Monday, May 27, 2013

புதுச்சேரி, காரைக்காலில் கோடை விடுமுறை நீட்டிப்புபுதுச்சேரி: புதுச்சேரி மற்றும் காரைக்காலில், அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கான கோடை விடுமுறை நீடிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, புதுச்சேரி கல்வியமைச்சர் தியாகராஜன், நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: புதுச்சேரியில் கோடை விடுமுறைக்குப் பின், வரும், 3ம் தேதி, பள்ளிகள் திறக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது.
தற்போது நிலவி வரும் கோடை வெயிலின் தாக்கத்தை கருத்தில் கொண்டு, கோடை விடுமுறை நீடிக்கப்பட்டு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்தும், 10ம் தேதி திறக்கப்படும்.
அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், பிளஸ் 1ல், 600 மாணவர்கள் தோல்வியடைந்து உள்ளனர். இவர்களுக்கு, வரும், 10ம் தேதி முதல், 17ம் தேதி வரை, மறு தேர்வு நடத்தப்படுகிறது. பள்ளிக் கல்வித் துறை இணை இயக்குனர் மேற்பார்வையில் விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, பிளஸ் 1ல் தேர்ச்சி பெறும் மாணவர்கள், பிளஸ் 2வில் சேர்த்துக் கொள்ளப்படுவர்.
தனியார் பள்ளிகளில் கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்க, விரைவில் குழு அமைக்கப்படும். இவ்வாறு, அவர் கூறினார்.

No comments:

Post a Comment