Monday, March 25, 2013

4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம்


4,000 பணியிடங்களை நிரப்ப டி.என்.பி.எஸ்.சி., மும்முரம் இந்து அறநிலையத் துறையில், உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் சுகாதாரத் துறையில், 2,800 இடங்களுக்கான உதவி மருத்துவர் தேர்வு என, 4,000 காலி பணியிடங்களை நிரப்ப, தொடர்ச்சியாக, வரும், 30ம் தேதி முதல், பல்வேறு தேர்வுகளை, டி.என்.பி.எஸ்.சி., நடத்துகிறது. இந்து அறநிலையத் துறையில், நான்கு உதவி ஆணையர் பணியிடங்களுக்கான தேர்வுகள், இரு இடங்களுக்கான செயல் அலுவலர் தேர்வுகள் வரும், 30, 31 ஆகிய தேதிகளில் நடக்கின்றன. பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில், 164 புள்ளியியல் ஆய்வாளர் பணி இடங்களுக்கான தேர்வு, ஏப்.,7ல், நடக்கிறது. சுகாதாரத் துறையில், 2,800 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்ப, ஏப்ரல், 21ம் தேதி போட்டித் தேர்வு நடக்கிறது. காவல்துறை பயிற்சிப் பள்ளியில், இரு விரிவுரையாளர்களை (சட்டம், நிர்வாகம்) தேர்வு செய்வதற் கான தேர்வு, ஏப்ரல், 27ல், நடக்கிறது. மேலும், கால்நடை துறையில், உதவி மருத்துவர்கள், 921 பேரை, நியமனம் செய்வதற்கான தேர்வு, ஏப்., 28ல், நடக்கிறது. இந்த, ஐந்து வகையான தேர்வுகளிலும், ஏராளமான, தேர்வர்கள் பங்கேற்கின்றனர். தேர்வுகளுக்கான ஏற்பாடுகளை செய்வதில், டி.என்.பி.எஸ்.சி., மும்முரமாக ஈடுபட்டுள்ளது.

No comments:

Post a Comment