Thursday, May 9, 2013


முதுகலை ஆசிரியர் போட்டித்தேர்வு அறிவிப்பை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம். விண்ணப்பங்கள் வழங்கப்படும் நாள்:30.05.2013 கடைசி தேதி :14.06.2013 தேர்வு நாள் : 21.07.2013 மொத்தப்பணியிடங்கள்: 2881


PG Asst - TRB EXAM
 
TOTAL VACANCY 2881 
Tamil-605, 
English -347
Maths-288
Physics-228
Chemistry-220,

பன்னிரெண்டாம் வகுப்பு மறுகூட்டல் விண்ணப்பிப்பதற்கான வழிமுறைகள்


மார்ச் 2013 பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகல் பெறவும், மறு கூட்டலுக்கும் மே 10-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அரசு தேர்வுகள் இயக்கநர் வெளியிட்டுள்ள செய்தியில்: பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத் தாள் நகலைப் பெறவும், மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்கவும் மே 10-ம் தேதி முதல் மே 13-ம் தேதி வரை www.dge.tn.nic.in என்ற இணையதளத்தில் ஆன்-லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். ஒவ்வொரு பாடத்துக்கும் தனித் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.ஆன்-லைன் மூலமே விடைத் தாள் நகலை மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்பதோடு, மறுகூட்டல் முடிவுகளையும் அறிந்து கொள்ளலாம். இதற்கு விடைத்தாள் நகல் கோரி விண்ணப்பிக்கும்போது பதிவிறக்கம் செய்த ஒப்புகைச் சீட்டை மாணவர்கள் பத்திரமாக வைத்திருக்க வேண்டும். அதிலுள்ள விண்ணப்ப எண்ணைப் பயன்படுத்தியே நகலை பதிவிறக்கம் செய்ய முடியும்.

கட்டணம் எவ்வளவு? விடைத்தாள் நகல் பெற மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 550-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 275-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.மறு கூட்டலுக்கு விண்ணப்பிப்போர் மொழிப் பாடம் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு தலா ரூ. 305-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 205 கட்டணம் செலுத்த வேண்டும்.இந்த கட்டணத்தை இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்த சலான் மூலம் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா வங்கிக் கிளைகளில் செலுத்த வேண்டும்.

மறுமதிப்பீடு: மாணவர்கள் விடைத்தாள் நகலைப் பெற்ற பிறகே, மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.மறு மதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் மொழிப் பாடங்களுக்கு தலா ரூ. 1010-ம், பிற பாடங்களுக்கு தலா ரூ. 505-ம் கட்டணம் செலுத்த வேண்டும்.மதிப்பெண் சான்றிதழ்: பிளஸ்-2 தேர்வு எழுதிய மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலும், தனித் தேர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களிலும் மே 27-ம் தேதியன்று மதிப்பெண் சான்றிதழ்களைப் பெற்றுக் கொள்ளலாம். சிறப்பு அனுமதித் திட்டத்தின் கீழ் (தட்கல்) விண்ணப்பித்து, தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு தபால் மூலம் அவர்களுடைய வீட்டு முகவரிக்கு மதிப்பெண் சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும்.

படிப்பை தேர்ந்தெடுப்பதில் குழப்பமா?

பிளஸ் 2 முடித்த அனைவருக்கும் அடுத்து என்ன படிப்பை தேர்ந்தெடுப்பது என்பதில்தான் குழப்பம் அதிகமாக இருக்கும். குழப்பத்தை தீர்ப்பதற்கு நம்மை நாமே ஓர் ஆய்வுக்கு உட்படுத்தினால் எளிதாக விடை கண்டுகொள்ளலாம். அதற்கு முதலில் நம்மிடம் உள்ள திறன்கள் என்ன என்பதை காண வேண்டும்.

எப்படி திறன்களை கண்டுகொள்வது?

உங்களுக்கு எந்த துறையில் ஈடுபாடு உள்ளது என கண்டு கொள்ளுங்கள். திடீரென்று அந்தத் துறையின் மேல் ஆர்வம் வந்திருக்கிறதா? அல்லது இயற்கையாகவே அந்தத்துறையில் உங்களுக்கு ஆர்வம் இருந்திருக்கிறதா என்பதை காணவும்.
எடுத்துக்காட்டாக சிறு வயதில் இருந்தே அதிக அக்கறையுடன் பணம் மற்றும் நிதி நிர்வாகத்தை சிறப்பாக மேற்கொண்டிருக்கிறீர்கள் எனில், அந்ததுறையின் மீதும் ஈடுபாடும் இருக்கிறது என்றால் நிதித்துறையை தாராளமாக தேர்ந்தெடுக்கலாம்.

