன்னும் சந்தேகம் தெளியாமல் பிறரிடம் கேட்டுக்கொள்வதை பார்த்திருக்கிறேன். சிலருக்கு தெரியும். ஆனால் அவர்களை கேட்டால் மூலிகை வைத்தியர் ரகசியம் மாதிரி சொல்லமாட்டார்கள். எனது நினைவுக்கு எட்டியவரை அனைத்து விடுப்புகள் குறித்தும் பகிர்ந்துள்ளேன். உங்களுக்கு நிச்சயம் பயன்படும். பிழைகள் இருப்பின் சுட்டிக்காட்டுங்கள்

பொதுத் தேர்வு முடிவுகள் இனி அரசு இணையதளங்களில் மட்டுமே தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் இந்த ஆண்டு அரசு இணையதளங்களில் மட்டுமே வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அரசு தேர்வுகள் இயக்குநர் வசுந்தரா தேவி அனுப்பியுள்ள கடிதத்தில், இதுவரை அரசு தேர்வுத் துறை ஆண்டுதோறும் நடத்தும் மேல்நிலை மற்றும் எஸ்எஸ்எல்சி தேர்வு முடிவுகள் அரசு இணையதளம் மூலமாகவும், தனியார் இணையதளங்கள் மூலமாகவும் வெளியிட்டு வந்தது. ஆனால், தற்போது அரசு வெளியிட்டுள்ள உத்தரவின் அடிப்படையில், அரசு இணையதளங்களில் மட்டும் தேர்வு முடிவுகளை வெளியிட அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தனியார் இணையதளங்களில் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாவது நிறுத்தப்பட்டுள்ளது