Thursday, October 23, 2014

பொது கல்வித்துறையோடு நலப்பள்ளிகளை இணைக்கவேண்டும்

பொது கல்வித்துறையோடு நலப்பள்ளிகளை இணைக்கவேண்டும்
( மாற்றத்தை நோக்கி மேலும் ஓரடி )


                     இந்தியா நாம் வாழ்த்துக்கொண்டிருக்கும் நாடு.இந்தியா சுதந்திரம் அடைந்து 68 ஆண்டுகள் ஆகிவிட்டது.பழையன கழிதலும் புதியன புகுதலும் இன்று வாழ்வியல் கோட்பாடுகள் ஆகிவிட்டன.பூமியின் மூலை முடுக்கெள்ளாம் ஆராய்ந்துவிட்ட மனிதன் செவ்வாய் கிரகத்தினை நேக்கி பயணிக்க தொடங்கிவிட்டான்.கையில் ஒரு ஸ்மார்ட் போன் இருந்தால் போதும் உலகின் எந்த இடத்தினையும் எளிதில் தொடர்புகொள்ளலாம்.
நேரில் சந்திக்க முடியாமல் போனாலும் தவறாமல் FACEBOOK,TWITTER,WHATSAPP என மனிதனின் தகவல் தொடர்பு எளிதாகிவிட்டது.இத்தனை மாறினாலும் நம் நாட்டில் மாறாத ஒன்று "சாதியம்" அதன் தொடர்பான கல்விமுறைகள் கல்வி என்பது எல்லாருக்கும் அடிப்படையான ஒன்று. எந்த ஒரு சமுதாயத்தின் வளர்ச்சிக்கும் கல்விதான் அச்சாணியாக விளங்குகிறது..வருணாசிரமத்தின் அடிப்படையில் சாதிகள் பிரிக்கப்பட்டு இருந்ததால்  கல்வி எல்லாருக்கும் கிடைக்காமல் இருந்தது..இந்தியாவில் ஆங்கிலேய ஆட்சியில் குறிப்பாக தாழ்த்தப்பட்ட மக்களுக்கு கல்வி துளிர் விட ஆரப்பித்தது..அதை தொடர்ந்து அயோதிதாச பண்டிதர் தாழ்த்தப்பட்ட மக்களுக்குக்காக பஞ்சமர் பள்ளிகளை தோற்றுவித்து கல்விகற்றுதந்தார்,அதனை தொடர்ந்து அப்பள்ளிகள் தொழிலாளர் பள்ளிகள்,ஹரிசன பள்ளிகள்,பின்னர் அவைகள் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள் என காலத்திற்கு ஏற்றார்போல அதன் பெயர்களும் மாறின, இதன் வரலாறு இப்படி இருந்தாலும் அதன் அமைப்பு முறையும்,செயல்பாடுகளும் இன்றையகாலக்கட்டத்திற்கு பொறுந்தாத  காலானவதியான கல்விமுறையாக மாறிவிட்டது..


                      இந்தியாவில் அனைத்து தரப்பு மக்களும் கல்வியை அடைவதற்காக உருவாக்கப்பட்டதுதான் சர்வ சிக்சா அபியான் 2002-2003 ஆம் கல்வியாண்டில் உருவாக்கப்பட்டது.அதனை தொடர்ந்து அனைவருக்கும் கட்டாய கல்வி சட்டமும் நடைமுறையில் உள்ளது..கல்வித்துறை அமைப்பு என்பது மத்திய மனித வள மேம்மாட்டு துறை அதன் பின்னணியில் மாநில கல்வித்துறை என இந்திய கல்வி அமைப்பு இயங்கி வருகிறது..தமிழ் நாட்டில் கல்வி துறையில் தொடக்கப்பள்ளிகள் 34871,நடுநிலை பள்ளைகள் 9969,உயர் நிலைப்பள்ளிகள் 5167.மேல் நிலப்பள்ளிகள் 5660 என 55,667 பள்ளிகளை தமிழ்நாடு கல்வித்துறை நடத்தி வருகிறது..தமிழ் நாடு ஆதிதிராவிடர் நலத்துறையின் கீழ் 1359 பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன.மாநில கல்வித்துறை என்பது மாநில கல்வி அமைச்சர்--கல்வித்துறை செயலர்-இயக்குனர்--இணை இயக்குனர்--மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்--மாவட்ட கல்வி அலுவலர்--மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்--உதவி தொடக்கக்கல்வி அலுவலர்--கூடுதல் உதவி தொடக்ககல்வி அலுவலர் என அதன் அமைப்பு முறை உள்ளது...இவர்கள் அனைவரும் கல்வித்துறையில் கீழ் உள்ள பள்ளிகளை கட்டுப்படுத்தி கண்காணிக்கின்றனர்..




