Tuesday, April 30, 2013

              யாராவது இருக்கீங்களா சார் ??????

*அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் பதவி உயர்வின்றி பணியாற்றி 01.06.1988 முதல் 31.12.1995 வரையிலான காலத்தில்
*இடைநிலை (5வது ஊதியக்குழு காலகட்டத்தில்) ஆசிரியர்களாக பணியாற்றிய ஓய்வு பெற்றுள்ள தகுதியுள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு
 *நீதிமன்ற தீர்ப்பின் படி தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் நிலையில் தேர்வு நிலை / சிறப்பு நிலை ஊதியம் வழங்குதல் -
* உச்சநீதிமன்றத்தில் செய்யப்பட உள்ள மறு ஆய்வு / சிறப்பு விடுப்பு மனுவில் வழங்கப்படும் தீர்ப்பிற்குட்பட்டு ஆணை வெளியீடு.

CLICK HERE TO DOWNLOAD G.O 69
CLICK HERE TO READ ON UR  MOBILE

                         ஆசிரியர் தகுதித்தேர்வு(TET) -- 2013

 


  TRB-ஆசிரியர் தகுதித்தேர்வினை (TET) இரண்டு முறை நடத்தியும் இன்னும் தேர்வெழுதுபவர்களுக்கு இத்தேர்வு பற்றிய முழுமையான விழிப்புணர்வோ புரிதலோ இல்லை.  அக்குறையை முடிந்தவரை நீக்குவதே இக்கட்டுரையின் நோக்கம்.
             TET தேர்வு என்பது அனைவருக்கும் கட்டாய இலவச கல்வி உரிமைச்சட்டம் 2009 ன் படி அறிமுகப் படுத்தப்பட்டது. மத்தியிலும் (CTET) வேறு சில மாநிலங்களிலும் அறிமுகப்படுத்தபப்பட்ட பிறகே தமிழகத்தில் TET தேர்வு அறிமுகப்படுத்தப்பட்டது. தகுதியும் திறமையும் வாய்ந்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பதே இதன் நோக்கம்.
            முதல் TET தேர்வு அனைவரின் எதிர்பார்ப்பையும் பொய்யாக்கி வினாக்கள் மிகத் தரமானதாகவும் 90 நிமிடங்களில் பதிலளிக்க முடியாததாகவும் இருந்ததால் அனைவருக்கும் அதிர்ச்சியே மிஞ்சியது. மிகக்குறைந்த அளவே வெற்றி பெற்றனர்.
             இரண்டாவது தேர்வில் வினாக்களின் தரம் ஓரளவு தெரிந்திருந்ததாலும் நேரம் அதிகரிக்கப்பட்டதாலும் ஓரளவு தேர்ச்சி விகிதம் இருந்தது.
             வினாக்கள் கடினமாக இருக்கிறது என்று புலம்புவதை விட அந்த தரத்தில் உங்களுடைய தயாரிப்பு முறைகள் மற்றும் பயிற்சி முறைகள் இருக்கவேண்டும். கேள்வி பதில்களை  மனப்பாடம் செய்து மட்டும் வெற்றி பெற முடியாது. பாடங்களை புரிந்து கொள்ளவேண்டும். அப்போதுதான் பல கடினமான கேள்விகளை புரிந்து கொண்டு விடையளிக்க முடியும்.
             மேலும்  SET, NET    தேர்வு போல  இத்தேர்வும் ஒரு தகுதித்தேர்வு தான்.  இதில் வெற்றிபெற்றால் நிச்சயம் பணி கிடைக்கும் என்று நினைக்கக்கூடாது. அதன்பிறகு தங்களுடைய 10,12ம் வகுப்பு, பட்டபடிப்பு, D.T.Ed., (or) B.Ed.,  ஆகியவற்றில் உங்களது மதிப்பெண் மற்றும் TET தேர்வில் நீங்கள் பெறும் மதிப்பெண் ஆகியவற்றின் அடிப்படையில் கிடைக்கும் கட் ஆப் மதிப்பெண் அடிப்படையிலேயே பணிக்கு தேர்வு செய்யப்படுவீர்கள்.
        இதற்கு முன் நடந்த இரண்டு தேர்வுகளில் வெற்றி பெற்றோரின் எண்ணிக்கை தேவையானதை விட குறைவு. எனவே அனைவருக்கும் பணி கிடைத்தது. ஆனால் இனிவரும் தேர்வுகளில் தேவையை விட வெற்றி பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது.  அந்நிலையில் அதிக கட்ஆப் மதிப்பெண் வைத்திருப்போர்களுக்கு மட்டும் பணி கிடைக்கும். எந்த பாடத்திற்கு எவ்வளவு ஆசிரியர்கள் தேவையென அறிவிக்கப்படுகிறதோ,அவ்வளவு ஆசிரியர்கள் மட்டுமே பணியமர்த்தப்படுவர்.
    குறிப்பாக கம்யூட்டர் சயின்ஸ் போன்ற பாடங்களில், வெற்றிபெற்றாலும் அப்பாடத்தில் காலிபணியிடங்கள் அறிவிக்கப்படும் போதுதான் பணி கிடைக்கும்.
    தேர்வில் வெற்றிபெற்றால் உடனே வேலை உறுதி என்று எண்ணி, பிறகு மனம் உடையக்கூடாது என்பதற்காகவே இந்த தகவல். தேர்வில் வெற்றிபெற்றும் கட்ஆப் மதிப்பெண் குறைவாக பெற்றதால் வேலை கிடைக்காதவர்கள் அடுத்தமுறை மீண்டும் தேர்வெழுதி தங்களுடைய மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்வெழுதி மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம். முடிந்தவரையில் TET தேர்வில் அதிக மதிப்பெண்கள் (அதாவது 135) பெற்றுவிட்டால் வேலை கிடைப்பதற்கான வாய்ப்பும் அதிகரிக்கும்.(அதாவது கட்ஆப் மதிப்பெண்களை அதிகரித்துக்கொள்ளலாம்).