பெற்றோர்கள்/ ஆசிரியர்களிடம் ஆலோசனை கேட்கலாமா?

உங்கள் தனித்திறமையை, அக்கறை கொண்ட ஆசிரியர்கள் கண்டுகொள்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. நீங்கள் கணிதத்தில் திறமையுள்ளவர்களாக இருக்கிறீர்களா? அல்லது அறிவியலில் ஈடுபாடு கொண்டவரா? மொழித் திறமையுடையவரா? என்பதை ஆசிரியர்கள் கண்டுகொள்ளலாம்.
அதே போன்று சிறு வயதில் இருந்து உங்களை கவனித்து வரும் பெற்றோரிடம் உங்கள் தனிப்பட்ட திறமைகள், கவனம், ஈடுபாடு குறித்து ஆலோசனை செய்வதால், சரியான வழியை கண்டுகொள்வதற்கு வாய்ப்புகள் இருக்கிறது.

எந்த மாதிரியான ஆலோசகர்களை அணுகலாம்?

பல்வேறு வகைகளில் உங்களை பரீட்சித்து பார்த்து, நீங்கள் அந்த குறிப்பிட்ட துறைக்கு ஏற்றவரா? என்பதை ஆராய்ந்து கண்டறிபவர்களாக இருக்க வேண்டும். உங்கள் திறமையை, ஆளுமையை கண்டு கொள்பவர்களாக இருக்க வேண்டும். உங்களிடம் இருக்கும் திறமைகள் எந்த துறைக்கானவை என்பதை கண்டுகொண்டு அந்தத்துறையில் என்ன பாடத்தை தேர்ந்தெடுக்கலாம் என்பதை தெளிவாக சொல்லக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

அதிக வருமானம் தரக்கூடிய படிப்புகள் எது?

படிப்புகள் அனைத்துமே அதிகம் வருமானம் தரக்கூடியதுதான். படித்த படிப்பினை எப்படி நம் திறமையின் மூலம் பயன்படுத்துகிறோம் என்பதில் தான் இருக்கிறது. அதனால் இந்தப் படிப்புதான் வருமானம் தரக்கூடியது என கூற முடியாது.

ஆர்வத்துடன் படிப்பதற்கு அவசியமானவை என்ன?

மிகுந்த ஈடுபாடு.
அர்ப்பணிப்பு உணர்வு.
படிப்பின் மேல் காதல்.
புரிந்து கொள்ளும் ஆர்வம்.
சாதிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை.

அவ்வப்போது படிப்பதை படித்துவிட வேண்டும்: முதல் மாணவி காவ்யா

ஒட்டுமொத்த அளவில், 1192 மதிப்பெண்கள் பெற்று, மாநிலத்திலேயே முதல் மாணவியான தேறிய காவ்யா கூறுவது,
எனக்கு கிடைத்த சிறப்பான கோச்சிங் மிக முக்கியமானது. இந்த கோச்சிங் வகுப்பிற்கு, தினந்தோறும் காலைவேளையில், மாணவர்கள், தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அவர்கள் அன்றைய தினம் பள்ளிக்கு விடுமுறை எடுத்தாலும்கூட. இதனால்தான் அனைத்தையும் சிறப்பாக கற்றுக்கொள்ள முடிந்தது. வெறும் புத்தகங்களில் இருப்பதை மட்டுமே கற்றுக்கொடுக்காமல், பாடத்திற்கு வெளியேயும் விஷயங்களை கற்றுக்கொடுத்தார்கள். எனது ஆசிரியை எலிசபெத் செய்த உதவியை மறக்க முடியாது.
பொதுவாக, மாணவர்களுக்கு டெஸ்ட் வைப்பதில் பல நுட்பங்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். நன்றாக படிக்கும் மாணவர்கள் மற்றும் நன்றாக படிக்காத மாணவர்கள் என்று பிரித்து பார்க்காமல், அனைவருக்கும் சிறப்பான உற்சாகம் கொடுக்க வேண்டும்.
நேர மேலாண்மை என்பது மிகவும் முக்கியம். படித்ததை எழுதிப்பார்க்க வேண்டும். பொழுதுபோக்கு அம்சங்களுக்கென தனியாக நேரம் ஒதுக்கிக் கொள்ளலாம். ஆனால், அந்தந்த நேரத்தில் படிப்பதை படித்துவிட வேண்டும். நாம் எழுதும் மாதிரி தேர்வுகளின் விடைத் தாள்களை பார்த்து, நமது நிறை-குறைகளை தெரிந்துகொண்டு சரிசெய்ய வேண்டும். ஐயோ, படிக்க வேண்டுமே என்ற மன அழுத்தத்தை அதிகரித்துக் கொள்ளாமல், இயல்பாக படிக்க வேண்டும். என் வீட்டைப் பொறுத்தவரை, என் தந்தை என்னை நச்சரிக்காமல், சுதந்திரம் கொடுத்தார்.

