Friday, May 31, 2013

       பத்தாம் வகுப்பு தேர்வு முடிவு - 9 பேர் மாநில முதலிடம்!


பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று வெளியிடப்பட்டன. இதில், எப்போதும் இல்லாத வகையில், 498 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 9 பேர் மாநிலத்தில் முதலிடம் பெற்றுள்ளனர்.


பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வுகள், கடந்த மார்ச் 27ம் தேதி தொங்கி, ஏப்ரல் 12ம் தேதி வரை நடைபெற்றது. இத்தேர்வை, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சேர்த்து, மொத்தம் 10 லட்சத்து 68 ஆயிரத்து 838 பேர் எழுதினர். அவர்களில் 5 லட்சத்து 25 ஆயிரத்து 686 பேர் மாணவியர். மொத்தம் 3012 மையங்களில் தேர்வு நடைபெற்றது.

அத்தேர்வுக்கான முடிவுகள் மே 31ம் தேதியான இன்று வெளியிடப்பட்டது. இதில், ஈரோடு மாவட்டம், பெருந்துறை கொங்கு வேளாளர் பள்ளி மாணவி அனுஷா உள்பட, மொத்தம் 9 பேர் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்துள்ளனர்.

இதையடுத்து, 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 52 பேர் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். மேலும், மூன்றாமிடத்துக்கான போட்டியில், 496 மதிப்பெண்கள் பெற்று 137 பேர் வென்றுள்ளனர்.
                                    முதலிடம் பெற்ற மாணவிகள் விபரம்

எஸ்.அனுஷா - கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெருந்துறைதீப்தி - புஸ்கோ மெட்ரிக் பள்ளி, அண்ணாநகர், மதுரைஎம்.காயத்ரி - மவுன்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சிடி.மார்ஷியா ஷெரின் - மவுன்ட் போர்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மஞ்சம்பட்டி, திருச்சிகே.ஆர்.பொன்சிவசங்கரி - இ.எச்.கே.என். மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஈரோடுசி.எஸ்.சாருமதி - சிருஷ்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிரம்மபுரம், திருப்பத்தூர்பி.சோனியா - எஸ்.ஜே.எஸ்.ஜே.யு.பி. மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, திருநெல்வேலிஆர்.ஸ்ரீதுர்கா - வீனஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிதம்பரம்எஸ்.வினுஷா - ஆக்சிலியம் மகளிர் மேல்நிலைப்பள்ளி, வேலூர்இதையடுத்து, 500க்கு 497 மதிப்பெண்கள் பெற்று, மொத்தம் 52 பேர் மாநில அளவில் இரண்டாமிடம் பெற்றுள்ளனர். மேலும், மூன்றாமிடத்துக்கான போட்டியில், 496 மதிப்பெண்கள் பெற்று 137 பேர் வென்றுள்ளனர்.

No comments:

Post a Comment