       உங்களுக்கு மகிழ்ச்சி அளிக்கக்கூடிய செய்தி என்னவென்றால்,இத்தேர்வில் வெற்றிபெற்றால் அரசுப்பள்ளிக்கு மட்டுமின்றி  அரசு உதவிபெறும் பள்ளிகளிலும் அரசு ஊதியத்துடன் பணி கிடைக்கும். தனியார் பள்ளிகளிலும் நல்ல சம்பளத்துடன் கூடிய வேலை கிடைக்கும். தற்போது TET தேர்வில் வெற்றிபெற்றோருக்கான தேவை அதிகமாகவே உள்ளது என்பதை மனதில் கொண்டு தேர்வுக்கு மனஉறுதியுடன் தயார்செய்தால் உங்களுக்கு வெற்றி நிச்சயம்.
     தற்போது B.Ed, (or) DT.Ed, 2 ம் ஆண்டு படித்துக்கொண்டிருப்போரும் இப்போதிருந்தே தேர்வுக்கு தயாராகலாம்.
          இத்தேர்வைப்பற்றிய முறையான பார்வை,  சரியான வியூகம்,கடின உழைப்பு ஆகியவை இருந்தால் இத்தேர்வில் வெற்றிபெறுவது என்பது ஒன்றும் சவாலான செயல் அல்ல. அனைவரும் தேர்வில் வெற்றிபெற எமது நிறுவனம் சார்பிலும் கல்விவரம் சார்பிலும் வாழ்த்துகிறோம்.                                                                        
நன்றி : 
------------------------------------------------------------------------------------------------------------------------------------

            ஆசிரியர் தகுதி தேர்வு... தயாராவது எப்படி?

நாங்கள் காரைக்கால் பகுதியிலிருந்து சமீபத்தில்தான் நாகப்பட்டினம் குடிபெயர்ந்து இருக்கிறோம். எம்.எஸ்சி., பி.எட் வரையிலான என்னுடைய பள்ளி, கல்லூரிப் படிப்புகளை புதுவை அரசின் கீழ் முடித்திருக்கிறேன். தற்போது தமிழக அரசின் ஆசிரியர் பணிக்கான டி.இ.டி தேர்வு எழுத முடியுமா? டி.இ.டி தேர்வெழுத என்ன மாதிரியான தயாரிப்புகளை மேற்கொள்ள வேண்டும்?''பெ.வெங்கடாசலம், நிர்வாக இயக்குநர், நேஷனல் இன்ஸ்டிட்யூட், மதுரை:''தமிழக அரசின் போட்டித் தேர்வுகளில் கலந்துகொள்ளவும், பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கவும் தமிழக வேலைவாய்ப்பு அலுவலகத்தில் முறைப்படி பதிவு செய்திருக்க வேண்டும். இதற்கு உங்கள் கல்விச் சான்றிதழ்கள், தற்போதைய தமிழக முகவரி அத்தாட்சி ஆகியவற்றுடன் உங்கள் பகுதி வேலைவாய்ப்பு அலுவலகத்தை நாடுங்கள்.தமிழ்நாடு ஆசிரியர் தகுதித்தேர்வு டி.என்.டி.இ.டி (TNTET -Tamil Nadu Teachers Eligibility Test) என்பது இரண்டு தாள்களைக் கொண்டது.3 மணி நேரம் கொண்ட இந்தத் தேர்வுகளை ஆசிரியர் தேர்வு வாரியமான டி.ஆர்.பி (TRB-Teachers Recruitment Board) நடத்துகிறது. இத்தேர்வு, இரண்டு தாள்களாக நடத்தப்படும்.