எதிர்கால ஆசை

எனக்கு CA படிக்க வேண்டும் என்ற தணியாத ஆசை உண்டு. ஏனெனில், எனது குடும்பத்தில், மருத்துவர்கள் மற்றும் பொறியாளர்கள் உள்ளனர். அவர்களின் பணி அனுபவம் பற்றி நான் அறிவேன். எனக்கு, தனிப்பட்ட முறையில் கணக்கியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடங்களில் ஆர்வம் உண்டு. மேலும், CA முடித்தவர்களுக்கு, இந்த சமூகத்தில் தனி மரியாதை உண்டு. இதன் காரணமாகவே, நான் CA படிக்க விரும்புகிறேன்.

பாட வாரியாக மாநில அளவில் முதலிடம் பிடித்தவர்கள்பிளஸ் 2 தேர்வில் பாட வாரியாக முதலிடம் பிடித்தவர்கள் பெயர், பள்ளிக்கூடம், பாடத்தில் எடுத்த மதிப்பெண்கள், பிரிவு வாரியாக எடுத்த மதிப்பெண்கள் மற்றும் மொத்த மதிப்பெண்கள் விபரம்

ஆங்கிலம்

1: ரெங்கா - ஸ்ரீ ஜெயன் எஸ்.வி. பள்ளி, சிங்காநல்லூர் - 197 - 11632: பாலாஜி - பாரதி மெட்ரிக் பள்ளி, கோயம்புத்தூர் - 196  - 11913: கதீஜா - அவிலா பள்ளி, வேலாண்டிபாளையம் - 196 - 1190