கல்விதுறையின் கீழ் பள்ளிகள்:
                                      
                               பள்ளிக்கல்வித்துறையின் கீழ் அரசு/அரசு உதவி மேல் நிலைப்பள்ளிகள்,அரசு/அரசு உதவி உயர் நிலப்பள்ளிகள் செயல்படுகின்றன..தொடக்கக்கல்வித்துறையின் கீழ் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள்,நடுநிலைப்பள்ளிகள்.அரசு உதவி பெறும் தொடக்க/நடுநிலைப்பள்ளிகள் இயங்கிவருகின்றன.நகராட்சியில் இயங்கும் பள்ளிகள் நகராட்சி பள்ளிகளாகவும்
,மாநகராட்சியில் உள்ள பள்ளிகள் மாநகராட்சிப்பள்ளிகளாகவும் செயல்படுகின்றன.உராட்சி ஒன்றிய பள்ளிகளை என்பது ஒரு வட்டாரத்தில் 75 முதல் 90 பள்ளிகள் உள்ளது..இப்பள்ளிகளை வட்டார உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள் எளிதில் பயணித்து பார்வையிடுகின்றனர்.மேலும் இவைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் எளிதில் வேறுப்பள்ளிக்கு மாறுதலாகி செல்கின்றனர்..இதனால் இப்பள்ளிகள் சுமுகமாக செயல்படுகின்றனர்.

அனைவருக்கும் கல்வி:
                             அனவருக்கும் கல்வியானது  மாநில திட்ட இயக்குனர்--மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்(SSA)--வட்டார வள மையம்--வட்டார வள மைய பயிற்றுனர்கள் என  இந்த அமைப்பு இயங்கி வருகிறது...வள மைய பயிற்றுனர்கள் அனைத்து பள்ளிகளினையும் கண்காணிக்கின்றனர்.பள்ளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தருகின்றனர்..மேலும் ஆசிரியர்களுக்கு தேவையான பணி இடைப்பயிற்சிகள் தருகின்றனர்..இப்படி இருக்கையில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள்...

ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள்:
                                   கல்வித்துறை பெறுத்தவரையின் அனைத்து அலுவலர்களும் கல்வித்தொடர்பான பயிற்சிகள் பெற்றவர்கள்..ஆனால் ஆதிதிராவிடர் பள்ளிகளை பொறுத்தவரையில் இதன் அமைப்பு கல்வித்துறைகையின் அமைப்பு தலைக்கீழாக உள்ளது. மாநிலம் முழுவதும் 1359 பள்ளிகள் இத்துறையின் கீழ் செயல்படுகின்றன.இப்பள்ளிகளை மாவட்ட அளவில் கட்டுப்படுத்தும் அலுவலராக மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர்--அவருக்கு கீழ் நான்கு வட்டங்களை சேர்த்து ஒரு தனிவட்டாசியர் உள்ளார்..இப்பள்ளிகள் மாவட்ட அளவில் 10 ல் இருந்து 25 பள்ளிகள் உள்ளன..விழுப்புரம் ,மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் மட்டும் 90 முதல் 115 பள்ளிகள் வரை உள்ளன.மற்ற மாவட்டங்களில் விரல் விட்டு எண்ணும் அளவிற்கு சொற்ப அளவே உள்ளன..தனிவாட்டாசியர்கள் தான் இப்பள்ளிகளை கட்டுப்படுத்தும் அலுவலர்கள் இவர்தான் நான்கு வட்டாரங்களில் உள்ள ஆசிரியர்களுக்கு சம்பளம் மற்றும் பண பயன்களை வழங்க வேண்டும்.அதாவது பள்ளிகள் ஒரு மூலையில் இருக்கும் தனிவட்டாட்சியர் அலுவலகம் பள்ளியிலிருந்து 80 கி.மி தொலைவில் இருக்கும்..ஆதிதிராவிடர் நலத்துறை அதிகாரிகள் முழுவதும் நிர்வாக பயிற்சி பெற்ற அலுவலர்களே தவிர கல்வி தொடர்பான எந்த பயிற்சியும் அவர்கள் பெறவில்லை..இவர்கள் எப்படி அசிரியர்களுக்கு ஆலோசனைகள் வழங்கி               மாணவர்களுக்கு தரமான கல்வியை வழங்க முடியும் என்பது இன்றளவும் கேள்விக்குறியாகவே உள்ளது..அவர்கள் வருடம் முழுவதும் வருவாய்த்துறை தொடர்புடைய திட்டங்களை செயல்படுத்தவே நேரங்கள் ஓடிவிடுகின்றன..