தாள்-I... 1-5 வகுப்பு வரை கற்பிக்கும் ஆசிரியர்களுக்கானது. டி.டி.எட் (D.T.Ed) எனப்படும் ஆசிரியர் பட்டயத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், இந்தத் தேர்வு எழுதுவார்கள். குழந்தை மேம்பாடும் கற்பித்தலும், தமிழ், ஆங்கிலம், கணிதம், சூழ்நிலையியல் என மொத்தம் 5 பாடங்களில் இருந்து தலா 30 மதிப்பெண்கள் வீதம் 150 மதிப்பெண்களுக்கான தாள் இது.
தாள்-II... 6-8 வகுப்பு வரை பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கான தகுதித்தேர்வு. கலை அல்லது அறிவியல் பட்டப்படிப்போடு பி.எட் கல்வியியல் படிப்பை முடித்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம். அறிவியல் பிரிவை சேர்ந்தவர்களுக்கு குழந்தை மேம்பாடும் கற்பித்தல் முறைகளும், தமிழ், ஆங்கிலம் இவற்றில் தலா 30 மதிப்பெண்களோடு கணிதம், அறிவியல் இவற்றை உள்ளடக்கி 60 மதிப்பெண்களுமாக, மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு வினாத்தாள் அமைந்திருக்கும். கலைப்பிரிவு ஆசிரிய பட்டதாரிகளுக்கு இதே கேள்வித்தாளில் கணிதம் அறிவியல் வினாக்களுக்கு பதிலாக சமூக அறிவியலில் இருந்து 60 வினாக்கள் அமைந்திருக்கும்.
ஆக, தாள்- I என்பது இடைநிலை ஆசிரியர்களுக்கானது, தாள்- II என்பது பட்டதாரி ஆசிரியர்களுக்கானது. எனினும், ஆசிரியப் பட்டயம் தகுதியோடு... கலை அறிவியல் பட்டம் மற்றும் பி.எட் முடித்து பட்டதாரி ஆசிரிய தகுதியையும் உயர்த்திக் கொண்டவர்கள் இந்த இரண்டு தாள்களையும் எழுதலாம். இந்த வகையில்இடைநிலை, பட்டதாரி என இரண்டு பிரிவுகளில் தங்கள் தகுதியை உறுதிபடுத்திக் கொள்ளலாம்.தாள் - I எழுதுபவர்கள் 1 - 5 வரையிலான வகுப்பு பாடப்புத்தகங்களில் ஆழமாகவும், 6 - 8 வரையிலான வகுப்பு பாடங்களில் ஓரளவேனும் தயாராக வேண்டும். கூடவே, ஆசிரியர் பட்டய படிப்புக்கான கல்வியியல் மற்றும் உளவியல் பாடத்திலும் தயாராவது அவசியம். தாள்- II எழுதுபவர்கள் 6 - 10 வரையிலான தங்கள் பிரிவு பாடங்களில் ஆழமாகவும் 11 மற்றும் 12 வகுப்புகளில் தங்கள் பிரிவு பாடங்களில் ஓரளவுக்கும் தயாராக வேண்டும். கூடவே பி.எட் பாடத்திட்டத்தில் உள்ள கல்வியல் மற்றும் உளவியலில் நன்கு தயாராவதும் அவசியம்.150 வினாக்களில் ஒவ்வொரு சரியான விடையும் ஒரு மதிப்பெண் பெறும். வினாக்கள் அனைத்தும் 'அப்ஜெக்டிவ் டைப்' எனப்படும் 'கொள்குறி' வினா வகையை சேர்ந்தவை. 150 மதிப்பெண்களில் 60 சதவிகிதம், அல்லது 90 மதிப்பெண் பெற்றவர்கள் தகுதி நிலையை எட்டுகிறார்கள்.காலிப்பணியிடங்களைப் பொறுத்து அரசு அறிவிக்கும்போது இந்த டி.இ.டி தேர்வில் தகுதி நிலையை எட்டியவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். தகுதி பெறாதவர்கள் அடுத்த ஆண்டு அல்லது அரசு அறிவிக்கும் அடுத்த தகுதித் தேர்வில் தங்கள் திறமையை நிரூபிக்கலாம். தற்போது அரசு ஆசிரியர் காலிப்பணியிடங்கள் அதிகம் என்பதால், தகுதித்தேர்வில் வெற்றி பெற்ற அனைவருக்குமே பணியிடம் உறுதியாகி வருகிறது. ஒருவேளை காலிப்பணியிடங்களின் எண்ணிக்கையைவிட தகுதியாளர்களின் எண்ணிக்கை அதிகமாகும்போது போட்டியை நிர்ணயிக்க, டி.இ.டி மதிப்பெண்ணோடு ப்ளஸ் டூ, பட்டயம் அல்லது கல்லூரி மதிப்பெண்களுக்கும் குறிப்பிட்ட புள்ளிகள் வழங்கி இறுதி முடிவு எடுக்கப்படும், அல்லது அரசின் அப்போதைய முடிவின்படி மாறுதலுக்கு உள்ளாகலாம்.தேர்வுக்குத் தயாராவதில் அத்தியா வசிய அடிப்படை... மாதிரித் தேர்வுகளை நீங்களாகவே அதிகம் எழுதிப்பார்ப்பதில் இருக்கிறது.ஏனெனில், இதுவரை நடந்திருக்கும் ஒரு தேர்வு மற்றும் ஒரு மறுதேர்வு இவற்றின் அனுபவ அடிப்படையில், தேர்வெழுதியவர்கள் வினாத்தாளில் கடினத்தன்மை மற்றும் நேரமின்மை இவற்றை தேர்வு தடுமாற்றங்களாக உணர்ந்திருக்கிறார்கள். எனவே, கடின பயிற்சி மற்றும் நேர நிர்வாகம் இவற்றை கவனத்தில் கொண்டு தேர்வுக்குத்தயாராகலாம். தனியார் பயிற்சிகள் மற்றும் கைடுகள் வெளி மார்க்கெட்டில் ஏராளமாக கிடைக்கின்றன. தேவையெனில் அவற்றில் தகுதியானவற்றை அணுகி பயன்பெறலாம். மாதிரி வினாத்தாள் உள்ளிட்ட கூடுதல் தகவல்களுக்குhttp://trb.tn.nic.in/என்ற ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தை நாடுங்கள்.  Thanks to aval vikatan.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வு முடிவு இன்று (30.04.2013) வெளியிடப்படுகிறது

தமிழ்நாடு திறந்த நிலை பல்கலைக்கழகம் கடந்த ஜனவரி மாதம் நடத்திய இளநிலை, முதுகலை பட்டப்படிப்பு தேர்வுகள், சான்றிதழ் படிப்புகள் தேர்வு ஆகியவற்றின் முடிவு இன்று (செவ்வாய்க்கிழமை) இணையதளத்தில் வெளியிடப்படுகிறது.

 (www.tnou.ac.in.) மாணவர்கள் மறு மதிப்பீடு, மறு கூட்டல், விடைத்தாளின் நகல் ஆகியவற்றிற்கு 21 நாட்களுக்குள் (மே 5–ந்தேதிக்குள்) விண்ணப்பிக்கலாம்.
இந்த தகவலை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக தேர்வுக்கட்டுப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வு குறித்த விழிப்புணர்வுத் தகவல்கள்

* இவ்வாண்டு மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு ஆன்லைனிலும் நடக்கலாம் அல்லது வழக்கமான முறையிலும் நடக்கலாம். எப்படியாயினும் மாறுதல் கோரும் விண்ணப்பத்தினை உரிய முறையில் சமர்ப்பிப்பதும் பதவி உயர்விற்கான தேர்ந்தோர் பட்டியலில் தகுதியானவர்களின் பெயர்கள் வரிசை முறைப்படி உள்ளதைச் சரிபார்த்துக் கொள்வதும் ஆசிரியர்களின் கடமையாகும்.
 
 
* மாறுதல் குறித்த அரசாணையும் இயக்குநரகத்தால் வெளியிடப்படும் வழிகாட்டு நெறிமுறைகளும் வெளியான பின்னரே கலந்தாய்வு பற்றித் தெளிவான நிலைக்கு வரமுடியும். ஆனாலும் ஆசிரியர்கள் சற்று முன்னேற்பாடாகவும் விழிப்புணர்வுடனும் இருப்பது அவசியம்.

* சிறப்பு முன்னுரிமைக்கான சான்றுகள், வாழ்க்கைத் துணைவரின் பணிச்சான்று போன்றவற்றை முன்கூட்டியே பெற்று வைத்துக் கொள்ளவும். ஒருசில வருடங்களில் நடந்த மாறுதலின்போது கணவன் / மனைவி பணிபுரியும் இடங்களுக்கு இடையேயான தொலைவு குறும அளவு நிர்ணயிக்கப்பட்டிருந்ததால் குறிப்பிட்ட தொலைவுக்கிடையே பணிபுரியும் தம்பதியர் இம்முன்னுரிமையை இழந்தனர். மேலும் ஒருமுறை இச்சலுகையைக் கொண்டு மாறுதல் முன்னுரிமை பெற்றவர்கள் அடுத்துவரும் மூன்றாண்டுகளுக்கு மீண்டும் அதே முன்னுரிமையைப் பெற முடியாது என்பது போன்ற நெறிமுறை விதிகள் வெளிவர வாய்ப்புண்டு. பதவி உயர்வுக்கான தேர்ந்தோர் பட்டியலில் (பேனல்) உள்ளவர்கள் அசல் மற்றும் இரண்டு செட் கல்விச் சான்றுகளைத் தயாராக வைத்திருக்கவும்.

* தற்போதுள்ள நிலவரத்தை மட்டுமே வைத்து காலிப்பணியிடங்களை அறுதியிட்டுக் கூற இயலாது. முதல் கட்டக் கலந்தாய்வின் பின் ஏற்படும் காலிப்பணியிடங்கள் நீங்கள் எதிர்பாராத வகையில் மாற்றத்திற்குட்பட்டது. அதனால் மாறுதல் கல்ந்தாய்வில் கலந்து கொண்டாலும் கலந்துகொள்ள முடியாத சூழல் ஏற்பட்டாலும் மாறுதல் விண்ணப்பத்தினை உரிய காலத்தில் ஒப்படைப்பது உசிதம். ஒருவேளை உங்களுக்குத் தோதான இடம் பின்னர் காலியாகும் நேர்வில் "அடடா நாம் முன்னரே கலந்தாய்வுக்கு விண்ணப்பித்திருந்தால் இந்த இடத்திற்கு மாறுதல் பெற்றிருக்கலாமே, வாய்ப்பு கைநழுவி விட்டதே!" என்று பின்னர் வருத்தப்படக்கூடாது.

* மாறுதல் விண்ணப்பத்தை ஒப்படைக்கும் போதே அத்தாட்சிக்கான ஒரு விண்னப்பத்தைச் சேர்த்தே வழங்க வேண்டும். அதில் அலுவலரின் கையொப்பம் பெற்றுப் பாதுகாப்பாக வைத்துக் கொள்ள வேண்டும். குறிப்பாக மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருவோருக்கு இது மிகவும் அவசியம் என்பதைக் கவனத்தில் கொள்க.

* ஒன்றியத்திற்குள் மாறுதல் கோருவதற்குத் தனியாகவும் ஒன்றியம் விட்டு ஒன்றியம் / மாவட்டம் விட்டு மாவட்டம் மாறுதல் கோருவதற்கும் தனித்தனியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.

