Friday, March 29, 2013

சிவில் சர்விஸ் பிரதான தேர்வு UPSC அறிவிப்பு

சிவில் சர்விஸ் பிரதான தேர்வு UPSC அறிவிப்பு இந்திய குடிமை பணிகளுக்கான (சிவில் சர்விஸ்) பிரதானத்தேர்வு,நவம்பர் அல்லது டிசம்பர் மாதங்களில் நடத்தப்படுமென மத்திய பணியாளர் தேர்வாணையம் அறிவித்துள்ளது .IAS ,IPS ,IRS உள்ளிட்ட சிவில் சர்விஸ் ஆரம்பக்கட்ட தேர்வு (பிரிலிம்ஸ் ) ஏற்கனவே அறிவித்தப்படி மே 26ம் தேதி நடத்தப்படும் .இதில் பங்கேற்க விரும்புவோர் ஆன்லைன் ஏப்ரல் 4ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் .முன்னர் இருந்து வந்த தேர்வு முறைப்படியே தேர்வு நடத்தப்படும் .புதிய மாற்றங்கள் எதுவும் இருக்காது . சிவில் சர்விஸ் பிரதான தேர்வு (மெயின்)வரும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதம் நடத்தப்படும் .அதற்க்கான விண்ணப்ப அறிவிப்பு ,ஆகஸ்ட் அல்லது செப்டம்பர் மாதங்களில் வெளியிடப்படும் .இந்த தேர்வு இந்திய மொழிகள் மற்றும் ஆங்கில மொழி வினாத்தாள் ,மெட்ரிகுலேசன் அல்லது அதற்க்கு சமமான வகுப்பு தரத்தில் இருக்கும் ,இந்த இரு தேர்வுகளும் வெற்றி தகுதிக்காக நடத்தப்படுகின்றன .இவற்றில் பெறப்படும் மதிப்பெண்கள் தரப்பட்டியல் தயாரிப்பில் சேர்க்கப்பட மாட்டது .

விண்ணப்பிக்க கிளிக் செய்யுங்கள்

UPSC EXAMS 2013

No comments:

Post a Comment