இயற்பியல்


1: அபினேஷ் - கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் - 200 - 800 - 1189
2: பழனிராஜ் - வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளி - 200 - 800 - 1188
3: ரவீனா - எஸ்.வி. மந்திர் மெட்ரிக் பள்ளி, ஊத்தங்கரை - 200 - 800 - 1187
வேதியியல்
1: அபினேஷ் - கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் - 200 - 800 - 1189
2: பழனிராஜ் - வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளி - 200 - 800 -1188
3: ரவீனா - எஸ்.வி. மந்திர் மெட்ரிக் பள்ளி - 200 - 800 -1187
உயிரியல்
1: அபினேஷ் - கிரீன் பார்க் மெட்ரிக் பள்ளி, நாமக்கல் - 200 - 800 -  1189
2: பழனிராஜ் - வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளி - 200 - 800 -1188
3: ரவீனா - எஸ்.வி. மந்திர் மெட்ரிக் பள்ளி - 200 - 800 - 1187
தாவரவியல்
1: அபிநயா - கிறிஸ்து ராஜா மெட்ரிக் பள்ளி, மார்த்தாண்டம் - 200 - 767 - 1139
2: வித்யா சிவசங்கரி - பி.கே.என். பெண்கள் பள்ளி, திருமங்கலம் - 200 - 764 - 1135
3: வளர்மதி - ஹோலி கிராஸ் பெண்கள் பள்ளி, தூத்துக்குடி - 200 - 763 - 1136
விலங்கியல்
1: தனலட்சுமி - எஸ்.எச்.என். பெண்கள் பள்ளி, சிவகாசி - 198 - 760 - 1128
2: மாரியம்மாள் - அரசு மேல்நிலைப் பள்ளி, கழுகுமலை - 198 - 631 - 0964
3: ஆஸ்லே டேனியல் - பொஜெஸ்லி பள்ளி, நாகர்கோவில் - 197 - 783 - 1130
புள்ளியியல்
1: சகானா - சென்னை - 200 - 800 - 1178
2: பால அபிராமி - பி.வி.பி. பலள்ளி, ஈரோடு - 200 - 799 - 1177
3: உமா சங்கரி  - ஆக்ஸிலியம் பெண்கள் பள்ளி, வேலூர் - 200 - 798 - 1177
கணினி அறிவியல்
1: ராஜேஸ்வரி - சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் பள்ளி - 200 - 800 - 1187
2: சாய் லக்சுமி - கமாலவதி பள்ளி, சாகுபுரம் - 200 - 800 - 1181
3: பானுமதி - அன்னை வேளாங்கண்ணி மெட்ரிக் பள்ளி, எஸ். பாளையம் - 200 - 800 - 1179
புவியியல்
1: செல்வ ஜோதி - சென்னை மேல்நிலைப் பள்ளி, திருவான்மியூர் - 198 - 765 - 1115
2: முத்து ஜெயந்தி - எஸ்.வி. பெண்கள் பள்ளி, தூத்துகுடி - 198 - 755 - 1105
3: சுனவதி - எஸ்.ஏ. எஸ்.சி.ஜி. பள்ளி, பண்ருட்டி - 198 - 702 - 0981
நுண் உயிரியல்1: மதுமிதா - எஸ்.வி. பெண்கள் பள்ளி, தூத்துகுடி - 197 - 736 - 1089
2: இஃபாத் பாட்ஷா - சி.எஸ்.ஐ. மெட்ரிக் பள்ளி, சென்னை - 193 - 761 - 1143
3: வின்சி - அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருமங்கலம் - 193 - 639 - 0929
உயிர் வேதியியல்1: விஷாலி - ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, திருவான்மியூர் - 196 - 778 - 1145
2: விஷால் ஸ்ரீவாஸ் -  ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, திருவான்மியூர் - 196 - 751 - 1114
3: வர்ஷா -  ஸ்ரீ சங்கரா மெட்ரிக் பள்ளி, திருவான்மியூர் - 195 - 763 - 1151
நர்சிங்1: காயத்ரி - புனித அன்னாள் பெண்கள் பள்ளி, கடலூர் - 188 - 630 - 0950
2: ஜெருஷா டி பீட்டர்  - இமாகுலேட் மெட்ரிக் பள்ளி, கோவை - 187 - 637 - 0990
3: சுவீதா - புனித அன்னாள் பெண்கள் பள்ளி, கடலூர் - 186 - 580 - 0888
நியூட்ரிசியன் & டயட்டிக்ஸ்1: அக்ஷயா - எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை - 200 - 778 - 1087
2: பவித்ரா -  எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை - 198 - 682 -1026
3: சாய் ரவீனா - எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை - 193 - 671 - 1007
கம்யூனிகேட்டிவ் இங்லீஷ்1: உஸ்மா தம்கீன் நமாசி - இஸ்லாமியா பெண்கள் பள்ளி, வாணியம்பாடி - 188 - 595 - 0923
2: ஃபேயிசா தாபாசுமி - இஸ்லாமியா பெண்கள் பள்ளி, வாணியம்பாடி - 182 - 682 - 1048
3: அப்துல்லா - எம்.சி.சி. பள்ளி, சென்னை - 181 - 695 - 1051
கணிதவியல்1: அபினேஷ் - கிரீன்பார்க் பள்ளி, நாமக்கல் - 200 - 800 - 1189
2: பழனிராஜ் - வித்யா விகாஷ் மெட்ரிக் பள்ளி - 200 - 800 - 1188
3: ரவீனா - எஸ்.வி. மந்திர் பள்ளி, ஊத்தாங்கரை - 200 - 800 - 1187

ஹோம் சயின்ஸ்1: அனுசூர்யா - எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை - 197 - 715 - 1069
2: அனுஷிரி - எஸ். அவினாசிலிங்கம் பெண்கள் பள்ளி, கோவை - 196 - 750 - 1110
3: ஹஜிரா சதாஃப் - இஸ்லாமியா பெண்கள் பள்ளி - 193 - 774 - 1133

வரலாறு1: ஆனி மஞ்சு - புனித ஜோசப் பள்ளி, சாத்தான்குளம் - 200  - 790 - 1125
2: கலைமணி - பெரம்பலூர் - 200 - 784 - 1148
3: முத்து ஜெயந்தி - எஸ்.வி. பெண்கள் பள்ளி, தூத்துகுடி - 200 - 755 - 1105

பொருளாதாரம்1: காவ்யா - ரோசாரி மெட்ரிக் பள்ளி, சென்னை - 200 - 800 - 1192
2: அபிநயா - எஸ்.டி.ஏ.வி. பள்ளி, ஆதம்பாக்கம் - 200 - 800 - 1191
3: ராஜாராம் - ஏ.வி. மெய்யப்பன் பள்ளி, விருகம்பாக்கம் - 200 - 800 - 1190