                 இப்பள்ளிகளில் மாணவர்களின் கல்வித்தரத்தை எப்படி ஆசிரியர்களுடன் இணந்து உயர்த்தமுடியும்..கடந்த 2012 ஆம் ஆண்டு சமக்கல்வி இயக்கம் என்ற அமைப்பு மாநிலம் முழுவதும் நடத்திய ஆய்வில் இப்பள்ளிகளில் கல்வித்தரம் 30% சதவிகிதம் கூட இல்லை எனவும்,பல பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாகவே உள்ளது என்றும் ஆய்வில் கூறுகிறது...



ஆசிரியர்களின் நிலை:

                        இத்துறையில் பணியாற்றும் ஆசிரியர்கள்  கல்வித்துறையில் பணியாற்றும் ஆசிரியகள் போல எளிதில் வேறு பள்ளிக்கு மாறுதலாக முடியாது.மாவட்ட அளவில் குறைவான பள்ளிகளே உள்ளதால் இவர்கள் ஓரே பள்ளியில் 10 ஆண்டுமுதல் 15 ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்..இவர்கள் கல்வித்துறைப்பள்ளிகளுக்கு மாறுதலில் செல்ல முடியாது..பதவி உயர்வு வாய்ப்பு  குறைவு. என மன உளச்சளோடு பணி செய்கின்றனர்.மேலும் இவர்கள் விடுதியிலும் காப்பளராகவும்,பெண் ஆசிரியர்கள் காப்பாளினியாகவும் பணி செய்யலாம் என்ற நிலை உள்ளதால் பல ஆசிரியர்கள் விடுதியில் பணியாற்ற சென்று விடுகின்றனர்.கல்வித்துறை ஆசிரியர்கள் முழுவதும் பள்ளியிலே பணியாற்றுவதால் அவர்கள் சிறப்பாக செயல்பட முடிகிறது..ஆனால் இத்துறை ஆசிரியர்கள் சில ஆண்டுகள் பள்ளியிலும் பல ஆண்டுகள் விடுதியிலும் பணி செய்வதால்,.கல்விகற்பிக்கும் முறையில் பெரிய இடைவெளி காணப்படுகிறது..உதரணமாக CCE என்ற முறை 2013 ல் நடைமுறையில் வந்ததது.அந்த காலக்கட்டத்தில் ஆசிரியர்களுக்கு இந்தமுறையில் எப்படி பாடம் நடத்த வேண்டும் எனவும் பயிற்சிகள் அளிக்கப்பட்டது..இந்தபயிற்சியினை பெறாத ஆசிரியர் 2015 ஆண்டில் பள்ளிக்கு ஆசிரியராக விடுதியில் இருந்து மாறுதலாகி வருகிறார்..அவர் பள்ளியில் எந்த முறையில் கற்பிப்பார்..அவர் பயிற்சி வழங்கிய காலக்கட்டதில் விடுதியில் பணியாற்றினார்.அவர் அந்த பயிற்சியினை முழுமையாக அறிந்திருக்க முடியாது.அவர் எப்படி கற்பிக்க முடியும்..இது போன்றுதான் பல ஆண்டுகள் நடந்து வருகிறது..உண்மையாக பார்த்தால் இப்பள்ளிகளில் பயிலும் மாணவர்கள்தான் பாதிக்கப்படுகின்றனர்..





மக்களின் எண்ணம்:

                  அரசு இப்பள்ளிகளை ஆதிதிராவிடர்களின் நலனுக்காவே துவங்கியதென்றால் தமிழ் நாட்டில் 12620 கிராமங்கள் உள்ளன..அந்தனை கிராமங்களிலும் ஆதிதிராவிடர்கள் வசிக்கின்றனர்.கிராமங்கள் தோறும் நலப்பள்ளிகளை துவங்கியிருக்க வேண்டும்.1359 கிராமங்களில் மட்டும் தான் ஆதிதிராவிட பள்ளிகள் உள்ளன,மற்ற கிராமங்களில் கல்வித்துறைப்பள்ளிகள் தான் உள்ளது அப்பள்ளிகளில் படிக்கும் 70% மாணவர்கள் ஆதிதிராவிட மாணவர்களே எனபது தெளிவாகிறது .




