Sunday, April 21, 2013


மகாவீர் ஜெயந்தி - தமிழகத்தில் விடுமுறை 23.04.2013 அல்லது 24.04.2013 அன்றா? ஆசிரியர்கள் குழப்பம்.

Holidays – Public Holidays under Negotiable Instruments Act, 1881 for the State Government Offices and all Commercial Banks including Co-operative Banks in Tamil Nadu for the year 2013 – Orders issued. - GO.981 PUBLIC DEPT DATED.19.11.2012 CLICK HERE...
மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் 23.04.2013 அன்று விடுமுறை என்றும் அதையடுத்து தமிழகத்தில் பள்ளிக்கல்வித்துறையின் கீழ் பணிபுரிபவர்களுக்கு 23.04.2013 அன்று விடுமுறை என்றும் ஒரு சில ஆசிரியர்கள் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் 2013ஆம் ஆண்டுக்கான விடுமுறை பட்டியலில் தமிழக அரசு 24.04.2013 புதன்கிழமைவிடுமுறையாக அறிவித்துள்ள பட்சத்தில் 23.04.2013 அன்று மத்திய அலுவலகங்கள் அனைத்தும் விடுமுறை என்றும்,நாட்காட்டியிலும் 23.04.2013 அன்று மகாவீர் ஜெயந்திகுறிப்பிடப்பட்டுள்ளது என்றும் ஆகையால் 23.04.2013 அன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும் என்றும்,  ஆகையால் தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கும் 23.04.2013 அன்று விடுமுறை அளிக்கப்படும் என்று கருத்துகள் பரவலாக வருகின்றன. எனவே இதுகுறித்து ஆசிரியர்கள் எந்தவித குழப்பம் அடையாமல் 24.04.2013 அன்று தமிழக அரசின் அதிகாரபூர்வ விடுமுறை பட்டியலின் படி கடைபிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது. இதில் ஏதேனும்மாற்றம் இருக்கும் பட்சத்தில் முறையான அறிவிப்பு தமிழக அரசால் அறிவிக்கப்படும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. எனவே விடுமுறை குறித்து எவ்வித குழப்பம் அடைய தேவையில்லை என்று கேட்டுகொள்கிறோம். தொடக்கக் கல்வி துறையின் கீழ் திருச்சி, மதுரை, சிவகங்கை, வேலூர் மற்றும் திண்டுக்கல் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு 24.04.2013 புதன்கிழமை விடுமுறை அளித்து உத்தரவிடப்பட்டுள்ளது. தமிழக அரசின் அதிகாரப்பூர்வ விடுமுறை பட்டியல் உங்களின் பார்வைக்காக மேலே இணைக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் தகுதித் தேர்வு இந்த ஆண்டு நடக்குமா? ஏகப்பட்ட வழக்குகளால் டிஆர்பி திணறல் - தினகரன் நாளிதழ் செய்தி


மாணவர்களின் குழப்பங்களை தீர்க்க வேண்டிய ஆசிரியர்களே குழம்பிப் போய் இருக்கிறார்கள். அதற்கு பல காரணங்கள். ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பில் தொடங்கிய குழப்பம், விண்ணப்ப விற்பனை, தேர்வு முறை, ரிசல்ட் வெளியீடு, அதற்குப் பிறகு படிப்பு தகுதி என தீராமல் தொடர்ந்தது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இந்த குளறுபடிகளால் 400க்கும் மேற்பட்ட வழக்குகள் போடப்பட்டுள்ளன.


 இந்த நிலையில் இந்த ஆண்டு ஆசிரியர் தகுதித் தேர்வு நடக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் ஆசிரியர் நியமனம் செய்வதற்கான தகுதித் தேர்வை நடத்தும் பொறுப்பு 2011ல் ஆசிரியர் தேர்வு  வாரியத்துக்கு(டிஆர்பி) அளிக்கப்பட்டது. மத்திய அரசின் என்சிஇஆர்டி நடத்தும் ஆசிரியர் தேர்வை அப்படியே, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதாக டிஆர்பி அறிவித்தது. அதேநேரத்தில் என்சிஆர்டி-யின் விதிகளை டிஆர்பி ஏற்கவில்லை.

ஆனால் அண்டை மாநிலங்களான கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகியவை, பட்டதாரிகளின் நலன் காக்கும் வகையில் மத்திய அரசின் சட்டத்தில் கூறப்பட்ட அம்சங்களை உள்ளடக்கி தகுதித் தேர்வுகளை நடத்தி வருகின்றன.  தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச்சில் ஆசிரியர் தேர்வு அறிவிப்பு வெளியானது.  18,343 பட்டதாரி ஆசிரிய பணியிடங்கள், 5451 இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதிலிருந்து தொடங்கியது வரிசையாக குழப்பங்கள். விண்ணப்பம் விற்பதில் தொடங்கி தேர்வு முடிவுகளை வெளியிடுவது வரை பல்வேறு குழப்பம். தகுதித் தேர்வு எழுதுவோருக்கு உரிய தகுதிகளை வாரியம் வரையறுத்து கூறவில்லை. யாரும் தேர்வு எழுதலாம் என்று அறிவித்ததின் விளைவாக, பட்டம் படித்து, பி.எட் முடித்த சுமார் 7 லட்சம் பேர் விண்ணப்பம் போட்டனர்.

 அவர்களுக்கு தேர்வு மையங்களை ஒதுக்குவது, ஹால்டிக்கெட் அனுப்புவதில் பிரச்னைகள் எழுந்தன.தேர்வு முடிவில் சுமார் 1800 பட்டதாரிகளே தேர்ச்சி அடைந்தனர். இது தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. கேள்வித்தாளில் இடம் பெற்ற பல கேள்விகள் பாடத்திட்டத்தில் இருந்து இடம் பெறவில்லை என்பதால் பல பட்டதாரிகள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து பாடத்திட்டத்தில் இருந்து கேள்விகள் இடம் பெறும் வகையில் கேள்வித்தாள் தயாரித்து, இரண்டாம்கட்டமாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் தேர்வை நடத்தினர். இரண்டாம் கட்ட தேர்வில் சுமார் 6 லட்சம் பேர் பங்கேற்றும் சுமார் 9,000 பேர்தான் தேர்ச்சி பெற்றனர்.

 ஆனால் ஆசிரியர் பணியிடங்கள் 20,000 இருந்தன. இது தவிர தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி நியமனத்தில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று கடந்த ஆட்சியில் கொண்டு வரப்பட்ட சட்டத்தை டிஆர்பி கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை. ஆசிரியர் தகுதித் தேர்வில் இது போல பல குழப்பங்கள் ஏற்பட்டதற்கு பிறகு, இந்த ஆண்டுக்கான தேர்வை நடத்துவதா வேண்டாமா என்ற நிலையில் டிஆர்பி உள்ளது. கடந்த ஆண்டில் மட்டும், 10 வகையான தேர்வுகளை டிஆர்பி நடத்தியுள்ளது. மேற்கண்ட 10 வகை தேர்வுகளும் குழப்பங்களில் சிக்கித் தவித்தன.

தேர்வு எழுதிய பிறகு டிஆர்பியால் பாதிக்கப்பட்டதாக இதுவரை 400க்கும் மேற்பட்டவர்கள் நீதிமன்றங்களில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்குகளை முடிக்க முடியாமல் டிஆர்பி திணறி வருகிறது. முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களுக்கான தேர்வில் இன்னும் ஒரு பகுதியினருக்கு முடிவுகளை டிஆர்பி வெளியிடவில்லை. மேலும், தமிழ் வழியில் படித்தவர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்வது குறித்தும் இன்னும் முடிவு எடுக்கவில்லை. அந்த பணிகள் முடிந்தால்தான், அடுத்த கட்ட தேர்வை நடத்த வேண்டும் என்று டிஆர்பி முடிவு செய்துள்ளது. அதனால் இந்த முறை ஆசிரியர் தகுதித் தேர்வு குழப்பம் இல்லாமல் நடத்தப்படுமா என்று பட்டதாரிகள் எதிர்பார்க்கின்றனர்.

