வெளிநாட்டு கல்வி நிறுவனங்கள்: இணையதளத்தில் தகவல் வெளியிட உத்தரவு
ஏப்ரல் 19,2013,07:22 IST
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழக மாணவர்கள், வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில் மேற்படிப்பு படிக்கின்றனர். தமிழகத்தில் உள்ள கல்வி நிறுவனங்கள், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களுடன், ஒப்பந்தங்களை செய்துள்ளன. இந்நிலையில், வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் நிலையை, அறிய வேண்டிய கட்டாயம் உள்ளது.சென்னை: வெளிநாட்டு கல்வி நிறுவனங்களின் அங்கீகாரம் குறித்த தகவல்களை, இணையதளத்தில் வெளியிட வேண்டும் என, தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றத்திற்கு, கவர்னர் ரோசய்யா அறிவுறுத்தியுள்ளார்.
குறிப்பிட்ட கல்வி நிறுவனங்கள், அந்த நாட்டு அரசுகளிடம் பெற்றுள்ள அங்கீகாரம் குறித்து, உயர்கல்வி மன்றம் ஆய்வு செய்ய வேண்டும். அதுகுறித்த அறிக்கையை, உயர்கல்வி மன்ற இணையதளத்தில், வெளியிட வேண்டும். மாணவர்களுக்கு வழிகாட்ட, இப்பணியை, செய்ய வேண்டும். இவ்வாறு, கவர்னர் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment