Monday, May 27, 2013

                                 மாற்றுத் திறனாளிகள் ஆசிரியர் ஆக வேண்டுமா?

கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கான அரசு இடைநிலை ஆசிரியர் பயிற்சி நிறுவனம், தமிழ் வழி ‘ஆசிரியர் பட்டயப் பயிற்சி’ (டி.டி.எட்.,) சேர்க்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்நிறுவனம் பார்வையற்றோருக்கான அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், பூவிருந்தவல்லி, சென்னை  56 என்ற முகவரியில் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 50 இடங்களை கொண்ட இக்கல்வி நிறுவனத்திற்கு விண்ணப்பிப்பவர்கள், பிளஸ் 2வில் 45 சதவீத மதிப்பெண்களோடு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
எஸ்.சி/ எஸ்.டி., பிரிவினர் பிளஸ் 2 தேர்ச்சி பெற்றிருந்தால் போதும். பிளஸ் 2ல் தமிழை பயிற்று மொழியாக கொண்டவர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மொத்த இடங்களில் 50 சதவீதம் அறிவியல் மாணவர்களுக்கும், 25 சதவீதம், கலைப்பாட மாணவர்களுக்கும், 25 சதவீதம் தொழிற்கல்வி மாணவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது.
வயது: 31.07.2013 அன்று 35 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். கணவரால் கைவிடப்பட்டோர் மற்றும் விதவைகளுக்கு அதிகபட்ச வயது 40.
இடஒதுக்கீடு, பிளஸ் 2ல் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் சேர்க்கை நடைபெறும். விருப்பமுள்ளவர்கள் “மாற்றுத் திறனாளிகளுக்கான மாநில ஆணையர், சென்னை 78” என்ற பெயரில் (எஸ்.சி/எஸ்.டி.,  125, மற்றவர்  250) ரூபாய்க்கான ‘டிடி’ இணைத்து தபால் மூலமாகவோ, அல்லது நேரிலோ பெற்றுக் கொள்ளலாம்.
‘டிடி’யின் பின்புறம் விண்ணப்பதாரரின் பெயர், முகவரியை குறிப்பிட்டு அத்துடன் ரூ.5க்கான சுய முகவரியிட்ட தபால் உறை, சான்றிதழ்களின் நகல்களையும் இணைத்து, முதன்னை செயலாளர்/ மாநில ஆணையர், மாற்றுத் திறனாளிக்களுக்கான மாநில ஆணையரகம், ஜவகர்லால் நேரு உள்வட்ட சாலை, கே.கே. நகர், சென்னை  600078 என்ற முகவரிக்கு மே 31க்குள் அனுப்ப வேண்டும்.

No comments:

Post a Comment