  இதற்கிடையே, தற்போது நாடாளுமன்றத் தேர்தல் வருவதை அடுத்து, தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வை நடத்துவதை தள்ளிப் போட அரசு முடிவு எடுத்துள்ளதாக தெரிகிறது.  பட்டதாரிகளை சமாதானம் செய்வதற்காக கடந்த ஆட்சியின் இறுதியில், பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் செய்யாமல் நிலுவையில் வைக்கப்பட்ட பட்டதாரிகளின் பட்டியலை தூசு தட்டி எடுத்து, இப்போது அவர்களுக்கு பணி நியமனம் வழங்க அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. பள்ளிகளில் 6ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புவரை சமூக அறிவியல் பாடங்களில் பொருளியல், வணிகவியல் பாடங்களும் சேர்க்கப்பட்டுள்ளதால் பொருளியல், வணிகவியல்  பட்டம் பெற்று பி.எட் முடித்தவர்களை கீழ் வகுப்புகளில் ஆசிரியர்களாக நியமிக்கலாம் என்று பட்டதாரிகள் தொடர்ந்து கேட்டுவருகின்றனர். 


ஆனால் அரசு உத்தரவில் கூறப்பட்டுள்ளதை தவிர வேறு எதைப்பற்றியும் டிஆர்பி அலுவலர்கள் சிந்திக்கவோ ஏற்கவோ மறுக்கின்றனர். அரசு உத்தரவுகளில் உள்ள சில நல்ல விஷயங்களையும் சுட்டிக்காட்டினால் ஏற்க மறுப்பது பட்டதாரிகளை உதாசீனம் செய்வது போல உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டுக்கான தகுதித் தேர்வை டிஆர்பி நடத்துமா என்ற சந்தேகம் பட்டதாரிகள் இடையே வலுத்துள்ளது.கடந்த 2012&2013ம் ஆண்டு பள்ளிக் கல்வி மானியக் கோரிக்கை மீதான அறிவிப்பின்போது பட்டதாரி ஆசிரியர்கள் 6768, இடைநிலை ஆசிரியர்கள் 3433 பேர் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டது. அதற்கு பிறகு பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் ஒரு கூட்டத்தில் பேசும் போது 56000 ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். அதன்மீது பல சர்ச்சைகள் எழுந்தன.  தற்போது சட்டப் பேரவையில் பள்ளிக் கல்லூரிகளில் 22269 ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே உள்ள இடங்கள் 20000 அளவுக்கு உள்ளன. இந்த சூழ்நிலையில் இந்த ஆண்டுக்கான பணியிடங்களை நிரப்புவது குறித்து அரசிடம் இருந்து டிஆர்பிக்கு இன்னும் உத்தரவு வரவில்லை. அரசு தகுதித் தேர்வு நடத்த முன்வருமா?
இன்று உலக புவி நாள்!. இந்த வாரம் முழுவதுமே உலக புவி வாரமாக அனுசரிக்கப்படுகிறது.










