Thursday, April 4, 2013

அதிக நேரம் வேலை வாங்குவதை எதிர்த்து டென்மார்க் ஆசிரியர்கள் போராட்டம்



ஸ்காண்டிநேவியன் நாடுகளில் ஒன்றான டென்மார்க்கில், அரசுக்கு எதிராக ஆசிரியர்கள் அனைவரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.

டென்மார்க்கில் ஆசிரியர்கள் ஊதிய உயர்வு இல்லாமல் கூடுதல் நேரம் வேலை செய்யவேண்டும் என்று அரசு, உள்ளூர் அதிகாரிகளுடன் சேர்ந்து முடிவு செய்தது. இதன்படி, 6 வயதிலிருந்து 16 வயது வரை உள்ள மாணவர்கள் இரண்டு முதல் மூன்று மணி நேரம் அதிகமாகப் பள்ளியில் செலவிட வேண்டும்.

இதனை எதிர்த்த ஆசிரியர் சங்கம், நேற்றும், இன்றும் பள்ளிகளைப் புறக்கணித்துள்ளன. 90,000 ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்லாததால் 9,00,000 மாணவர்கள் பள்ளிக்குச் செல்ல முடியவில்லை.
இந்த போராட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், அரசாங்கம் ஆசிரியர்களுடன் நேரடியாகப் பேச்சு வார்த்தை நடத்தவேண்டும் என்றும் கோர்டன் மட்சன் என்ற ஆசிரியர்கள் சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் கூறினார்.
ஆசிரியர்கள் அதிக நேரம் பள்ளியில் இருக்கவேண்டும் என்ற திட்டத்தை, டென்மார்க்கின் பிரதமர் ஹெல்லே தார்நிங் ஸ்மித்தும் மறுக்கவில்லை. ஆனாலும், இப்பிரச்சினையில் அரசு இன்னும் தலையிடவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.

 

No comments:

Post a Comment