குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்: தீர்வு யார் கையில்?
சட்டங்கள் போட்டும், தண்டனைகளைத் தீவிரப்படுத்தியும்கூடக் குழந்தைகளுக்கு
எதிரான குற்றங்கள் குறைந்தபாடாக இல்லை. கடந்த ஓராண்டில் மட்டும்
குழந்தைகளுக்கு எதிராக நடைபெற்ற குற்றங்களின் எண்ணிக்கை 38,172. அவற்றில்
பாலியல் வல்லுறவுகள் மட்டும் 8 ஆயிரத்து 541 என்று தேசிய குற்றப் பதிவுப்
பிரிவு தெரிவிக்கிறது. இது வெறும் புள்ளிவிவரம் அல்ல. ஒட்டுமொத்தக்
குழந்தைகளின் கேள்விக்குறியாக்கப்படுகிற எதிர்காலத்தின் குறியீடு.
குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம் (பாக்ஸோ) போன்ற மிக
வலிமையான சட்டங்கள் இருந்தும், அவை குறித்த உரிய விழிப்புணர்வு இல்லாததால்
குற்றங்கள் அதிகரிப்பதைத் தடுக்க முடியவில்லை என்பது வருத்தமான உண்மை.
சட்டம் என்ன சொல்கிறது?
இருந்தால்தானே குற்றங்கள் குறித்து புகார் செய்யவோ, தண்டனை வாங்கித்தரவோ
முடியும். அதனால் பாக்ஸோ சட்டம் என்ன சொல்கிறது என்று தெரிந்துகொள்வோம். 18
வயதுக்குக் கீழ் உள்ளவர்கள் அனைவரையும் குழந்தைகள் என்று கூறுகிறது இந்தச்
சட்டம். மன வளர்ச்சி குன்றிய குழந்தை மீது நடத்தப்படும் தாக்குதலுக்கும்
ஆசிரியர், மருத்துவர், குடும்பத்தினர் போன்ற நம்பிக்கைக்குரியவர்களின்
தாக்குதலுக்கும் கூடுதல் தண்டனை உண்டு. பாலியல் துன்புறுத்தலை அறிந்து
அதைப் பற்றிப் புகார் அளிக்காமல் இருப்பவருக்கும் தண்டனை உண்டு.
காவலர்களே பாதுகாவலர்
விசாரணையின்போது காவல் துறையினரைக் குழந்தையின் பாதுகாவலராகக் கருதுகிறது
சட்டம். எனவே ஒரு புகார் எழுந்தவுடன் அக்குழந்தைக்கு தேவையான அடைக்கலம்,
மருத்துவ வசதிகளைச் செய்துதருவது காவல் துறையின் கடமை.
மருத்துவச் சோதனை குழந்தைக்கு அறிமுகமான நபரின் முன்னிலையில் நடைபெற
வேண்டும். பெண் குழந்தையாக இருந்தால் பெண் மருத்துவர்தான் சோதனை செய்ய
வேண்டும்.
இந்த வழக்குகளை விசாரிக்க குழந்தைகளுக்கு ஏதுவான சிறப்பு நீதிமன்றங்கள்
அமைக்க வேண்டும். குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தாமல் பெற்றோர் அல்லது
காப்பாளரின் முன்னிலையில் விசாரணை நடத்தப்பட வேண்டும். குழந்தையை அடிக்கடி
நீதிமன்றத்துக்கு வரவழைக்காமல் காணொளி மூலம் பேசிக்கொள்ளலாம்.
குழந்தைகள் மீதான வன்முறைகளைத் தடுக்க சட்டம் மட்டும் போதாது. அதை அமல்படுத்துவதிலும் தீவிரம் வேண்டும் என்கிறார் வழக்கறிஞர் அஜீதா.
“பாக்ஸோ சட்டம் வந்த நான்கு மாதங்கள் வரை வழக்குகள் இச்சட்டத்தின் கீழ்
பதிவு செய்யப்படவில்லை. இப்போது வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன. ஆனால்
முழுமையான விழிப்புணர்வு ஏற்படுத்தப்படவில்லை. கொள்கை முடிவுகளை எடுக்கிற
அரசும், அதிகாரங்களைப் பிரயோகிக்கிகும் காவல் அதிகாரிகளும் உரிய அக்கறை
செலுத்த வேண்டும்.
பள்ளியில் கற்றுத் தரலாம்
“10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் பாடத்திட்டத்திலேயே குழந்தைகளின்
உரிமை, குடும்ப வன்முறை, பெண் சமத்துவம் பற்றிய தகவல்களைச் சேர்க்கலாம்.
குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகள் பெரும்பாலும் நன்கு
தெரிந்தவர்களால்தானே நடக்கிறது. இந்தப் புகார்களைப் பதிவு செய்வதே ஒரு
சவால் இல்லையா?
பாலியல் குற்றத்துக்கு, பாதிக்கப்படும் பெண் காரணமில்லை என்ற பார்வையே
நிர்பயா வழக்குக்கு பிறகுதான் வந்திருக்கிறது. ஒவ்வொருமுறை பாலியல்
வன்கொடுமை நடக்கும்போதும் மக்கள் எழுச்சியுற்றுப் போராடி நியாயம் கேட்க
முடியாது. சட்டத்தின் மூலமாகத்தான், சமூகத்தில் நீதி நிலைநாட்டப்படும் என
மக்கள் நம்புகிறார்கள். ஆனால் சட்டங்கள் நடைமுறைக்கு வரவே தாமதமாகிறது”
என்கிற அஜிதா, ஊடகங்களும் இதில் பங்கேற்க வேண்டும் என்றார்.
“குற்றவாளிகளை விரைவாகவும் கடுமையாகவும் தண்டிக்கும் போதுதான் அச்சம்,
அவமானம், தவறான கட்டுப்பெட்டித் தனம் விலகும். ஒவ்வொரு நாளும்
செய்தித்தாளில் பாதிக்கப்பட்டவர்கள் பற்றிதான் எழுதப்படுகிறது. அதற்கு
மாறாக, குற்றம் இழைத்தவருக்குத் தரப்படும் தண்டனைகளைப் பற்றியும்
வழக்குகளைப் பற்றியும் எழுதப்பட வேண்டும்” என்றும் அஜிதா குறிப்பிடுகிறார்.
குழந்தைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடுமே என்ற அச்சத்திலேயே பலர்
தங்கள் குழந்தைக்கு நேர்ந்த அநீதியை வெளியே சொல்வதில்லை. ஆனால் இந்தத்
தயக்கமே குற்றங்களை அதிகரித்துவிட நாம் அனுமதிக்கக் கூடாது.
குழந்தைகள், குற்றங்கள், குழந்தை பாதுகாப்பு, பாலியல் குற்றம், குழந்தைகள் மீதான பாலியல் வன்முறை தடுப்புச் சட்டம்
No comments:
Post a Comment