இந்த பூமிக்கு என்னவெல்லாம் நம்மாலும் நமக்கு முந்தய சந்ததியினராலும் அறிந்தும், அறியாமலும் கேடுகள் செய்யப்பட்டுவிட்டன என்பதை அறிந்து, சரி செய்து, இந்த உலகம் செழித்து நம் சந்ததியினர் சுபிட்சமான சுகவாழ்வு வாழ நம்மால் ஆன அனைத்து திருத்தங்களையும் மேம்பாடுகளையும் செய்ய துவங்குவோமாக!நம் ஒவ்வொருவரின் எல்லா சிறிய முயற்சிகளும் சேர்ந்து நிச்சயமாக பெரும் பலனை தரும்.  இன்றிலிருந்து, இப்போதிலிருந்தே நாம் வாழும் பூமியும் நமக்கு சுவாசத்திற்கான தகுந்த காற்றை தரும் வாயுமண்டலத்தையும் மாசுபடுத்தாமல் காத்து மேம்படுத்த நம்மாலான சிறு சிறு நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்று நாம் ஒவ்வொருவரும் உறுதி செய்து செயல்படுத்துவோமாக!புவி நாளின் வரலாறு :1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தன் Senator Gaylord Nelson ( செனட்டர் கைய்லோர்ட் நெல்சன் ) என்பவரால்,உலகம் பூராவும் புவி நாளைக்கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.அடுத்தவருடம் அதாவது 1970 ஆம் ஆண்டில் இருந்து “புவி நாள்” உலகம் பூராவும் கொண்டாடப்பட்டுவருகிறது.முதலில் புவி நாள் மார்ச் 20 ஆம் திகதி கொண்டாடப்படுவதே நோக்கமாக இருந்தது. காரணம், அன்றையதினத்தில் புவியின் வட அரைக்கோலத்திலும் தென்னரைக்கோலத்திலும் இரவும் பகலும் சமனான நேரத்தைக்கொண்டதாக இருந்தமை அதற்கொரு காரணமாக அறியப்பட்டது. சில அமைப்புக்கள் இத்திகதியை புவி நாளாக கொண்டாடுகின்றன.எனினும், நெல்சனின் குழுவில் இருந்து இவ் அமைப்பின் உருவாக்கத்திற்காக முன்னின்று செயலாற்றிய விளம்பரதாரர் ஜுலியன் கீனிக் என்பவரால் ஏப்ரல் 22 ஆம் திகதி புவி நாள் ஆக பிரகடனப்படுத்தப்பட்டதால் தற்போது உலகம் பூராவும் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று புவி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஜுலியன் கீனிகின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது!( அவரின் பிறந்த நாளன்று புவி நாளைக்கொண்டாடுவதை இன்றும் பலர் விமர்சிக்கின்றனர். )புவி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது :18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது. ( தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் நெல்சன்.)காடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பக காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் சீதோஷ்ன நிலை மாறிவருவதுடன் இயறை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன.இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது!நாம் என்ன செய்யலாம்? :இதை வாசிக்கும் பலர் இதை செய்யப்போவதில்லை! எனினும் ஒரு விளிப்புணர்விற்காக…வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும்!பாடசாலைகளில் இயங்கும் மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் குழுக்கள் இணைந்து இன்றைய தினத்தில் பாடசாலை சுற்றுப்புறத்தில் மரங்களை நாட்டுதல் வேண்டும். ( ஐரோப்பாவில் இது நடைமுறையில் உள்ளது! )சிறுவர்களிடையே விளையாட்டிற்கு பயன்படாமல் இருக்கும் பழைய பொருட்களை மீழ் சுழற்ச்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை சிறுவர்களைக்கொண்டே செய்யவேண்டும்!சுற்றுச்சூழல் பாதிப்பி போக்கைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ( இணையட்தில் தேடினால் எவ்வளவோ வரும். )நாம் பயண்படுத்தும் வாகனங்களின் புகை வெளியீடு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ளவேண்டும்.