* மாறுதல் விண்ணப்பங்கள் பெற்றபின் அலுவலகத்தில் 'அ' பதிவேடு, 'ஆ' பதிவேடு போன்ற தொகுப்புப் பட்டியல்கள் தயாரிக்கப்படும். அதில் மாறுதல் கோருவோரின் விவரங்கள் சரியாகக் குறிப்பிடப்பட்டுள்ளனவா என்பதை ஊர்ஜிதம் செய்துகொள்ளவும்.
-- 2 --

* மனமொத்த மாறுதல் கோருவதென்றால் வழக்கமான மாறுதல் விண்ணப்பப் படிவத்துடன் முகப்புக் கடிதம் ஒன்றையும் இணைத்துப் பணிந்தனுப்ப வேண்டும். முகப்புக் கடிதத்தில் அனுப்புநர் முகவரியில் தற்போது பணிபுரியும் பள்ளியையும் கடித விவரத்தில் மாறுதல் கோரும் பள்ளியையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.

பெறுநர்: மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர்.
வழி: 1. தலைமையாசிரியர்,
2. உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்.

உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரிவோருக்கு
பெறுநர்: மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்
வழி: 1. தலைமையாசிரியர்,
2. மாவட்டக் கல்வி அலுவலர்.
இதற்கும் ஒரு அத்தாட்சி பெற்று வைத்துக் கொள்ளவும்.

* மாறுதல் / பதவி உயர்வு பெறும் பள்ளிக்கும் தற்போது பணிபுரியும் பள்ளிக்கும் இடையே குறைந்த பட்சம் 8 கி.மீ தொலைவு இருந்தால் பணியேற்பிடைக்காலம் (குறைந்தது 5 நாட்கள், தொலைவைப் பொறுத்து அதிகரிக்கும்) கிடைக்கும் இதை அனுபவிக்கலாம் அல்லது ஈட்டிய விடுப்புக் கணக்கில் சேர்த்துக் கொள்ளலாம்.

* மாறுதல் / பதவி உயர்வுக்கான கலந்தாய்வு நாளன்று உரிய நேரத்திற்கு முன்னதாகவே கலந்தாய்வு நடக்கும் இடத்திற்குச் சென்று விடுங்கள். உயர்கல்வித் தேர்வு, பயிற்சிப் பணிமனை, மருத்துவ சிகிச்சை போன்ற காரணத்தால் நீங்கள் செல்ல முடியாத சூழல் எனில் உங்கள் கணவர் / மனைவி / பெற்றோர் / உடன்பிறந்தோர் எவரையேனும் அனுப்புவதாக இருந்தால் ஒரு தாளில் நீங்கள் வர முடியாமைக்கான காரணத்தைக் குறிப்பிட்டு உங்கள் சார்பாக உங்களால் பரிந்துரைக்கப்படும் நபர் கலந்துகொள்ள அனுமதி வேண்டி மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் / முதன்மைக் கல்வி அலுவலருக்கு விண்ணப்பம் எழுத வேண்டும். அதில் உங்களுக்குப் பதிலாகக் கலந்து கொள்வோரின் பெயர், உறவுமுறை குறிக்கப்பட்டு மாதிரிக் கையொப்பம் பெறப்பட்டு அதன்கீழ் உங்களால் கையொப்பமிடப்பட வேண்டும். துறை உயர் அதிகாரியின் அனுமதி இருப்பின் விதிகளுக்குட்பட்டு இம்முறை ஆவன செய்யப்படலாம்.


* கலந்தாய்வு முறையைக் கல்வித்துறையில் அறிமுகப்படுத்திய இந்த அரசு, இவ்வாண்டு நேர்மையான முறையில் அனைத்துத் தரப்பு ஆசிரியர்களும் நம் அமைப்புகளும் பாராட்டும்படியான வெளிப்படையான ஒற்றைச் சாளர முறைக் கலந்தாய்வினைச் சிறந்த முறையில் நடத்தும் என்ற நம்பிக்கையோடு மாறுதல் கோரும் அனைவரும் தாங்கள் விரும்பும் இடத்திற்கு மாறுதல் பெறவும், பதவி உயர்வு பெறுவோரின் பணி மென்மேலும் சிறக்கவும் வாழ்த்துகிறோம்..!!!

பள்ளிக்கல்வி - அனைத்து உயர்நிலை / மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் அருகாமையிலுள்ள தொடக்க / நடுநிலை மற்றும் நர்சரி பள்ளி மாணவர்களை 6 மற்றும் 9 ஆம் வகுப்புகளில் மாணவர்களை 30.04.2013 அன்று சேர்க்க நடவடிக்கை எடுக்க இயக்குநர் உத்தரவு.