                .ஒரு காலக்கட்டத்தில் கல்வி கற்பிப்பதில் தீண்டாமை இருந்திருக்கலாம் ஆனால் தற்போது அந்த நிலை மாறி விட்டது. ஆசிரியர்களுக்கு தகுதி தேர்வு என்ற நிலை வந்த பிறகு ஆசிரியர் வேலை கிடப்பதே குதிரைக்கொம்பாக மாறி விட்ட நிலையில் நான் ஆசிரியரான பின்பு ஒரு குறிப்பிட்ட பிரிவு மாணவர்களுக்குதான் கல்வி கற்பிப்பேன் என் யாரும் கூற முடியாது..

                         இதனையெல்லாம் அறிந்த சில அரசியல் கட்சிகள் இந்த 1359 பள்ளிகளை கல்வித்துறையோடு இணைத்தால்  "கப்பல் கவிழ்ந்து விடுவதுப்போல" ஆதிதிராவிடர் நலப்பள்ளிகளில் அபார வளர்ச்சி சரிந்துவிடுவதுபோல எதிர்ப்பு தெறிவிகின்றனர்..விடுதிகளில் கொள்ளையடிக்கும் சில பிர்போக்கு சக்திகள் தங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படும் என பயந்து எழிலகத்தில் உள்ள ஆதிதிராவிடர் அலுவலகத்தினை முற்றுகை போராட்டம் நடத்திகின்றனர் .விடுதியில் பணியாற்ற விரும்புவர்கள் கடைசிவரை விடுதியிலே இருங்கள். விடுதிகளை ஆத்திராவிடர் நலத்துறையே வைத்துக்கொள்ளட்டும் பள்ளியை விட்டு விடுங்கள்.. ..உண்மையிலே ஆதிதிராவிடர்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென சில அரசியல் கட்சிகள்  நினைத்தால் அவர்கள் நலப்பள்ளிகளை கல்வித்துறையோடு இணைத்துவிட போராட வேண்டும்."அண்ணன் எப்ப சாவான் திண்ணை எப்ப கலியாகும்" என்பது போல நினைத்தால் எப்படி சமத்துவம் பிறக்கும் சம உரிமைக்காக போராடுகிறார்கள்,சாதி ஒழிய வேண்டுமென போராடுகிறார்கள்,சாதி கலப்பு திருமணமனம் வேண்டுமென போராடுகிறார்கள்.ஆனால் ஆதிதிராவிடர் பள்ளிகள் ஒரு பொதுவான கல்வி முறையொடு இணைந்தால் அதற்கு மட்டும் எதிர்ப்பு இவர்களின் பிற்போக்கு தனம் எப்படி சமத்துவத்தை பெற்று தரும்.?.

                   .கல்விதுறையுடன் இணைப்பது பெரிய ஒரு காரியமில்லை..கடந்த ஆண்டு ஆதிதிராவிடர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களின் அனைத்து பணிப்பதிவேடுகளும் Office Autumation System( E-SERVICE REGISTER) என்ற முறையில் கல்வித்துறை ஆசிரியர்களோடு இணத்து  இணையதளத்தில் கல்வித்துறை பதிவேற்றி உள்ளது..கல்விதுறையில் இவ்வளவு பெரிய கட்டமைப்பு இருக்கும் போது பள்ளிக்கும் ,கல்விக்கும் எந்த தொடர்பும் இல்லாத ஒரு வருவாய் துறை எப்படி இத்துறை பள்ளிகளில்  பயிலும் மாணவர்களுக்கு சிறப்பான கல்வியை தர முடியும்..இனியாவது அரசாங்கம் காலம் தாழ்த்தாமல் இந்த கல்வியாண்டிலேயே பிற்போக்கு சக்திகளை பற்றி யோசிக்காமல் "இந்த பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் நலனில் அக்கரையோடு உடனடியாக கல்வித்துறையுடன் இணத்து"இப்பள்ளிகள் அனைத்தும் சாதிகளின் பெயர் இல்லாமல்"அரசு தொடக்க/நடுநிலை/உயர்நிலை/மேல்நிலை பள்ளிகள் என பெயர் மாற்ற செய்ய வேண்டும்.

மாற்றத்தை நோக்கி மேலும் ஓரடி........

கட்டுரை: க.தர்மராஜ்
தொடர்புக்குE-mail: kalvivaram@gmail.com

WEB:kalvivaram.blogspot.com

4 comments:

  1. Thanks for your information.
    The people who do not have knowledge in administration of education department. how they would run the education department in right.way. The future of student is really questionable.

    ReplyDelete