அரசியல் அறிவியல்1: சித்ராம் - எஸ்.எம். பள்ளி, குருசாமிபாளையம் - 191 - 680 - 0989
2: சந்தியா - எல்.எம்.எஸ். பள்ளி, மார்த்தாண்டம் - 189 - 754 - 1035
3: மதியழகன் - திலக் வித்யாலயா, கல்லிடைக்குறிச்சி - 188 - 771 - 1113

வணிகவியல்1: காவ்யா - ரோசாரி மெட்ரிக் பள்ளி, சென்னை - 200 - 800 - 1192
2: அபிநயா - எஸ்.டி.ஏ.வி. பள்ளி, ஆதம்பாக்கம் - 200 - 800 - 1191
3: ராஜாராம் - ஏ.வி. மெய்யப்பன் பள்ளி, விருகம்பாக்கம் - 200 - 800 - 1190

கணக்கியல்1: காவ்யா - ரோசாரி மெட்ரிக் பள்ளி, சென்னை - 200 - 800 - 1192
2: அபிநயா - எஸ்.டி.ஏ.வி. பள்ளி, ஆதம்பாக்கம் - 200 - 800 - 1191
3: ராஜாராம் - ஏ.வி. மெய்யப்பன் பள்ளி, விருகம்பாக்கம் - 200 - 800 - 1190

இந்திய கலாச்சாரம்1: விடோரியா ராணி - தம்பித்தோட்டம் பள்ளி, காந்திகிராம் - 186 - 731 - 1045
2: அமல்ராஜ் - தம்பித்தோட்டம் பள்ளி, காந்திகிராம் - 174 - 729 - 1065
3: கணேசன் - ஜி.ஏ. அரசு ஆண்கள் பள்ளி, சங்கரன்கோவில் - 172 - 684 - 0973

அட்வான்ஸ்டு லேங்குவேஜ்1: தங்கரத்தினம் - எஸ்.எம்.எஸ். பள்ளி, மதுரை - 188 - 601 - 0831
2: சத்தியக்கலா - அரசு பெண்கள் பள்ளி, தென்காசி - 186 - 688 - 0947
3: குருலட்சுமி - சத்ரிய பெண்கள் பள்ளி, விருதுநகர் - 186 - 682 - 0973

பிசினஸ் மேக்ஸ்1: காவ்யா - ரோசாரி மெட்ரிக் பள்ளி, சென்னை - 200 - 800 - 1192
2: அபிநயா - எஸ்.டி.ஏ.வி. பள்ளி, ஆதம்பாக்கம் - 200 - 800 - 1191
3: ராஜாராம் - ஏ.வி. மெய்யப்பன் பள்ளி, விருகம்பாக்கம் - 200 - 800 - 1190


பிளஸ் 2 தேர்வு முடிவுகள் - முதல் மதிப்பெண் 1189!


சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், மாநிலத்திலேயே முதலிடத்தை, 1189 மதிப்பெண்கள் பெற்று, ஜெயசூர்யா மற்றும் அபினேஷ் என்ற 2 மாணவர்கள் பகிர்ந்துகொண்டுள்ளனர்.

தேர்வு முடிவுகளில், 1188 மதிப்பெண்கள் பெற்று 2 பேர் இரண்டாமிடத்தையும், 1187 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மூன்றாமிடத்தையும் பெற்றுள்ளனர்.
தமிழை முதல் பாடமாக எடுத்து, மாநில அளவில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் விபரங்கள்;

முதலிடம்

ஜெயசூர்யா - 1189 - வித்யா விகாஸ் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, வி.பட்டி, நாமக்கல்.
அபினேஷ் - 1189 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.

இரண்டாமிடம்

பழனிராஜ் - 1188 - வித்யாவிகாஸ் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
அகல்யா - 1188 - ஸ்ரீ விஜய் வித்யா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஓசூர்

மூன்றாமிடம்

ராஜேஸ்வரி - 1187 - சி.இ.ஓ.ஏ. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மேலூர்.
கலைவாணி - 1187 - குறிஞ்சி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
விஷ்ணுவர்தன் - 1187 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
கண்மணி - 1187 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
மனோதினி - 1187 - கிரீன்பார்க் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, நாமக்கல்
ரவீனா - 1187 - எஸ்.வி., மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிருஷ்ணகிரி.
நிவேதிதா - 1187 - சியோன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சேலையூர், காஞ்சிபுரம் மாவட்டம்.
பூஜா எஸ்.குமார் - 1187 - சுவாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, போரூர், சென்னை.
முத்து மணிகண்டன் - 1187 - நாசரேத் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆவடி, சென்னை.