மருத்துவப் படிப்பு சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியீடு

சென்னை: இந்த 2013ம் ஆண்டு மருத்துவ படிப்பு சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் நாமக்கல் பள்ளி மாணவர் அபினேஷ் முதலிடம் பிடித்துள்ளார். மேலும், பல் மருத்துவ சேர்க்கைக்கான ரேங்க் பட்டியலும் வெளியிடப்பட்டுள்ளது.
மருத்துவப் படிப்பில் சேர, மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி எப்போதுமே இருக்கும். அந்த வகையில், இந்தாண்டு அப்படிப்பில், மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் எப்போது வெளிவரும் என்று மாணவரும் பெற்றோரும் காத்திருந்தனர்.
ஏற்கனவே அறிவித்தபடி, ஜுன் 12ம் தேதியான இன்று, மருத்துவப் படிப்பு மற்றும் பல் மருத்துவப் படிப்பு ஆகிய படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்கான ரேங்க் பட்டியல் வெளியிடப்பட்டது. இப்பட்டியலை, மாநில சுகாதாரத் துறை அமைச்சர் வீரமணி வெளியிட்டார்.
நாமக்கல் கிரீன்பார்க் பள்ளி மாணவர் அபினேஷ் மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளார்.
முதல் மாணவனையும் சேர்த்து, மொத்தம் 7 மாணவர்கள் 200 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 14 மாணவர்கள் 199.75 கட்-ஆப் மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். மொத்தம் 33 மாணவர்கள் 199.50 கட்-ஆப் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான மெரிட் லிஸ்ட் விபரங்களை தெளிவாக அறிந்துகொள்ள http://www.tnhealth.org/notification/June2013/merit%20list13.pdf என்ற வலைதளம் செல்க. கவுன்சிலிங் 18ம் தேதி தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அண்ணா பல்கலைக்கழகம், தனது இணையதளத்தில் பொறியியல் கவுன்சிலிங் விபரங்களை விரிவாக அறிந்துகொள்ள TNEA 2013 என்ற பெயரில் ஒரு தனி இணைப்பை கொடுத்துள்ளது. இது மாணவர்களுக்கு மிகவும் வசதியாக இருக்கிறது. அதேபோல், www.tnhealth.org என்ற இணையதளத்திலும் ஒரு தனி இணைப்பை தர வேண்டும் என்பது மாணவர்களின் கோரிக்கையாக உள்ளது.
No comments:
Post a Comment