நாம் கட்டாயம் செய்யவேண்டியவை!ஆண்டு தோறும் ஏப்ரல் 22ம் நாளன்று புவியின் சுற்றுச் சூழல் மாசடைவதைத் தடுக்கும் நோக்கோடு அனைத்து நாடுகளிலும் கடைப்பிடிக்கப்பட்டு வரும் ஒரு சிறப்பு நாளாகும்.இதுவே புவி நாள் (Earth Day) ஆகும். புவி நாளின் வரலாறு : 1969 ஆம் ஆண்டு அமெரிக்காவைச் சேர்ந்தன் Senator Gaylord Nelson ( செனட்டர் கைய்லோர்ட் நெல்சன் ) என்பவரால், உலகம் பூராவும் புவி நாளைக்கொண்டாட வேண்டும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது. அடுத்தவருடம் அதாவது 1970 ஆம் ஆண்டில் இருந்து “புவி நாள்” உலகம் பூராவும் கொண்டாடப்பட்டுவருகிறது. முதலில் புவி நாள் மார்ச் 20 ஆம் திகதி கொண்டாடப்படுவதே நோக்கமாக இருந்தது. காரணம், அன்றையதினத்தில் புவியின் வட அரைக்கோலத்திலும் தென்னரைக்கோலத்திலும் இரவும் பகலும் சமனான நேரத்தைக்கொண்டதாக இருந்தமை அதற்கொரு காரணமாக அறியப்பட்டது. சில அமைப்புக்கள் இத்திகதியை புவி நாளாக கொண்டாடுகின்றன. எனினும், நெல்சனின் குழுவில் இருந்து இவ் அமைப்பின் உருவாக்கத்திற்காக முன்னின்று செயலாற்றிய விளம்பரதாரர் ஜுலியன் கீனிக் என்பவரால் ஏப்ரல் 22 ஆம் திகதி புவி நாள் ஆக பிரகடனப்படுத்தப்பட்டதால் தற்போது உலகம் பூராவும் ஏப்ரல் 22 ஆம் திகதியன்று புவி நாள் கொண்டாடப்படுகிறது. இது ஜுலியன் கீனிகின் பிறந்த நாள் என்பதும் குறிப்பிடத்தக்கது! ( அவரின் பிறந்த நாளன்று புவி நாளைக்கொண்டாடுவதை இன்றும் பலர் விமர்சிக்கின்றனர். ) புவி நாள் ஏன் கொண்டாடப்படுகிறது : 18 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்து உலகம் இயற்கை வழங்களை விரைவாக இழந்துவருகின்றது. பல சுற்றுச்சூழல் பாதுகாப்பின்மையால் சுவாசிக்கும் காற்றுக்கூட நச்சுக்கலந்ததாக மாறிவருகின்றது. ( தொழிற்சாலைகளிற்கு போதிய அளவு கட்டுப்பாடுகளை அரசு விதிக்காமையால் புகை போக்கிகளூடாக காற்றையும், நீரையும் அசுத்தப்படுத்துவதை சுட்டிக்காடியிருந்தார் நெல்சன்.) காடழிப்பு, கம்பியில்லாத்தொழில் நுட்பம் போன்ற பக காரணிகளால் இயற்கை சமனிலையை இழந்துகொண்டிருக்கிறது. இதனால் உலகின் பல்வேறு பிரதேசங்களில் சீதோஷ்ன நிலை மாறிவருவதுடன் இயறை அனர்த்தங்களும் எதிர் பாராமல் ஏற்பட்டுக்கொண்டிருக்கின்றன. இவற்றையெல்லாம் கட்டுப்படுத்தி, நாம் இழந்துகொண்டிருக்கும் இயற்கை உலகை மீழ் கட்டியமைப்பதே இந்த நாளின் பொதுவான நோக்காக இருக்கிறது! நாம் என்ன செய்யலாம்? : இதை வாசிக்கும் பலர் இதை செய்யப்போவதில்லை! எனினும் ஒரு விளிப்புணர்விற்காக… வாழ் நாளில் ஒரு மரத்தையேனும் நட்டு அதை பாதுகாத்து வளர்த்தெடுக்கவேண்டும்! பாடசாலைகளில் இயங்கும் மாணவர் அமைப்புக்கள், ஆசிரியர் குழுக்கள் இணைந்து இன்றைய தினத்தில் பாடசாலை சுற்றுப்புறத்தில் மரங்களை நாட்டுதல் வேண்டும். ( ஐரோப்பாவில் இது நடைமுறையில் உள்ளது! ) சிறுவர்களிடையே விளையாட்டிற்கு பயன்படாமல் இருக்கும் பழைய பொருட்களை மீழ் சுழற்ச்சிக்கு அனுப்பிவைக்க வேண்டும். அதை சிறுவர்களைக்கொண்டே செய்யவேண்டும்! சுற்றுச்சூழல் பாதிப்பி போக்கைப்பற்றி அறிந்துகொள்ள வேண்டும். ( இணையட்தில் தேடினால் எவ்வளவோ வரும். ) நாம் பயண்படுத்தும் வாகனங்களின் புகை வெளியீடு தொடர்பான மதிப்பீட்டை மேற்கொள்ளவேண்டும். நாம் கட்டாயம் செய்யவேண்டியவை!